என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Shivavishnu"
- பொதுவாக கோவில் குளங்கள் சதுர வடிவில் இருக்கும்.
- ஆனால் மகாமகம் குளம் சதுரமாக தோன்றினாலும் சற்று மாறுபாடு கொண்டது.
கும்பகோணம் மகாமகம் குளம் மொத்தம் 6.2 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
பொதுவாக கோவில் குளங்கள் சதுர வடிவில் இருக்கும்.
ஆனால் மகாமகம் குளம் சதுரமாக தோன்றினாலும் சற்று மாறுபாடு கொண்டது.
குளத்தின் நாலாபுறமும் கருங்கல் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன.
18 படிகள் கொண்டதாக அந்த படித்துறை உள்ளது.
ஆகம விதிகளில் 18க்கு எப்போதும் தனித்துவமும் ஆற்றலும் உண்டு.
அந்த விதிப்படி 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் நீராடலாம்
மகாமகம் குளம் 19 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
- மாசி மகத்தன்று கும்பேஸ்வரர், மகாமக குளக்கரைக்கு வரும்போது, வீரபத்திரர் கோவில் முன்பே எழுந்தருளுவார்.
- அப்போது வீரபத்திரர் கோவில் அர்ச்சகர், கும்பேஸ்வரருக்கு பூஜை செய்வார். இப்பூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம்.
சிவபெருமானின் வடிவங்களில் மிகவும் முக்கியமானது வீரபத்திர வடிவம்.
தட்சனின்யாக குண்டத்தில் விழுந்து இறந்த அன்னையின் முடிவுக்கு தட்சனைத் தண்டிக்க எண்ணிய ஈசன் தன்னில் இருந்து உருவாக்கிய வடிவே வீரபத்திர வடிவமாகும்.
அவ்வடிவத்தில் எழுந்து இத்தலத்தில் அருள்பாலிக்கும் வீரபத்ர சுவாமி கோரைப்பற்களுடன் கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் ஏந்திய வடிவில் உள்ளார்.
அருகில் தட்சன் வணங்கியபடி இருக்கிறான். அம்பாள் பத்திரகாளி வடிவத்துடன் தனிச்சன்னதியில் குடி கொண்டு இருக்கிறாள்.
இத்தல வீரபத்திரருக்கு "கங்கை வீரன்", "கங்கை வீரேஸ்வரர்" என்ற பெயர்களும் உண்டு.
நவநதிகளில் பிரதானமானது கங்கை. கங்கையின் தலைமையில், இங்கு வந்து பாவம் போக்கிக்கொண்ட நதிகளுக்கு, காவலராக இருந்தவர் என்பதால் வீரப்பத்திரருக்கு இப்பெயர் ஏற்பட்டது.
தஞ்சையை ஆண்ட மாமன்னன் இரண்டாம் இராஜராஜசோழனின் அரசவையில் கவிச்சக்கரவர்த்தியாக இருந்தவர் ஒட்டக்கூத்தர்.
வீரபத்திரரின் பக்தரான இவர், கும்பகோணத்திலுள்ள ஒரு மடத்தில் சிலகாலம் தங்கி சேவை செய்து வந்தார்.
வீரபத்திரரைக் குறித்து, "தக்கயாகப்பரணி" என்னும் நூலையும் இயற்றினார். இந்நூலை வீரபத்திரர் சன்னதி முன்பு அரங்கேற்றம் செய்தார்.
ஒருவர் பெற்ற வெற்றியைக் குறித்து இயற்றப்படும் நூல் "பரணி" எனப்படும்.
தட்சனின் யாகம் அழித்து வீரபத்திரர் வெற்றி பெற்றதால் இந்நூல், "தக்கயாகப்பரணி" என அழைக்கப்பட்டது.
ஒட்டக்கூத்தர், சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் வணங்கியபடி காட்சி தருகிறார். ஆவணி உத்ராடத்தில் இவருக்கு குருபூஜை நடத்தப்படுகிறது.
மாசி மகத்தன்று கும்பேஸ்வரர், மகாமக குளக்கரைக்கு வரும்போது, வீரபத்திரர் கோவில் முன்பே எழுந்தருளுவார்.
அப்போது வீரபத்திரர் கோவில் அர்ச்சகர், கும்பேஸ்வரருக்கு பூஜை செய்வார். இப்பூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம்.
