என் மலர்
நீங்கள் தேடியது "shop theft"
பெரம்பூர்:
சென்னை சவுகார்பேட்டை நாராயண முதலி தெருவில் பேன்சி பொருட்கள் மொத்த விலைக் கடை வைத்திருப்பவர் விஜயன். இவரது கடையில் ராஜஸ்தானை சேர்ந்த பரத்குமார் என்பவர் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த 1 வாரத்தில் கடையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ.5 லட்சத்தை திருடினார். கடந்த 3-ந்தேதி அவர் பணத்துடன் மாயமாகி விட்டார்.
இது தொடர்பாக பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர், முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பரத்குமாரை தேடி வந்தனர். நேற்று ராஜஸ்தானுக்கு ரெயில் ஏற சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த பரத்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவர் டிராக்டருக்கு பயன்படுத்தும் ஐட்ராலிக் எந்திரத்தை பழுது பார்க்க அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் கொடுத்து இருந்தார். அதனை மர்மநபர் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுதொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதி, மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த ராஜை கைது செய்தனர்.