என் மலர்
நீங்கள் தேடியது "shivsena"
- கைது செய்ய கிருஷ்ணா ஹெக்டே வலியுறுத்தி உள்ளார்.
- காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று குறிப்பிட்ட காமெடி நடிகர் குணால் கம்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். சர்ச்சை கருத்து தெரிவித்த காமெடி நடிகர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா ஹெக்டே வலியுறுத்தி உள்ளார்.
மேலும், காமெடி நடிகருக்கு சிவசேனா டிரீட்மென்ட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "குணால் கம்ராவின் கருத்துக்கள் மிக மோசமாக உள்ளன. அவர் விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக காமெடி நடிகர் குணால் கம்ராவின் நிகழ்ச்சி படமாக்கப்பட்ட மும்பையின் கர் பகுதியில் உள்ள யூனிகான்டினென்ட்டர் ஓட்டல் மீது சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த விவகாரம் குறித்து சிவேசான எம்.பி. நரேஷ் மஹாஸ்கே கூறும் போது, "இந்தியாவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுவாய்," என்று தெரிவித்தார்.
- சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டது.
- ஷிண்டே அணிக்கு சிவசேனா சின்னம் வழங்கியது ஜனநாயக படுகொலை என உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதனிடையே, சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.
அதன்பின், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே மாநில முதல் மந்திரி ஆனார்.
இதையடுத்து, சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.
ஆனால் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது.
இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியும், கட்சி சின்னமான வில்-அம்பும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டது.
உத்தவ் தாக்கரே அணி சிவசேனா உத்தவ் பாலாசாகிப் தாக்கரே அணி என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் வைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். சிவசேனா சின்னத்தைத் திருடி விட்டனர். நாங்கள் போராடுவோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம். தனது திருட்டால் இப்போதைக்கு ஷிண்டே மகிழ்ச்சியாக இருக்கலாம். ஒருமுறை துரோகி என்றால், எப்போதுமே துரோகி தான். ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சியும், சின்னமும் வழங்கப்பட்டது ஜனநாயக படுகொலை என தெரிவித்தார்.
- ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேயிடம் இருந்து சிவசேனா கட்சியை கைப்பற்றிக் கொண்டார்
- பாலாசாகேப் தாக்கரே உருவாக்கி உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைத்ததுதான் உண்மையான சிவசேனா- சுலே
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி நிலவி வருகிறது. அதற்கு முன்னதாக சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து, ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றிக் கொண்டார்.
அம்மாநிலத்தில் பா.ஜனதா- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-
என்னைப் பொறுத்தவரையில் பா.ஜனதா கட்சியில் உண்மை பேசும் ஒரே நபர் நிதின் கட்கரிதான். அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரேயொரு சிவசேனாதான். அது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவால் உருவாக்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும்போது உத்தவ் தாக்கரேயிடம் பொறுப்பை ஒப்படைத்தார். தற்போது அதன் நகல் உள்ளது. ஆனால் மக்களுக்கு தங்கத்திற்கும், வெண்கலத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியும்.
இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு பேட்டியின்போது உண்மையான சிவசேனா குறித்து நிதின் கட்கரி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சுப்ரியா சுலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
- ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடரலாம்.
மும்பை:
மகாராஷ்டிரா முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் நேற்று முடிவை அறிவித்தார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா அணி. ஷிண்டே அணி எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது. சட்டமன்ற கட்சித்தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே, சபாநாயகரின் தீர்ப்பு பச்சை ஜனநாயகப் படுகொலை. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
- ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
- ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்வு ஜூன் 21-ம் தேதி அன்று சிவசேனா இரண்டாகப் பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது. ஷிண்டே முகாம் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார். ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. 53 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், சபாநாயகர் அறிவிப்பை ஏற்க மறுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
- உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதய தமனிகளில் உள்ள அடைப்பை கண்டறியும் சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், இன்று காலை, "உத்தவ் தாக்கரே, சர் ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உங்கள் ஆசீர்வாதத்துடன் அவர் நன்றாக இருக்கிறார். மேலும் அவர் பணியாற்றவும் மக்களுக்கு சேவை செய்யவும் தயாராக இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
- அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு.
- உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கட்சியை கைப்பற்றியபோது ஆதரவு அளித்த அனைத்து எம்.எல்.ஏ.-க்களுக்கும் வாய்ப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
பா.ஜ.க. மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்து வருகிறது. இந்த மூன்று கட்சிகளும் மகாயுதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
தொகுதி பங்கீடு தொடர்பாக மூன்று கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 45 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா வெளியிட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கட்சியை கைப்பற்றியபோது இருந்த, தனக்கு ஆதரவு அளித்த சிவசேனா எம்.எல்.ஏ.-க்கள் அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார் ஏக்நாத் ஷிண்டே.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தானே நகரில் கோப்ரி-பஞ்ச்பகாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே பா.ஜ.க. 99 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது சிவசேனா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.
- பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார்.
- பா.ஜ.க.வில் இருந்து விலகியதும், வாய்ப்பு வழங்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாகாயுதி கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணியில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
தற்போது இந்த கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு ஏற்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களாக இருந்தவர் ஷைனா என்.சி. இவர் நேற்று திடீரென பா.ஜ.க.-வில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.
கட்சியில் சேர்ந்த உடனே மும்பாதேவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
மும்பாதேவி தொகுதி மும்பை மக்களவை தொகுதிக்குள் வருகிறது. இந்த தொகுதியில் 2009-ல் இருந்து காங்கிரசை சேர்ந்த அமின் பட்டேல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
முன்னதாக பா.ஜ.க. ஷைனா என்.சி.-ஐ வொர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரேவை எதிர்த்து களம் இறக்க விரும்பியது. ஆனால் சிவசேனா அந்த தொகுதியில் மிலிந்த் தியோராவை களம் இறக்கியது.
பா.ஜ.க. முன்னாள் மந்திரி ராவ்சாஹேப் தன்வே மகள் சஞ்ஜனா ஜாதவ் கன்னத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டள்ளது. முன்னாள் எம்.எல்.எ. அஷோக் பாட்டீல் பந்தப் மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது.
- பாஜக தலைவர் ஷைனா என்.சி.அக்கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.
- போலீசார் எம்.பி. அரவிந்த் சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாகாயுதி கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணியில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களாக இருந்தவர் ஷைனா என்.சி. திடீரென பா.ஜ.க.-வில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.
கட்சியில் சேர்ந்த உடனே மும்பாதேவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
மும்பாதேவி தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த், தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "இந்த தொகுதியில் போட்டியிடும் ஷைனா என்.சி. பா.ஜ.க. வில் இருந்த போது அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் அங்கிருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்தார். இவரை போன்ற இறக்குமதி பொருளை ஏக்நாத் ஷிண்டே கட்சியில் சேர்த்துள்ளனர். இதனால் அவர் கட்சி வேட்பாளராகிவிட்டார்" என ஆபாசமாக விமர்சித்தார்.
இது குறித்து நக்பாடா போலீஸ் நிலையத்தில் ஷைனா என்.சி., புகார் அளித்தார். போலீசார் எம்.பி. அரவிந்த் சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. உத்தவ் தாக்கரேவின் தந்தை பாலாசாகேப் உயிருடன் இருக்கும்போது அரவிந்த் சாவந்த் இவ்வாறு பேசியிருந்தால் அவரின் வாயை பாலாசாகேப் உடைத்திருப்பார். பெண்களை மதிக்கத்தவர்களுக்கு வரும் தேர்தலில் பெண்கள் பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- ஷைனா என்.சி. மும்பாதேவி தொகுதிக்கு தொடர்பில்லாதவர்.
- இறக்குமதி பொருள் என அரவிந்த் சாவந்த் விமர்சனம் செய்திருந்தார்.
பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்தவர் பெண் தலைவர் ஷைனா என்.சி.. இவர் வேட்புமனு தாக்கலுக்கு ஒரு நாள் முன்னதாக பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா காட்சியில் இணைந்தார். உடனே அவருக்கு மும்பாதேவி தொகுதியில் போட்டியிட ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அரவிந்த் சாவந்த், ஷைனா எம்.சி. ஒரு இறக்குமதி பொருள் ((imported maal)- மும்பாதேவி தொகுதிக்கு தொடர்பில்லாத வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்) என விமர்சித்திருந்தார்.