பங்குனி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜைகளும், சிவராத்திரியில் ஐந்து கால பூஜையும் இக்கோவிலில் நடைபெறும்
மகாமகத்தன்று மகாமக தீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொள்ள கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவநதிகளும் இத்தலத்திற்கு வந்தன.
அவர்களுக்கு காவலராக, வீரபத்திரரை அனுப்பி வைத்தார் ஈஸ்வரன்.
அவரே குளக்கரையில் மேற்கு நோக்கி அமைந்த இக்கோவிலின் அருகில் அமைந்த மற்றொரு சிவ ஸ்தலமான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் காசி விஸ்வநாதராக நவகன்னிகளுடன் பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலிக்கிறார்.
சிறப்பு பிரார்த்தனையாக பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வீரபத்திரர் சன்னதியில் அரிசி மாவு விளக்கு ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.
வீரபத்திரரிடம் வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம், வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்கின்றார்கள்.
- திங்கட்கிழமையும் அமாவாசையும் ஒன்றுசேரும் தினத்தை பிரதட்சண அமாவாசை என்று சொல்வார்கள்.
- அன்றைய தினம் காலையில் வேப்ப மரத்துடன் சேர்ந்திருக்கும் அரச மரத்தை 108 தடவை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
திங்கட்கிழமையும் அமாவாசையும் ஒன்றுசேரும் தினத்தை பிரதட்சண அமாவாசை என்று சொல்வார்கள்.
அன்றைய தினம் காலையில் வேப்ப மரத்துடன் சேர்ந்திருக்கும் அரச மரத்தை 108 தடவை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
அன்று காலை குளித்து விட்டு மரத்தினருகில் சென்று அமாஸோமவார புண்ய காலே அசுவத்த ப்ரதட்சிணம் கரிஷ்யே என்று சொல்லி விட்டு பக்தியுடன் 108 அல்லது 54 அல்லது 21 தடவையாவது பிரதட்சணம் செய்யலாம்.
அரச-வேம்பு மரத்தை பிரதட்சணம் செய்வதால் பாபங்கள் விலகும், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அருளும் கிட்டும், ஏழரைச் சனியின் துன்பங்கள் விலகி ஆயுள் அதிகரிக்கும்.
தை மாதம் அமாவாசையில் திங்கட்கிழமையும் சூரிய உதய காலத்தில் திருவோண நட்சத்திரமும் வ்யதீபாத யோகமும் ஒன்றாகச் சேர்ந்தால் அன்று மஹோதய புண்ணிய காலம் எனப்பெயர்.
எப்போதாவதுதான் நிகழும், இந்த நாளில் புண்ணிய நதியில் நீராடல், மந்திர ஜபம், பூஜைகள், ஹோமங்கள் மற்றும் தானங்கள் செய்வது அனைத்து தெய்வங்களையும் மகிழ்விக்கும்.
அதிக அளவு புண்ணியங்களைத் தரும் என்கிறது சாஸ்திரம்.
- அமுதத்தால் நனைக்கப்பட்ட பூமிக்கு பஞ்சக்குரோசம், அஷ்டாதச ஸ்தானம் என்று பெயர்.
- இந்தயாத்திரைக்கு சமமான யாத்திரை இப்பூவுலதில் எங்கும் இல்லை.
பஞ்சக்குரோச ஸ்தலங்கள்:
1. திருவிடைமருதூர்
2. திருநாகேசுவரம், உப்பிலியப்பன் கோவில்
3. தாராசுரம்
4. சுவாமி மலை
5. கருப்பூர் அஷ்டாதசஸ்தானம் பின்வருமாறு:
1. திருவிடைமருதூர்
2. திருபுவனம்
3. அம்மாசத்திரம்
4. திருநாகேசுவரம், உப்பிலியப்பன் கோவில்
5. செவ்வியவரம்பை, அய்யாவாடி
6. சிவபுரம்
7. சாக்கோட்டை
8. மருதா நல்லூர்
9.பட்டீசுவரம்
10. திருசத்திமுற்றம்
11. தாராசுரம்
12. திருவலம்சுழி
13. சுவாமிமலை
14.இன்னம்பூர்
15. திருப்புரம்பியம்
16. கொட்டையூர்
17. கருப்பூர்
18. வாணாதுரை.
