search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shanthnu"

    • மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது.
    • 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது.

    குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியை நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி 100 கோடி வசூலைத் தாண்டியது.

    படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்தது.

    நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.

    மேலும் ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.

    இந்நிலையில், மகாராஜா படத்தில் நடிக்க முதலில் சாந்தனுவை அணுகியதாக அப்பட இயக்குநர் நித்திலன் தெரிவித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

    இதனையடுத்து, மகாராஜா படத்தை சாந்தனு தவறவிட பாக்யராஜ் தான் காரணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

    இந்நிலையில் இது குறித்து நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மகாராஜா போல் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததிற்கு இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி. என்னை முதலில் இந்த கதைக்கு தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், இந்த படத்தை நான் மிஸ் செய்ததிற்கு என் அப்பாவோ இல்லை நானோ காரணம் இல்லை. அப்பாவிற்கு இயக்குநர் என்னிடம் வந்து கதை சொன்னது தெரியாது. அந்த சமயத்தில் தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அதனால் தான் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது" என்று தெரிவித்துள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
    இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    முருங்கைக்காய் சிப்ஸ்


    இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 
    தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் பாக்யராஜ், தனது மகனுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
    தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    பாக்யராஜ்

    இவரது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், பாக்யராஜ் புதிய போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் சாந்தனுக்கு டஃப் கொடுக்கும் பாக்யராஜ் என்று மீம்ஸ் கிரியேட் செய்து பகிர்ந்து இருக்கிறார்கள்.

    பாக்யராஜ்
    மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கும் இராவண கோட்டம் படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். #Shanthnu #RaavanaKottam
    மதயானை கூட்டம் படம் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். கதிர், ஓவியா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

    தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்று வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்கவுள்ளார். கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க உள்ளார்.



    முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் கதை விவகாரத்தில் நடிகர் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு மன்னிப்பு கேட்டுள்ளார். #Sarkar #Shanthnu
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்கார். வரும் 6-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் கதைத் திருட்டு புகார் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.

    நேற்று ஐகோர்ட்டில் இந்த விவகாரம் சுமூகமாக முடிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவரான இயக்குனர் கே.பாக்யராஜ் சில பேட்டிகள் மற்றும் அறிக்கைகளில் சர்கார் படத்தின் கதையை கூறி விளக்கியிருந்தார்.

    படம் வெளியாகும் முன்னர் இப்படியாக கதையைக் கூறியதால் பலர் அதிருப்தியடைந்தனர். முக்கியமாக விஜய் ரசிகர்கள் பாக்யராஜை கடுமையாக விமர்சித்தனர்.



    இந்நிலையில் பாக்யராஜின் மகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் இல்லை. என்றைக்கும் விஜய் அண்ணா, எனக்கு விஜய் அண்ணா தான்.

    தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டதால் கதையை அப்பா கூறினார். அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தீபாவளியை கொண்டாடுவோம். சர்காரை கொண்டாடுவோம்.” என்று கூறியுள்ளார். சாந்தனு விஜய்யின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×