search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sherin"

    • துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின்.
    • ஷெரின் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

    செல்வராகவன் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின் சிபிராஜுடன் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் மற்றும் ஜெர்ரி இயக்கிய விசில் போன்ற படங்களில் நடித்திருந்தார். விசில் படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடல் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படத்தில் இடம்பெற்ற ரங்கு ரங்கம்மா என்ற பாடலில் இவர் ஆடிய கவர்ச்சி நடனத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் குவிந்திருந்தது.


    இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் அதன்பின் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார்.


    சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டு அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி வருவார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர், பிகினி புகைப்படத்தை பதிவிட வேண்டும் என்று ஷெரினிடம் கேட்டிருந்தார்.


    அந்த ரசிகரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒரு வீடியோவை ஷெரின் வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த வீடியோவை பார்த்த ரசிகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் அவர் பிகினி உடை அணியவில்லை. வழக்கமான ஆடையில் பிகினி உடை போன்று அச்சிடப்பட்டிருந்தது.


    தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் கமென்ட்டுகளை சரமாரியாக தெரிக்கவிட்டுள்ளனர். குறிப்பாக பிகினி உடையில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்களுக்கு இது சரியான பதிலடி என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

    ×