என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "shopping complex"
- திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது.
- ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.
திருப்பூர்:
திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலின் கிழக்கு கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலின் ராஜகோபுரமாக உள்ள கிழக்கு கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.
அதேவேளையில், கூட்ட நெரிசலால் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய முடியவில்லை என்றால் கிழக்கு கோபுரத்தை தரிசனம் செய்கின்றனா்.இந்நிலையில், கோவிலின் கிழக்கு கோபுரத்தை 30 அடி உயரத்துக்கு மறைத்து வணிக வளாகம் கட்டினால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, பக்தா்களின் வசதிக்காகவும், கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டுவதற்கும், ஆற்காடு பழைய பஸ் நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிக்கும் என மொத்தமாக ரூ.9.48 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
ஆற்காடு எம்.எல்.ஏ.ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியும், கட்டிட, பணிகளை தரமாக மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி பொறியா ளரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தனலட்சுமி, நகரமன்றத் துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணாராம், நகராட்சி பொறியாளர் எழிலரசன், நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கட்டிட கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டும் பணிவிரைந்து நடைபெற்று வருகிறது.
- கூடியவிரைவில் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த பஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் கடந்த 10 வருடங்களுக்கு முன் அவினாசி கைகாட்டிபுதூர் அருகே புதியபஸ் நிலையம் அமைக்கப்பட்டு பழைய பஸ் நிலைய கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. நீண்டகாலமாக பழைய பஸ் நிலைய இடம் பயன்பாடின்றி கிடந்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அந்த இடத்தில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் இரண்டு தளங்களுடன் புதிய வணிக வளாகம் அமைப்பதற்காக 2 மாதம் முன்பு பூமிபூஜை நடந்தது. இதையடுத்து கட்டிட கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டும் பணிவிரைந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கி தொடர்ந்து பணி நடைபெற உள்ளது. கூடியவிரைவில் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது என்றனர்.
தாராபுரம்:
தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் மதுரை பங்கஜம் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 25) என்பவர் ஊழியராக வலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு வணிக வளாக காவலாளியை அழைத்து தனக்கு இன்று பிறந்த நாள். நண்பர்களுக்கு மது விருந்து அளிக்க வேண்டும். மதுவாங்கி வாருங்கள் என்று பணம் கொடுத்து அனுப்பினார்.
காவலாளி மதுவாங்க சென்றிருந்தபோது சதீஷ்குமார் கடையில் இருந்து விலை உயர்ந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தப்பினார். திரும்பி வந்து பார்த்த காவலாளி கடையில் சதீஷ்குமார் மாயமானது குறித்தும், பொருட்கள் சிதறி கிடப்பதை அறிந்தும் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து பொது மேலாளர் கண்ணன் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது ஊழியர் சதீஷ்குமார் பொருட்களை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.
இது குறித்து அவர் தாராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரையில் தலைமறைவாக இருந்த சரவணனை நேற்று கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்