அமுதத்தால் நனைக்கப்பட்ட பூமிக்கு பஞ்சக்குரோசம், அஷ்டாதச ஸ்தானம் என்று பெயர்.
இந்தயாத்திரைக்கு சமமான யாத்திரை இப்பூவுலதில் எங்கும் இல்லை.
யாத்திரையால் யமகிங்கரர்களுடைய பாதை நீங்குகிறது. விருப்பங்கள் நிறைவேறும். பாவங்கள் போகின்றன.
ஒரே தினத்தில் அஷ்டாதசஸ்தானங்களையும் தரிசிப்போர் பூமிபிரதட்சணம் பண்ணின பலனையும் சிவலோகம் விஷ்ணுலோகம் இவைகளை அடைவார் என்பது ஐதீகம்.
- மகாமத் தீர்த்தம் அனைவருக்கும் அதிலும் குறிப்பாக பெண்களுக்கும் நினைத்த பயன்களையெல்லாம் கொடுக்கத்தக்கது.
- இத்தீர்த்தத்தில் நீராடுகிறவன் தனது ஏழுகுலங்களை பரிசுத்தமாக்கிக் கொள்கின்றான்
இத்தீர்த்தத்தில் நீராடுகிறவன் தனது ஏழுகுலங்களை பரிசுத்தமாக்கிக் கொள்கின்றான். அவைகளாவன:
1.தன்குலம்,
2.தன்பெண்ணைக்கொண்டவன் குலம்
3.தாயின் குலம்
4.சிறியதாயின் குலம்
5.உடன்பிறந்தான் குலம்,
6.தந்தையோடு பிறந்தவன் குலம்
7.தன்மாமன் குலம்
மகாமத் தீர்த்தம் அனைவருக்கும் அதிலும் குறிப்பாக பெண்களுக்கும் நினைத்த பயன்களையெல்லாம் கொடுக்கத்தக்கது.
குழந்தை பேறு இல்லாதவர்கள் மகாமக குளக்கரையில் அமைந்துள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் உள்ள ஒன்பது கன்னியர்களுக்கு அபிஷேகம்,
நிவேதனம், சந்தனம், தாம்பூலம், உற்சவம் முதலானவைகளைச் செய்தபின், ஒன்பது சுமங்கலிகளுக்கு எண்ணெய், சந்தனம், குங்குமம்,புஷ்பம் கொடுத்து நல்ல விருந்தளிக்கவேண்டும்.
கோவிலுக்கு சென்று நூறு தீபம் வைக்கவேண்டும்.
இவ்வாறு நான்கு வெள்ளிக்கிழமை, கார்த்திகை சோமவாரம்,நவராத்திரி, தனுர்மாதம், இச்சமயங்களில் ஆராதித்தால் குழந்தை பேறு கிடைக்கும்.
- அநேக அசுவமேத யாகங்கள் செய்த பலனை கொடுப்பதுடன் ஈசுவர ஸாயுஜ்ய பதவியையும் அளிக்கின்றது.
- இப்புண்ணிய பூமியின் பெருமைகளை மகரிஷிகள் காசிகண்டத்தில் புகழ்ந்திருக்கிறார்கள்.
மகாமக குளம் என்னும் கன்னியதீர்த்தத்தில் நீராடுபவர்களுடைய பாவக் கூட்டங்கள் சூரியனைக்கண்ட பனிபோலும் மறைந்து போகும்.
அநேக அசுவமேத யாகங்கள் செய்த பலனை கொடுப்பதுடன் ஈசுவர ஸாயுஜ்ய பதவியையும் அளிக்கின்றது.
இப்புண்ணிய பூமியின் பெருமைகளை மகரிஷிகள் காசிகண்டத்தில் புகழ்ந்திருக்கிறார்கள்.
வேறு இடங்களில் செய்யும் பாவம் புண்யசேத்திரத்திலும், புண்ய சேத்திரத்தில் செய்யும் பாவம் காசியிலும், காசியில் செய்யும் பாவம் கும்பகோணத்திலும்,
கும்பகோணத்தில் செய்யும் பாவம் கும்பகோணத்திலும் நாசத்தை அடைகின்றன என்பார்கள்.
அனைத்து விதமான யாக பலன்களையும் கொடுக்கும் தீர்த்தம் இதுவே.
