search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shaun Antony"

    • தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.
    • வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை.

    திருவனந்தபுரம்:

    சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மலையாள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் விழுந்த வாலிபரை நண்பர்கள் சேர்ந்து காப்பாற்றும் கதையை கொண்ட அந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    கேரள மாநிலம் மட்டு மின்றி தமிழகத்திலும் பல திரையரங்குகளில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதன் காரணமாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.220 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இந்நிலையில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது. அதனடிப்படையில் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாகி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    மேலும் பண மோசடிக்காக டிக்கெட் வசூல் எண்ணிக்கையை உயர்த்தியிருப்பதாகவும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்பட குழுவினர் மீது புகார் எழுந்திருக்கிறது. இதேபோன்று மேலும் சில திரைப்படங்களை எடுத்தவர்களும் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அமலாக்கத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆகவே கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் எடுக்கப்பட்ட அனைத்து வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத் துறை தயாராகி வருகிறது. 2024-ம் ஆண்டில் கடந்த 5 மாதங்களில் மலையாள திரையுலகம் ரூ720 கோடி வசூல் செய்திருக்கிறது. அதிலும் 'மஞ்சுமெல் பாய்ஸ்', 'ஆடுஜீவிதம்', 'ஆவேசம்', 'பிரேமலு' ஆகிய 4 மலையாள திரைப்படங்களின் வசூல் ரூ100 கோடியை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மோசடி புகார் கூறப்பட்டுள்ள 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளை முடக்க அமலாக்கத் துறை இயக்குனரகம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×