என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shashank Singh"

    • ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பந்து கூட சந்திக்கவில்லை.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 243 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் முதலாவதாக பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது அதிரடியாக விளையாடி அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கடைசியில் ஒரு ஓவர் மீதம் இருந்தது. ஷ்ரேயாஸ் சதம் அடிக்க அதிக வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி ஓவரை முழுவதும் ஷஷாங்க் சிங் விளையாடி ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு பந்து கூட கொடுக்காமல் 5 பவுண்டர்கள் விளாசினார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி வெளியில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    யாராக இருந்தாலும் எதிரில் இருப்பவர் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தால் ஒரு ரன் எடுத்து கொடுத்து அவரை சதம் அடிக்க முயற்சி செய்யும் வீரர்கள் மத்தியில் இவர் செய்த காரியம் அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்ட்ரைக் மாற்றதது குறித்து ஷஷாங்க் சிங் வெளிப்படையாக பேசியுள்ளார்.

    அதில், உங்களுக்கு ஸ்ட்ரைக் வேண்டுமா என ஸ்ரேயஸிடம் நான் கேட்பதற்கு முன்பாகவே "எனது சதத்தை பற்றி நீ கவலைப்படாதே. எல்லா பந்துகளையும் அடித்து விளையாடு. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இது ஒரு அணியை சார்ந்த விளையாட்டு என ஷ்ரேயஸ் கூறிவிட்டார். ஆனால் அதுபோன்ற தருணங்களில் சுயநலமின்றி செயல்படுவது மிகவும் கடினமான ஒன்று. ஐபிஎல்-ல் சதம் விளாசுவது எளிதான விஷயம் அல்ல என ஷஷாங்க் கூறினார்.

    • பஞ்சாப் அணி வாங்கியதை புரிந்து கொண்ட ஏலதாரர் ஆச்சரியமுற்றார்.
    • பஞ்சாப் அணி 32 வயதான சஷான்க் சிங்-ஐ ஏலத்தில் எடுத்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களான பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இந்திய அணியில் இடம்பெறாத சஷான்க் சிங்-ஐ வெற்றகரமாக ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தில் எடுத்த பிறகு இருவரும் குழப்பமுற்ற நிலையில் காணப்பட்டனர்.

    நேற்று (டிசம்பர் 19) நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் அணி சஷான்க் சிங்-ஐ வாங்கும் திட்டத்தில் இல்லாதது தெரியவந்துள்ளது. அணியில் வாங்க நினைக்காத வீரர் ஒருவரை பஞ்சாப் அணி வாங்கியதை புரிந்து கொண்ட ஏலதாரர் மல்லிகா சாகர் ஆச்சரியமுற்றார்.

     


    சஷான்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள் இருந்த நிலையில், குழப்பத்தில் இருந்த பஞ்சாப் அணி 19 வயதான சஷான்க் சிங் என்ற வீரரை வாங்குவதற்கு பதிலாக 32 வயதான சஷான்க் சிங்-ஐ ஏலத்தில் எடுத்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக துவங்கியது. இந்த நிலையில், சஷான்க் சிங்-ஐ வாங்கியது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் அக்கவுண்ட்-இல் விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பான பதிவில், "சஷான்க் சிங்-ஐ வாங்க வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் இருந்தது. பட்டியலில் ஒரே பெயருடன் இரண்டு வீரர்கள் இருந்ததே குழப்பத்திற்கு காரணமாகி விட்டது. அவரை அணியில் எடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வெற்றிக்கு அவர் பங்களிப்பதை பார்க்க விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளது. 



    • அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.
    • குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் பவர்பிளேயில் சிறப்பாக ரன்களை சேர்த்தனர்.

    பவர் பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 22 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 35 ரன்னிலும் ராசா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ஜிதேஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்தது. ரஷித்கான் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசிய ஜிதேஷ் சர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.

    அடுத்து வந்த அசுதோஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி பஞ்சாப் வெற்றிக்கு போராடினர். இறுதியில் 12 பந்துக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். 19-வது ஓவரில் இந்த ஜோடி 18 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தர்ஷன் நல்கண்டே வீசினார். முதல் பந்தில் அசுதோஷ் சர்மா கேட்ச் ஆனார். அடுத்த பந்தை அகல பந்தாக வீசினார். 3-வது பந்தில் ஹர்ப்ரீத் 1 ரன் எடுத்தார்.

    இதனால் கடைசி 3 பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஷஷாங்க் சிங் பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அடுத்த பந்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.

    இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஐபிஎல் ஏலத்தில் இது பெயர் கொண்ட மற்றொரு வீரரை ஏலம் எடுக்க இருந்ததாக பஞ்சாப் அணி தெரிவித்தது.
    • பின்னர் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் இணைத்துக் கொண்டது.

    குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

    அந்த அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 73 ரன்கள்தான் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விடும் என எல்லோரும் நினைத்தனர். அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் அரைசதம் விளாசியதுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    இவரது ஆட்டத்தால் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. 61 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த சீசனில் மிகப்பெரிய சேஸிங் இதுவாகும்.

    ஐபிஎல் ஏலத்தின்போது நாங்கள் இதே பெயரை கொண்ட மற்றொரு வீரரை ஏலம் எடுக்க இருந்தோம். ஆனால் இந்த ஷஷாங்க் சிங்கை அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய்க்கு எடுத்து விட்டோம் என ப்ரீத்தி ஜிந்தா ஏலம் விடுபவரிடம் தெரிவித்தார். ஆனால் ஒரு வீரர் எடுக்கப்பட்டதாக அறிவித்த பின்னர், அவரை திரும்ப பெற முடியாது என ஏலம் விடுபவர் தெரிவித்தார்.

    இதனால் ஷஷாங்க் சிங் பஞ்சாப் அணியில் தவறுதலாக எடுக்கப்பட்டு இடம் பிடித்தார். ஆனால் நேற்று கதாநாயகனாக மாறி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். இனிமேல் வரும் போட்டிகளில் ஆடும் லெவன் அணியில் இவர் பெயர் தவறாமல் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

    • மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
    • அவருக்கு என் பாராட்டும் மரியாதையும் உண்டு.


    குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

    அந்த அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 73 ரன்கள்தான் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விடும் என எல்லோரும் நினைத்தனர். அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் அரைசதம் விளாசியதுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    இந்நிலையில் அவருக்கும் என் பாராட்டும் மரியாதையும் உண்டு என பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஏலத்தில் எங்களைப் பற்றி கடந்த காலத்தில் கூறப்பட்ட விஷயங்களைப் பற்றி இறுதியாகப் பேச இன்று சரியான நாள் போல் தெரிகிறது. இதேபோன்ற சூழ்நிலைகளில் நிறைய பேர் நம்பிக்கையை இழந்திருப்பார்கள். அழுத்தத்தின் கீழ் வளைந்திருப்பார்கள் அல்லது ஊக்கம் இழந்திருப்பார்கள். ஆனால் ஷஷாங்க் அப்படி இல்லை. அவர் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவர்.

    தன்னுடைய திறமையால் மட்டுமல்ல, மிகச்சிறப்பான நேர்மறை எண்ணத்தால். ஏலத்தின்போது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு, தக்க நேரத்தில் தன்னிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை அள்ளினார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அவருக்கு என் பாராட்டும் மரியாதையும் உண்டு. வாழ்க்கை ஒரு வித்தியாசமான திருப்பத்தை எடுக்கும் போது மற்றும் ஸ்கிரிப்ட் படி விளையாடாதபோது அவர் உங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.

    ஏனென்றால் மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். எனவே ஷஷாங்க் போல் உங்களை நம்புவதை நிறுத்தாதீர்கள் & வாழ்க்கையின் விளையாட்டில் நீங்கள் ஆட்ட நாயகனாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்

    இவ்வாறு ப்ரீத்தி ஜிந்தா கூறினார்.

    • பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப் முதலிடத்தில் உள்ளார்.
    • 10-வது இடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டரான ரோட்ரி உள்ளார்.

    2024 முடிவடைந்து புதிய ஆண்டு (2025) விரைவில் பிறக்க உள்ள நிலையில், 2024-ம் ஆண்டு உலகில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் 2 இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.

    இந்த பட்டியலில் முதல் வீரராக பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனையான இமானே கெலிஃப் என்பவர் உள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார். 

    2-வது இடத்தில் முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் உள்ளார். இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு திரும்பினார். ஆனால் அந்த போட்டியில் தோல்வியை தழுவினார். போட்டிக்கு முன்னர் எதிராளியை கண்ணத்தில் அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    3-வது இடத்தில் ஸ்பெயின் அணியின் இளம் வீரர் லமின் யமால் உள்ளார். 17 வயதில் கோல் அடித்த வீரர் என்ற பீலேவின் சாதனையை யமால் முறியடித்தார். இவர் கோல் அடித்து கொண்டாடிய போது ரசிகர்களால் இனவெறி தாக்குதல் நடத்தினர். யுரோ கோப்பையை வென்ற அணியில் இவர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    4-வது இடத்தில் அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் உள்ளார். இவர் பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் 'புளோர்' பிரிவு பைனலில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 

    இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் சிமோன் பைல்ஸ் வென்ற 11-வது பதக்கம் இதுவாகும். இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார்.

