என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sharukh khan"

    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் நேற்று வெளியான படம் 'பதான்'.
    • இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

     

    பதான்

    பதான்

    இப்படத்தில் இடம்பெற்ற 'அழையா மழை' பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்தன. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.


    பதான்

    பதான்

    இந்நிலையில் பதான் படம் வெளியான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த திரைப்படம் ‘பதான்’.
    • இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.402 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    பதான்

    'பதான்' திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.402 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மும்பையின் மன்னாட் பகுதியில் உள்ள ஷாருக்கானின் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் நேற்று மாலை குவிந்தனர்.


    ஷாருக்கான்

    அப்போது, ஷாருக்கான் வீட்டின் பால்கனியிலிருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து பறக்கும் முத்தத்தை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோவை இவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த திரைப்படம் ‘பதான்’.
    • இப்படம் கடந்த 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.


    பதான் போஸ்டர்

    இதையடுத்து 'பதான்' திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.402 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், இப்படம் இந்தியாவில் ரூ. 335 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 208 கோடியும் வசூலித்து மொத்தம் ரூ.543 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘பதான்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.


    பதான் போஸ்டர்

    பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'பதான்' படத்தின் வசூல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ.865 கோடியை வசூலித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து 'பதான்' படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.


    • சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘பதான்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.


    பதான் போஸ்டர்

    பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'பதான்' படத்தின் வசூல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ.901 கோடியை வசூலித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து 'பதான்' படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.



    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    ஜவான்

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் தற்போது 'லியோ' பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.


    அல்லு அர்ஜுன்

    இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இயக்குனர் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தற்போது அல்லு அர்ஜுனிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    நயன்தாரா வீட்டிற்கு சென்ற ஷாருக்கான்

    இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்த நடிகர் ஷாருக்கான், நயன்தாராவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதாவது, நயன்தாராவிற்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை காணச் சென்ற ஷாருக்கான், வீட்டில் இருந்து வெளியே வந்ததும் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    • அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
    • ஷாருக்கான் ஜவான் படத்திற்காக அட்லீ மீது கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


    ஜவான்

    ஜவான்


    பான் இந்தியா படமாக உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விஜய் தற்போது லியோ பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் அல்லு அர்ஜுனை நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


    அட்லீ - ஷாருக்கான்

    அட்லீ - ஷாருக்கான்


    இந்நிலையில் ஜாவன் படத்திற்காக அட்லீ தான் படத்திற்கு நினைத்ததை விட அதிகமாக செலவு செய்ததால் ஷாருக்கான் அவர் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கும் அட்லீ சென்னை வந்து தனது மன வேதனையை தெரிவித்ததாக சில செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் ஜவான் இந்த ஆண்டு ஜூன் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜவான் வெளியீடு தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது. 

    • ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.
    • தற்போது ஷாருக்கான் சமூக வலைத்தளத்தின் வாயிலாக உரையாடி வருகிறார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், சமீபத்தில் வெளியான பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படைத்தது. ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஷாருக்கான்

    ஷாருக்கான்

    இந்நிலையில் ஷாருக்கான் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு செல்ல பிராணிகள் பிடிக்குமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், என்னிடம் நிறைய செல்ல பிராணிகள் உள்ளன. ஆனால் அதனுடைய புகைப்படங்களை நான் சமூக வலைத்தளங்களில் பதிவிட விரும்பவில்லை. அவை என்னை விட பிரபலமாவதை நான் விரும்பவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

    • ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.
    • தற்போது ஷாருக்கான் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், சமீபத்தில் வெளியான பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படைத்தது. ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஷாருக்கான் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஓய்வுபெற்ற பிறகு உங்களுக்கு அடுத்த பெரிய நட்சத்திரம் யார்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஷாருக்கான், "நான் ஒருபோதும் நடிப்பிலிருந்து ஓய்வு பெற மாட்டேன். ஒருவேளை என்னை வீழ்த்த நினைத்தால், நான் முன்பைவிடவும் அதிரடியாக வருவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பதான்’.
    • இப்படம் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.


    பதான் போஸ்டர்

    பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'பதான்' படத்தின் வசூல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து 'பதான்' படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.



    • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பதான்’.
    • இப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.


    பதான்

    பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், 'பதான்' படம் உலக அளவில் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில், இப்படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்துள்ளது.


    பதான்

    அதாவது, அமீர்கான் நடித்த 'டங்கல்' திரைப்படம் கடந்த 2016 -ஆம் ஆண்டு வெளியாகி ரூ.1968 கோடியும் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி ரூ.1810 கோடி வசூலையும் அதேபோல் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கடந்த 2022- ஆம் ஆண்டு வெளியாகி ரூ.1200 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.


    பதான்

    மேலும் யஷ் நடித்த 'கேஜிஎப் 2'திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1250 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் தற்போது 'பதான்' திரைப்படம் ஐந்தாவதாக இணைந்துள்ளது. இதையடுத்து அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் இனி அதிகம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    ×