search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shoulder pain"

    • தோள்பட்டை மூட்டில் விறைப்பு மற்றும் வலியை ஏற்படுத்துவது.
    • அசையாமல் வைத்திருப்பது உறைந்த தோள்பட்டை உருவாகும்.

    புரோசன் ஷோல்டர் எனப்படும் உறைந்த தோள்பட்டை என்பது தோள்பட்டை மூட்டில் விறைப்பு மற்றும் வலியை ஏற்படுத்துவது. வலிஇருக்கிறது என்பதற்காக தோள்பட்டையை நீண்ட நேரம் அசையாமல் வைத்திருப்பது உறைந்த தோள்பட்டை உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    தோள்பட்டையின் மூட்டுகள் இணைப்புத் திசுக்களால் இணைக்கப்பட்டுள்ளது. உறைந்த தோள்பட்டை நிலையில் இணைப்புத் திசுக்களின் உட்பகுதி கடினமடைந்து, தோள் மூட்டின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அல்லது கை முறிவு போன்ற நிலைகளில் நீண்ட காலத்திற்கு தோள் மூட்டை அசையாமல் வைத்திருந்தால் இது வரும் வாய்ப்பு அதிகம். கீழ்க்கண்ட காரணிகள் உறைந்த தோள்பட்டை வரும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

     1) 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக பெண்களுக்கு, உறைந்த தோள்பட்டை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    2) நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இருப்பவர்கள், அல்லது குறைந்த உடல் இயக்கம் உள்ளவர்களுக்கு உறைந்த தோள்பட்டை பாதிப்பு வரும் ஆபத்து அதிகம்.

    3) உடைந்த தோள் மூட்டு, பக்கவாதம் போன்ற நோய் நிலையில் உறைந்த தோள்பட்டை உருவாகும் வாய்ப்பு அதிகம்.

    4) நீரிழிவு நோய், அதிக தைராய்டு (ஹைப்பர் தைராய்டிசம்), குறை தைராய்டு (ஹைப்போ தைராய்டிசம்), பார்கின்சன் நோய் போன்ற நோய் உள்ளவர்களுக்கு உறைந்த தோள் பட்டை வரும் வாய்ப்புகள் அதிகம்.

     அறிகுறிகள்:

    உறைந்த தோள்பட்டை நோயின் ஒரு பிரிவு அதிக வலி கொண்ட உறைதல் நிலை' எனப்படும். இந்தநிலையில் தோள் மூட்டின் எந்தவொரு சிறு அசைவும் வலியை ஏற்படுத்துகிறது. மேலும் தோள்பட்டையை அசைக்க இயலாது, அல்லது அசைக்கும்போது வலி கடுமையாக இருக்கும். இந்த நிலை 2 முதல் 9 மாதங்கள் வரை நீடிக்கும்.

    இரண்டாம் நிலையான உறைந்த நிலையில் தோள் மூட்டின் வலி குறையக்கூடும். இருப்பினும், தோள்பட்டை கடினமாகி தோள்மூட்டை பயன்படுத்துவது மிகவும் சிரமமாகிறது. இந்த நிலை 4 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.

    மூன்றாம் நிலையான தாவிங் அல்லது உருகும் நிலையில் தோள்பட்டை நகரும் திறன் மேம்படத் தொடங்குகிறது. உறைந்த தோள்மூட்டு

    சித்த மருத்துவம்:

    இந்த நோய் சித்தர்களால் கூறப்பட்டுள்ள வாத நோய்களில் ஒன்றாகும். வாத நோய்களில் முக்குற்றங்களில் மிகுந்து நிற்கும் வாதத்தை சமன்படுத்த பேதி மருந்தை சித்த மருத்துவர்களின் அறிவுரை படி எடுத்து அதன் பிறகு நோய்க்குரிய மருந்தை சாப்பிட வேண்டும்.

    1) ரச கந்தி மெழுகு 500 மி.கி. இருவேளை பனை வெல்லத்தில் வைத்து சாப்பிட வேண்டும்.

