search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddha"

    • நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா.
    • 69 ஆம் ஆண்டு தென் சோபா பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைப்பெற்றது.

    நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

    இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார். சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் விமர்சனம் ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் உச்சத்தை தொட்டது. படத்தில் இடம் பெற்ற கண்கள் ஏதோ மற்றும் சந்தோஷ் நாரயணன் பாடிய உனக்கு தான் போன்ற பாடல் மிகப் பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டது.

    நேற்று 69 ஆம் ஆண்டு தென் சோபா பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைப்பெற்றது. அதில் தென்னிந்திய நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.

    சித்தா திரைப்படம் மொத்தம் 7 பில்ம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளது.

    சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர்- சித்தார்த் , சிறந்த நடிகை- நிமிஷா சஜயன், சிறந்த குணச்சித்திர நடிகை - அஞ்சலி நாயர், சிறந்த பின்னணி பாடகி - கார்த்திகா வைத்தியநாதன் , சிறந்த இசை - திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாரயணன், சிறந்த இயக்குனர் - எஸ்.யூ அருண் குமார்

    இதனால் படக்குழுழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். பிலிம் ஃபேர் விருதுடன் சித்தார்த் இருக்கும் அவரது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் படக்குழுவினருக்கு பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
    • . இந்நிலையில் சித்தார்த்தின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயுத எழுத்து'  திரைப்படத்தின் மூலம் பாய் நெக்ஸ்ட் டோர் கதாப்பாத்திரமாக மக்கள் மனதை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.

    சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் நினைத்தது போல் மக்களிடம் வரவேற்பு இல்லை, சமீபத்தில் அவர் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.

    சமீபத்தில் அவர் நடிகை அதிதி ராவுடன் நிச்சயம் செய்தார். இந்நிலையில் சித்தார்த்தின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    தற்பொழுது மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்குகிறார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் மாதவன் மற்றும் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டனர். படத்தை குறித்து அடுத்தகட்ட அப்டேட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
    • தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டது.

    சென்னை:

    இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.

    2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் 557 நகரங்களில் இன்று நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    சென்னையில் 36 மையங்களில் 24 ஆயிரத்து 58 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை மிகவும் ஆர்வமுடன் எழுதினார்கள்.

    தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. ஜூன் மாதம் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

    நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    மாணவ-மாணவிகளுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இடம்பெற்றுள்ள நடைமுறைகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினார்கள்.

    மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

    அவ்வாறு 1.30 மணிக்குள் வந்த மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    அதன்பிறகு வருகை தந்த மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

     தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் காகிதம், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலெக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், கைப்பை, பிரேஸ்லெட், செல்போன், மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்சுகள், கைக்கடிகாரம், நகைகள், உணவு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    ஷூ அணிந்து வந்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. எளிதில் தெரியும் படியான தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டது.

    மேலும் முறைகேடுகளை தடுக்க தேர்வு அறையில், தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்பட்டனர். முறைகேடுகளில் ஈடுபட்டால் 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

    • சிங்கம்புணரி அருகே சித்த மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி வட்டாரம் செல்லியம்பட்டி கிராமத்தில் இந்திய மருத்துவத்துறை மற்றும் ஓமியோபதி துறை, பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் சித்த மருந்துகள் வழங்கப்பட்டதுடன் மூலிகை கண்காட்சி, வர்ம சிகிச்சை மாணவர்களுக்கான யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சின்னையா, தலைமை ஆசிரியர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலமைச்சரின் விரிவான மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலமாக 200 பேருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இயன்முறை மருத்துவம் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சித்தமருத்துவர் சரவணன் மற்றும் ரஹிமா பானு ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

    ×