இதற்கு மகாயுதி கூட்டணியில் இருந்து கடுயைமான எதிர்ப்பு கிளம்பியது. இறக்குமதி பொருள் என இழிவுப்படுத்தியதாக கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத், அவ்வாறு பேசிய இழிவுப்படுத்தியது ஆகாது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "அங்கே இழிப்புப்படுத்துவது என்பது இல்லை. அரவிந்த் சாவந்த் எங்களுடைய சீனியர் எம்.பி.. ஷைனா என்.சி. மும்பாதேவி தொகுதிக்கு வெளியில் இருந்து வந்தவர் என்பதை, அவர் ஒரு இறக்குமதி பொருள் எனக் கூறினார். அவ்வளவுதான். அவள் இறக்குமதி பொருள் என்றார். அது எப்படி இழிவுப்படுத்தியது ஆகும்?. சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பற்றி நீங்கள் என்ன பேசுனீர்கள். ஒருமுறை நீங்கள் வரலாறை ஒருமுறை திரும்பி பார்க்க வேண்டும்.
தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நபர் வெளியில் இருந்து வந்து போட்டியிட்டால், மக்கள் அவர்களை வெளியில் இருந்து வந்தவர் என்றுதான் சொல்வார்கள். இதை மிகப்பெரிய பிரச்சனையாக உருவாக்க தேவையில்லை" என்றார்.
- மகாராஷ்டிராவின் சட்டசபை காலம் நாளையுடன் முடிவடைகிறது.
- அதற்குள் புதிய முதல்வர் பதவி ஏற்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க.,சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
முதல்வர் யார் என்பதில் இந்த கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல்வர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கிடையே நாளையுடன் மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற காலம் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். முதல்வர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் நாளைக்குள் புதிய அரசு அமைக்கப்பட வாய்ப்பு இல்லை.
நாளைக்குள் ஒருவேளை முதல்வர் பதவி ஏற்கவில்லை என்றால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என அனுமானம் எழுந்துள்ளது.
ஆனால் 26-ந்தேதிக்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என அரசியலமைப்பு தேவை இல்லை எனச் சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிராவில் இதற்கு முன்னதாக சட்டசபை காலம் காலாவதியான நிலையிலும் சில நாட்கள் கழித்து புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளதற்கு உதாரணம் உள்ளது.
10-வது சட்டமன்ற காலம் 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி முடிவடைந்துள்ளது. 12-வது சட்டமன்றத்திற்காக முதல்வர் நம்வபர் 7-ந்தேதி பதவி ஏற்றுள்ளார்.
அதேபோல் 12-வது சட்டசபை காலம் 2014-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியுடன் முடிவடைந்தது. 13-வது சட்டமன்றத்திற்கான புதிய முதல்வர் சில நாட்கள் கழித்துதான் பதவி ஏற்றுள்ளார்.
13-வது சட்டமன்ற காலம் 2019 நவம்பர் 19-ந்தேதி முடிவடைந்தது. 14-வது சட்டமன்ற காலத்திற்கான புதிய முதல்வர் நவம்பர் 28-ந்தேதிதான் பதிவு ஏற்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர்கள் பதவி ஏற்க சில நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது பல முறை நடந்துள்ளது எனச் சொல்லப்படுகிறத.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
- 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
- எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
மும்பை :
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே கடந்த 30-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு 40 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவாக உள்ளது. இந்தநிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளனர். அவர்கள் பொறுப்பேற்ற 17 நாட்கள் ஆன பிறகும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை.
இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், "2½ லட்சம் மக்கள் உள்ள பர்போடாசுக்கு 27 மந்திரிகள் உள்ளனர். ஆனால் 12 கோடி மக்கள் உள்ள மகாராஷ்டிராவிற்கு 2 மந்திரிகள் மட்டுமே உள்ளனர்.
அரசியல் அமைப்பு இங்கு எங்கு உள்ளது?. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மந்திரி சபையில் முதல்-மந்திரியுடன் சேர்த்து 12 மந்திரிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சொல்கிறது. எனவே கடந்த 2 வாரமாக 2 நபர் மந்திரி சபை எடுக்கும் அனைத்து முடிவுகளும் சட்டத்தின்படி செல்லாது. மரியாதைக்குரிய கவர்னரே, இங்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது?" என கூறியுள்ளார்.