என் மலர்
நீங்கள் தேடியது "shop sealed"
- பஜார் வீதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- ரூ. 40,000/- மதிப்பிலான ஹான்ஸ் விமல் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு வெள்ளிமேடு பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் வீதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் ரோஷனை இன்ஸ்பெக்டர் பிருந்தா, தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்செந்தில்குமார் மற்றும் போலீசார் பஜார் வீதி தரணி என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெள்ளிமேடு பேட்டை பஜார் வீதியை சேர்ந்த சரவணன் மனைவி ஸ்ரீபிரியா, தரணி ஆகி யோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் ரூ. 40,000/- மதிப்பிலான ஹான்ஸ் விமல் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கண்ட எதிரிகள் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரியின் பெட்டி க்கடையை வெள்ளிமேடு பேட்டை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.