search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shanghai Motor Show 2019"

    ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்விட் இ.வி. காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #KwidEV



    ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் இ.வி. காரை ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய ரெனால்ட் இ.வி. அந்நிறுவனத்தின் க்விட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. க்விட் இ.வி. கார் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் அறிமுகமாகிறது.

    ரெனால்ட் க்விட் இ.வி. முன்னதாக கான்செப்ட் வடிவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்ப்டடது. இதன் தயாரிப்பு முந்தைய வெர்ஷன் முன்னதாக வெளியிடப்பட்டது. இதில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இதே போன்ற வடிவமைப்பு முன்னதாக டாடா ஹேரியர் காரிலும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹூன்டாய் வென்யூ காரிலும் காணப்பட்டது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய கிரில், சற்று வித்தியாசமான முன்புறம், பின்புறம் புதிய பம்ப்பர்கள் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.



    புதிய க்விட் இ.வி. காரின் தொழில்நுட்ப விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. எனினும், இதன் பவர்டிரெயின் ரெனால்ட் மர்ரும் டாங்ஃபெங் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இருநிறுவனங்களும் இதற்கான பணிகளை கடந்த ஆண்டு துவங்கின. இதற்கென இ.ஜி.டி. நியூ எனர்ஜி ஆட்டோமோட்டிவ் எனும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றன.

    க்விட் எலெக்ட்ரிக் காரின் விவரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் இதில் வழங்கப்படும் மோட்டார் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் காரை பயனர்கள் பொதுவெளியில் கிடைக்கும் சார்ஜிங் தளங்களிலும் சார்ஜ் செய்யலாம் என ரெனால்ட் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
    ×