search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivamogga"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பைடாகி பகுதியில் இன்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை அதிகாலை புனே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு டிரக் வாகனம்  மீது பயணிகள் சென்ற மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெலகாவி மாவட்டத்தில் சாவாடத்தி பகுதியில் உள்ள எல்லம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் பஸ் ஓட்டும்போது டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது
    • பிரகார் தனது ரன் குவிப்பில் 46 ஃபோர்களும், 3 சிக்ஸர்களும் அடித்தார்

    கர்நாடகா மாநில ஷிவமோகா நகரில், கேஎஸ்சிஏ நவுலே மைதானத்தில் (KSCA Navule Stadium) 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    ஆண்டுதோறும் நடைபெறும் கூச் பெஹர் கோப்பை (Cooch Behar Trophy) எனும் இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா அணியும் மும்பை அணியும் மோதின.

    கர்நாடகாவின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், இளம் பேட்டிங் வீரர், பிரகார் சதுர்வேதி (Prakhar Chaturvedi) சிறப்பாக விளையாடினார்.

    தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கிய பிரகார், 404 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் புதிய சாதனையை படைத்தார்.

    பிரகார் 638 பந்துகளில் தனது அதிரடி பேட்டிங்கால் 46 ஃபோர்கள், 3 சிக்ஸர்கள் அடித்தார்.

    இதன் மூலம், ஒரு போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 24 வருடங்களுக்கு முன் புரிந்திருந்த சாதனையான 358 ரன்களை கடந்து பிரகார் சதுர்வேதி புது சாதனையை புரிந்தார்.


    தனது சிறப்பான ஆட்டத்தினால் ரஞ்சி கோப்பையில் இடம் பெறும் வாய்ப்புக்கு பிரகார் தகுதி பெற்றவராகிறார்.

    பிரகார் சதுர்வேதியின் தந்தை பெங்களூரூவில் மென்பொருள் பொறியாளராக பணி புரிகிறார். பிரகாரின் தாய், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் (DRDO) விஞ்ஞானியாக பணி புரிகிறார்.

    இரண்டாவது நாள் ஆட்டத்தில் மும்பை அணி 380 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய கர்நாடகா, 223 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 890 ரன்கள் குவித்து முதல் இன்னிங்க்ஸ் ரன்கள் (510) அடிப்படையில் வெற்றி பெற்றது.


    கர்நாடக மாநிலம், ஷிவ்மோகா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராகவேந்திரா 52,148 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். #Yeddyurappa #BYRaghavendrawins #Shivamogga #LokSabhabypoll
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, காலியாக இருந்த ஷிவமோகா, மன்டியா, பல்லாரி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மூன்றாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.  

    அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தன.

    கடந்த மூன்றாம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மகனுமான ராகவேந்திரா, 52,148 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரான முன்னாள் முதல் மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா தோல்வியை தழுவினார். #Yeddyurappa #BYRaghavendrawins #Shivamogga #LokSabhabypoll 
    ×