    5-வது இடத்தில் மைக்கெல் டைசன் உடன் குத்துச்சண்டையில் மோதிய ஜேக் பால் (27) உள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் ஆவார். இவர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார்.

    இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார். மைக் டைசனுக்கு எதிரான போட்டியில் ஜேக்பால் 79-73 என்ற புள்ளிக் கணக்கில் டைசனை வீழ்த்தினார்.

    6-வது இடத்தில் ஸ்பெயினின் கால்பந்து வீரர் நிகோ வில்லியம்ஸ் உள்ளார். இவர் லமைன் யமலுடன் இணைந்து, யூரோ 2024-ல் சிறப்பான ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்தார்.

    ஜெர்மனியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றபோது, இறுதிப் போட்டியில் ஸ்பெயினுக்கு வில்லியம்ஸ் முக்கியமான கோல்களை அடித்தார்.

    7-வது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உள்ளார். ரோகித் சர்மா , விராட் கோலி மற்றும் எம்எஸ் டோனி போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இருந்த போதிலும் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரராக ஹர்திக் பாண்டியா உள்ளார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மாற்றியதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோது நட்சத்திர ஆல்ரவுண்டராக கவனத்தை ஈர்த்தார்.

    8-வது இடத்தில் அமெரிக்க கோல்ப் வீரர் ஸ்காட்டி ஷெஃப்லர் உள்ளார். இவர் 2024-ம் ஆண்டு உலகின் அதிக ஊதியம் பெறும் கோல்ஃப் வீரர்களில் முதலிடத்தில் இருந்தார்.பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கோல்ஃப் தனிநபர் ஸ்ட்ரோக் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார்.

     9-வது இடத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ஷஷாங்க் சிங் உள்ளார். இவர் 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த நட்சத்திரமாக உருவெடுத்தார். ஆரம்பத்தில் பஞ்சாப் கிங்ஸ் பெயர் குழப்பத்தில் அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சகர்களை தனது பேட்டிங்கின் மூலம் வாயடைக்க வைத்தார்.


    அவரது பஞ்சாப் அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராக மாற்றியது. ஐபிஎல்லில் அவர் முக்கியத்துவம் பெறுவது அந்த ஆண்டின் மிகவும் ஆச்சரியமான கதைகளில் ஒன்றாகும்.

    10-வது இடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டரான ரோட்ரி உள்ளார். 2024-ம் ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை வென்றார், இது கால்பந்து உலகில் விவாதத்தையும் சர்ச்சையையும் தூண்டியது. ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர் இந்த மரியாதைக்கு தகுதியானவர் என்று பலர் கூறினர். இதனால் ரியல் மாட்ரிட் பலோன் டி'ஓர் விழாவை புறக்கணித்தது.


    சர்ச்சைகள் இருந்தபோதிலும், ரோட்ரியின் அருமையான விளையாட்டு , இந்த சீசனில் அவர் செயல்ப்பட்ட விதம் அவரை பலோன் டி'ஓர் வெற்றியாளராக அவரது சாதனை கவனத்தை ஈர்த்தது.

    • ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி பிசிசிஐ கவுரவித்து வருகிறது.
    • உள்ளூர் தொடர்கள் மற்றும் ரஞ்சி கோப்பையில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டருக்கு லாலா அமர்நாத் விருது வழங்கப்படுகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான லாலா அமர்நாத் விருது ஷசாங்க் சிங் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

    உள்ளூர் தொடர்கள் மற்றும் ரஞ்சி கோப்பையில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டருக்கு லாலா அமர்நாத் விருது வழங்கப்படுகிறது.

    அதன்படி உள்நாட்டு தொடர்களில் விளையாடிய சிறந்த ஆல் ரவுண்டருக்கான 'லாலா அமர்நாத் விருது' ஷசாங்க் சிங்கிற்கும், ரஞ்சி கோப்பையின் சிற்ந்த ஆல் ரவுண்டருக்கான 'லாலா அமர்நாத் விருது' தனுஷ் கோட்டியானுக்கும் வழங்கப்படுகிறது.

    ×