இக்குளத்தை ஒருமுறை சுற்றி வந்தால் மகாமேருவை நூறுமுறை சுற்றி வந்த பலனை தரும் என்பது புராணமாகும்.
நீண்ட நாட்களாக வயதக்கு வராத பெண்கள் மகாமகபெண்களுக்கு பூஜைபடைத்தால் புஷ்பவதிகளாகி கணவர்களுடைய பிரியத்தை அடைகிறார்கள்.
- மகாமக குளத்தினை சுற்றிலும் அழகான பதினெட்டு வரிசை படிக்கட்டுகள் அமைந்துள்ளன.
- நாலா புறமும் சுற்றிலும் உள்ள படிக்கட்டுகளின் மீது பதினாறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மகாமக குளத்தினை சுற்றிலும் அழகான பதினெட்டு வரிசை படிக்கட்டுகள் அமைந்துள்ளன.
நாலா புறமும் சுற்றிலும் உள்ள படிக்கட்டுகளின் மீது பதினாறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மண்டபத்திலும் ஒருசிறு கோவிலும் கட்டப்பட்டு சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளது.
அந்த பதினாறு சிவலிங்கங்களின் பெயர்களாவன:
1.பிரம்மதீர்த்தேஸ்வரர்
2.முகுந்தேஸ்வரர்
3.தளேஸ்வரர்
4.விருஷபேஸ்வரர்
5.பரணேஸ்வரர்
6.கோணேஸ்வரர்
7.பக்திஹேஸ்வரர்
8.பைரவேஸ்வரர்
9.அகத்தீஸ்வரர்
10.வியாசேஸ்வரர்
11.உமை பாகேஸ்வரர்
12.நைருதீஸ்வரர்
13.பிர்மேஸ்வரர்
14.கங்காரேஸ்வரர்
15.முக்த தீர்த்தேஸ்வரர்
16.சேத்திர பாலேஸ்வரர்.
- நாக தீர்த்தம் (நாகேஸ்வரன் கோவில் சிங்ககிணறு)
- பாதாள கங்கை (சோமனாதன் கோவில் கிணறு)
1. காசியபதீர்த்தம் (சோலையப்பன் தெரு கீழ்கோடி)
2. கதா தீர்த்தம் (ஓடத்துரை)
3. சக்கரதீர்த்தம் (வேதாரண்ணியத்திலிருந்து காசியாத்திரை போகும் வழியில் இங்குதங்கின ஓர் பிராம்மண சிரேஷ்டருடை தகப்பனாரின் எலும்பு இவ்விடத்தில் தாமரைப்பூவாக மாறிவிட்டது. ஆகையால் காசியை நோக்கிகொண்டு போகப்பட்ட அஸ்தி இங்குமீண்டும் கொண்டுவரப்பட்டது)
4. ஈசான்ய தீர்த்தம்
5. பிரும்ம தீர்த்தம் (அரசலாறு பிரும்மன் கோவில் துறை) தடாகங்கள்
6. கன்னியா தீர்த்தம் (மகாமக தீர்த்தம்)
7. ஹேமபுஷ்கரிணீ (பொற்றாமரை)
8. கௌதம தீர்த்தம்
9. இந்திர தீர்த்தம்
10. வியாச தீர்த்தம்
11.ஸோம தீர்த்தம்
12. வராஹ தீர்த்தம்
13. வருண தீர்த்தம்
14. நாக தீர்த்தம் (நாகேஸ்வரன் கோவில் சிங்ககிணறு)
15. பாதாள கங்கை (சோமனாதன் கோவில் கிணறு)
- காவிரிக்கு தென்கரையில் சூரியனுக்கு அருளிய சக்கரபாணியாகிய நரசிம்மன் இருக்கிறார்.
- சக்கரபாணிக்கு நேர்கிழக்கில் பாணபுரீசர் ஸான்னித்தியமாயிருக்கிறார்.
* கன்னியா தீர்த்தக்கரையின் வடபக்கத்தில் வீற்றிருக்கும் நவகன்னியர்களோடு கூடிய காசிவிசுவநாதரை காண சகல அதிஷ்டங்கள் கைகூடும்.
* கீழ்கரையில் மேற்கு திசை நோக்கி இருக்கும் அபிமுக்தேசுவரரை தரிசிப்பவருக்கு மறுஜென்மமில்லை.
