search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shopping street"

    • பொருட்கள் வாங்க பல்லடம் கடைவீதிக்கு சென்றுள்ளார்.
    • கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சம்பவத்தன்று பல்லடத்தில் உள்ள அரசு வங்கியில் ரூ.60 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு, அதனை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துள்ளார்.

    பின்னர் பொருட்கள் வாங்க பல்லடம் கடைவீதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடையின் முன்பு நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதையடுத்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் கடைவீதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மசாலா பொருட்கள் இருந்த பெட்டி காணாமல் போனது தெரிய வந்தது.
    • சிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதியில் உள்ள மளிகை கடைக்கு தனியார் லாரி மூலம் மளிகை பொருட்கள் அடங்கிய பார்சல் பெட்டி, மற்றும் 2 மூட்டைகள் வந்தது. அதிகாலை நேரம் வந்தது. அதனை லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கடை முன்பு இறக்கி வைத்து விட்டு அவர்கள் சென்று விட்டனர்.

    இதன் பின்னர் கடைக்கு வந்த உரிமையாளர் பொருட்களை சரி பார்த்தபோது, சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மசாலா பொருட்கள் இருந்த பெட்டி காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து, கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது அதில் மர்ம நபர் ஒருவர் மசாலா பொருட்கள் அடங்கிய பெட்டியை திருடிச் செல்வது தெரிய வந்தது. இந்த நிலையில் பார்சல் பெட்டியை திருடும் மர்ம நபர் சிசிடிவி காட்சிகள், தற்பொழுது பல்லடம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஏராளமான கடைகள், அலுவலகங்கள் உள்ளன.
    • பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் என்.ஜி.ஆர். ரோடு பகுதி பல்லடம் நகரத்தின் முக்கிய கடைவீதி ஆகும். இங்கு ஏராளமான கடைகள், அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த ரோட்டில் பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அது கடந்த பல நாட்களாக எரியாததால் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பல நாட்களாக அவைகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.மேலும் இரவு நேரத்தில் பெண்கள், சிறுவர்கள் அந்த ரோட்டில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடம் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் அனைத்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 30ந்தேதி பல்லடம் கடை வீதியில் வணிகர் சங்க அலுவலக திறப்பு விழாவிற்க்கு வரும் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்லடம் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பல்லடம் அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×