என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Shanipayerchi"
- 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா.
- சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது.
காரைக்கால்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையின் சிறப்பு அனுமதி பெற்று அன்னதானம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் அன்னதானம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
பக்தர்கள் இ-சேவை, இ-நவகிரக சாந்தி, இ-காணிக்கை சேவைகளை www.thirunallarutemple. என்ற ஆன்லைன் மூலம் பெறலாம். ரூ.1000, ரூ.600 ரூ.300 என்ற கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500-ம், சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300-ம், சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300-ம் சிறப்பு ஒரு மண்டல (48நாட்கள்) அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ரூ.2400-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.