என் மலர்
முகப்பு » shia waqf board chief
நீங்கள் தேடியது "shia waqf board chief"
பசு மாமிசத்தை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என உ.பி.யின் ஷியா வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி தெரிவித்துள்ளார். #Cow
லக்னோ:
ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பசுக்களை கடத்தியதாக கூறி ஒருவர் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.
இதற்கு விளக்கம் அளித்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பசுக் காவலர்கள் என்ற போர்வையில் செயல்படுபவர்கள்
சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. மீறி செயல்படுபவர்கள் மீது கட்ட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், முஸ்லிம்கள் பசு மாமிசத்தை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என உ.பி.யின் ஷியா வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசு மாமிசத்தை முஸ்லிம்கள் நிச்சயம் நிறுத்த வேண்டும். மேலும், பசுக்களை கொல்வதையும் அவர்கள் விட்டுவிட வேண்டும்.
பசு கொலை தடுத்து நிறுத்தப்பட்டால் கும்பலால் அடித்து கொலை செய்யப்படும் நிகழ்வுகள் தானாகவே நின்று விடும்.
இந்த விஷயம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆல்வார் சம்பவத்தின் சோகங்கள் மறையாத நிலையில், இது போன்ற சர்ச்சை கருத்துக்களால் பரபரப்பு ஏற்படுகிறது என மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பசு இறைச்சி தின்பதை நிறுத்தினால் குற்றங்கள் குறையலாம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Cow
×
X