search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shopian"

    • ரகசிய தகவல் அடிப்படையில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை.
    • பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் வீரர்கள் பதிலுக்கு தாக்குதல்.

    ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசார் உதவியுடன், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததும், அந்த இடத்திற்கு சென்று, அப்பகுதியை சுற்றிவளைத்து அவர்களை முடிக்க முயற்சி செய்வார்கள். இப்போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

    இந்த வகையில் தெற்கு காஷ்மீர் மாவட்டமான ஷோபியானின் சோட்டிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

    அந்த பகுதியில் தீவிரவாதிகள் இருக்கிறார்களா? என வீரர்கள் தேடிப்பார்க்கும்போது பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதனால் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகின்ற நிலையில், உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். #MilitantKilled
    ஸ்ரீந்கர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #MilitantKilled
    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சைனபோரா பகுதியில் பயங்கரவாதிகள் இன்று திடீரென நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றோம் என போலீசார் தெரிவித்தனர். #MilitantsAttack
    காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரி பசரத் அகமதுவை கடத்தி சென்ற தீவிரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர். #JK #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் கடந்த வாரம் 2 வாலிபர்களை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர். இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரியை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர்.

    காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தை சேர்ந்தவர் பசரத் அகமது. முன்னாள் சிறப்பு போலீஸ் அதிகாரி. அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் இவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சகத் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரும் கடத்தப்பட்டனர். இவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதில் பசரத் அகமதுவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

    கடத்தப்பட்ட சகித் அகமது, ரியாஸ் ஆகிய இருவரையும் தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். #JK #MilitantsAttack

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்டனர். #JammuKashmir #MillitantsGunnedDown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதையும் மீறி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சஃப்னாக்ரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    அப்போது பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்புவதற்காக பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #MillitantsGunnedDown
    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ShopianEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கட்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று இரவு அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் சுட்டனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #ShopianEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்ட 3 போலீசார் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். #Kashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் சிறப்பு படை பிரிவு போலீஸ் அதிகாரிகள், 3 பேர் மற்றும் ஒரு காவலர் இன்று திடீரென மாயமாகினர்.

    காவல்துறையை சேர்ந்த 4 பேரையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், அவர்களில் 3 போலீசார் அப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 
    ஜம்மு காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். #TerroristKilled #Shopian #Baramulla
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம், ரபியாபாத் எனும் இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்தவரான சவர் விஜய் குமார் எனும் அதிகாரி உயிரிழந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

    சோபியான் மாவட்டம், கிலூரா எனும் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய மற்றொறு தேடுதல் வேட்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளான். இதனால் மாநிலத்தின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TerroristKilled #Shopian #Baramulla
    ஜம்மு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த கடும் சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Shopian
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம், குண்டலன் எனும் இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை வேலையில் அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கி சூடு தொடர்ந்து நடைபெற்றதால், பயங்கரவாதிகள் மறைந்திருந்த வீட்டை பாதுகாப்பு படையினர் தாக்கி அழித்தனர். இதில், தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    படுகாயம் அடைந்த ராணுவ அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #TerroristKilled #Shopian
    ×