    2) சேராங்கொட்டை நெய் 5 மி.லி. இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. நாகப்பற்பம் 200 மி.கி, முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை, தேன் அல்லது வெந்நீரில் கொடுக்க வேண்டும்.

    4) தோள் மூட்டின் வலி உள்ள இடங்களில் விடமுட்டி தைலம், உளுந்து தைலம், காயத்திரு மேனி தைலம், வாத கேசரி தைலம் இவைகளில் ஒன்றை தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    5) எந்தக்கை பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தக்கையின் முழங்கை பகுதியை உயர்த்தி, தோள்பட்டையை நீட்டுவதற்கு மென்மையான அழுத்தத்தைச் செலுத்தி, மேலே கொண்டு வரும் பயிற்சியை செய்யவேண்டும். இதை ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறை செய்ய வேண்டும்.

    இளைஞர்களைவிட, முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம் வருகிறது. இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக 'இறுக்கமான தோள்பட்டை' எனப்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' உள்ளது.
    ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டுவாதம் தொடர்பாக 2011-ம் ஆண்டு 'போன் அண்ட் ஜாய்ன்ட் டெகேட்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஐந்தில் ஒருவருக்கு மூட்டு வலி ஏற்படுவதாகத் தெரியவந்தது. இதை ஆமோதிக்கும் வகையில், இளைஞர்களைவிட, 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம் வருகிறது. இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக 'இறுக்கமான தோள்பட்டை' எனப்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' உள்ளது. இந்தியாவில் 2 அல்லது 3 சதவீதம் பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    தோள்பட்டையை சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு, இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படுகிறது. சிறுவர்கள் புத்தகப்பை மாட்டிக்கொள்வது முதல் தொழிலாளிகள் மூடை சுமப்பது வரை அடிப்படையாக இருப்பது தோளும், முதுகும்தான். ஆனால், நமது முதுகெலும்பு சுமை தாங்கும் எலும்பு அல்ல.

    நமது முதுகெலும்பு, முழங்கால் மூட்டை போல் கூடுதல் சுமையை தாங்கும் எலும்பு அல்ல. தசைகளும், தசைநார்களும் அதிகம் உள்ள இந்த எலும்பை நாம் தவறான முறையில் பயன்படுத்துகிறோம். அதனால், தோள்பட்டை விறைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. இதை எளிய பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி மூலம் சரிசெய்ய முடியும்.

    இதன் அறிகுறியாக, தோள்பட்டை வலி ஏற்பட்டு, கையைத் தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, இரவில் தூங்கும்போது எந்தப் பக்கம் வலி இருக்கிறதோ, அந்தப் பக்கம் படுக்கும் போது கடுமையான வலி போன்றவை ஏற்படும்.

    இறுக்கமான தோள்பட்டையால் பாதிக்கப்பட்டவர்களில், ஐந்து பேரில் ஒருவருக்கு மற்றொரு தோள்பட்டையிலும் இறுக்கம் ஏற்படலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தோள்பட்டைகளிலும் இறுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது. இதில் சரிசெய்ய முடியாதபட்சத்தில், சிறு துளை அறுவை சிகிச்சை (ஆர்த்ரோஸ்கோபி சர்ஜரி) மூலம் இறுக்கத்தை தளர்த்தி முழுமையாக குணப்படுத்த முடியும். சாதாரணமாக 7 முதல் 8 மணி நேரம் வரை கணினியில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து, வெளியில் சென்று நடந்து வருவது அவசியம். அத்துடன் தோள்பட்டைக்கு ஏதுவான நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்தும்போது, கையை முன் பின்னாக சுழற்றலாம். இதனால், தோள்பட்டைக்கு கூடுதல் பயிற்சி கிடைக்கும்.

    இதுதவிர யோகா, சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, சூரிய நமஸ்காரம் செய்தும் போது, தோள்பட்டைக்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்கிறது.

    ×