* மேல்கரையில் இருக்கும் கவுதமேசுவரனார் குபேர சம்பத்தை பக்தர்களுக்கு அளிக்கிறார்.
* வில்வ வனத்தில் நாகேசுவரர் மகாமக குளத்தின் வடமேற்கு மூலையில் இருக்கிறார், சிவஸாயுஜ்யம் அவரை தரிசிப்போருக்கு ஏற்படும்.
* சோமேசர் நாகேசருக்கு வடக்கு மூலையில் இருக்கிறார். குருவும் சந்திரனும் வழிபட்டு பேறு பெற்றர்கள்.
* சோமேசருக்கு வடக்கில் ஹேமமுனியின் தவம் சித்தியடைவத்தின் பொருட்டும், அசுரர்களை சம்ஹாரம் செய்யவும் ஸ்ரீ தேவியோடும் பூதேவியோடும் சாரங்கபாணியாய் இருக்கிறார்.
அவரை பார்த்த மாத்திரத்தில் பாவம் பறந்தோடுகிறது. விஷ்ணு சாயுஜ்யம் ஏற்படுகிறது. மகர சங்கராந்திதினத்தில் பொற்றாமரை ஸ்நானம் சிறப்பாகும்.
* ஆராவமுதனுக்கு நேர்மேற்கில் ஆதிகும்பேசுவரர் இருக்கிறார் கடும்தவம் செய்திருந்தாலொழிய அவர் தரிசனம் ஏற்படாது வெள்ளிக்கிழமையில் மங்களநாயகியின் தரிசனம் விசேஷ பலன் தரும்.
* கும்பநாதருக்கு தென்மேற்கில் தூமகேது முனிக்கு தரிசனமளித்த ஆதிகம்பட்ட விசுவநாதர் வீற்றிருக்கிறார்.
* கும்பேசுவாருக்கு வடக்கில் காவிரியின் தென்கரையில் பூவாரக பெருமாள் எழுந்தருளியிருக்கிறார்.
* காசியபருக்கு காட்சி கொடுத்த இலட்சுமி நாராயணர் காவிரி தீர்த்தில் இருக்கிறார்.
* காவிரிக்கு வடபக்கத்தில் ( மேலக் காவேரி ) மதங்கருக்கருளிய வரதராஜன் வீற்றிருக்கிறார்.
* காவிரிக்கு தென்கரையில் சூரியனுக்கு அருளிய சக்கரபாணியாகிய நரசிம்மன் இருக்கிறார்.
* சக்கரபாணிக்கு நேர்கிழக்கில் பாணபுரீசர் ஸான்னித்தியமாயிருக்கிறார்.
புராண காலத்திற்கு பின்தோன்றி சிறப்போடு விளங்கும் கோவில்கள்
1. காளாத்தி நாதன் (சிவன்கோவில்) 2. ராமஸ்வாமி (ராமர் கோவில்) 3. வரதராஜ பெருமாள் கோவில் 4. சரநாராயண பெருமாள் கோவில் (தசாவதார பெருமாள்) 5. வேதநாராயணன் (பிரம்மன் கோவில்)
- அறிவியல் மேதைகளை உலகுக்குத் தந்த சிறப்பு கும்ப கோணம் நகரத்துக்கு உண்டு.
- இந்நகரம் கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது
கும்பகோணம் தலம் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமான் திருவருள் செயலால் தோன்றி விளங்குகிற தலமாகும்.
காவிரி ஓடுவதால், நீர்வளம் நிலவளம் மிக்கது.
பொன் கொழிக்கும் பூமி.
அறிவியல் மேதைகளை உலகுக்குத் தந்த சிறப்பு கும்ப கோணம் நகரத்துக்கு உண்டு. இந்நகரம் கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நகரத்தின் பெருமைகளைப் பற்றி ஆயிரம் நாவு கொண்ட ஆதிசேஷனாலும் வர்ணிக்க முடியாது என்று சொல்வார்கள்.
பரமசிவனும், மகாவிஷ்ணுவும் அதிக விருப்பத்துடன் வாசம் செய்யும் ஸ்தலம்.
மாந்தாதர், மதங்கமுனி, துமகேது, சூரியன் இவர்களால் கடும் தவம் செய்து, பரபிரும்மத்தினை அடைந்து, சாயுஜ்யம் பெற்ற இடமும் இது ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்