search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddharth"

    • இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்கியுள்ளார்.
    • மிஸ் யூ திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.

    இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்கியுள்ளார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவராவார். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து டீசர் காட்சிகள் அமைந்துள்ளது. சித்தார்த் மற்றும் ஆஷிகா ரங்கனாத் காதலிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது அது என்ன என்று வெளிப்படுத்தவில்லை. டீசர் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிக்கொண்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார்.
    • மிஸ் யூ திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் மூலம் பாய் நெக்ஸ்ட் டோர் கதாப்பாத்திரமாக மக்கள் மனதை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.

    சித்தார்த் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.

    இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்குகிறார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். போஸ்டரில் சித்தார்த் மற்றும் ஆஷிகா ரங்கனாத் இருவரும் கஃபேவில் அமர்ந்து இருக்குமாறு காட்சிகள் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார் சித்தார்த்.
    • இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

    நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் மூலம் பாய் நெக்ஸ்ட் டோர் கதாப்பாத்திரமாக மக்கள் மனதை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.

    சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் நினைத்தது போல் மக்களிடம் வரவேற்பு இல்லை, சமீபத்தில் அவர் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.

    இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்குகிறார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
    • இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.

    கடந்த ஆண்டு மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது மாவீரன் திரைப்படம். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து மாபெரும் வெற்றியடைந்தது.

    இதனைத் தொடர்ந்து சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படமான சித்தார்த் 40 திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.

    இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்று படக்குழுவினர் சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இப்படத்தில் சரத் குமார், தேவையாணி, மீதா ரகுநாத், சைத்ரா அசார் போன்ற பிரபல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அம்ரித் ராம்நாத் சில மாதங்களுக்கு முன் வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். இப்படத்தில் இடம்பெற்ற நியாபகம் என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

    சித்தார்த் 40 திரைப்படத்தின் மூலம் அம்ரித் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் மகன் அம்ரித் ராம்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம்.
    • புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளனர்.

    நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் திருமணம் செய்து கொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் `பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

    கடந்த ஆண்டு வெளிவந்த சித்தா படம் வெற்றியை கொடுத்தது.

    இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் உலா வரும் புகைப்படங்களும் வெளியாகின.

    மேலும் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். அதில் விரைவில் திருமணம் குறித்து வெளியிடுவோம் என்றும் கூறி இருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளனர்.

    சித்தார்த்-அதிதி தம்பதிக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சில மாதங்களுக்கு முன் இருவரும் நெருங்கிய உறவினர்கள் இடையே நிச்சயம் செய்துக்கொண்டனர்.
    • கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துருந்தார்.

     நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலத்தி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் இருவரும் நெருங்கிய உறவினர்கள் இடையே நிச்சயம் செய்துக்கொண்டனர்.

    கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அதிதி ராவ் சமீபத்தில் அளித்த நேர்காணலில் நடிகர் சித்தார்த் எப்படி அதிதி-க்கு காதல் ப்ரோப்போஸ் செய்தார் என கூறினார்.

    அதில் அவர் கூறியதாவது " நான் என் பாட்டியுடம் மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவரை எனக்கு சிறுவயதில் இருந்து மிகவும் பிடிக்கும். என்னுடைய பாட்டி ஐதரபாத்தில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். ஒரு நாள் சித்தார்த் என்னிடம் வந்து அந்த பள்ளிக்கூடத்தை பார்க்க வேண்டும் என்றார். நானும் அழைத்துச் சென்றேன். அங்கு சென்றவுடன் இந்த பள்ளிக்கூடத்தில் எங்கு அதிகமாக நீ உன் சிறுவயதை செலவிட்டார் என கேட்டார். நான் அந்த இடத்தை காண்பித்தேன். திடீர் என்று கீழே முட்டிப் போட்டு எதையோ எடுத்தார். நான் அவர் ஷூலேஸ் கட்டுகிறாரோ என நினைத்தேன். ஆனால் அவர் முட்டிப்போட்டு எனக்கு ப்ரோப்போஸ் செய்தார். என்னுடைய பிடித்தமான இடத்திற்கு என்னை அழைத்து வந்து பாட்டியின் ஆசிர்வாதத்துடன் ப்ரோபோஸ் செய்வது அவருடைய பிளான்" என்று கூறினார்.

    மேலும் அவரது திருமணம் வனப்பார்த்தியில் உள்ள 400 வருடங்கள் பழமையான கோவிலில் திருமணம் நடக்கப்போவதாக கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா.
    • 69 ஆம் ஆண்டு தென் சோபா பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைப்பெற்றது.

    நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

    இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார். சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் விமர்சனம் ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் உச்சத்தை தொட்டது. படத்தில் இடம் பெற்ற கண்கள் ஏதோ மற்றும் சந்தோஷ் நாரயணன் பாடிய உனக்கு தான் போன்ற பாடல் மிகப் பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டது.

    நேற்று 69 ஆம் ஆண்டு தென் சோபா பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைப்பெற்றது. அதில் தென்னிந்திய நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.

    சித்தா திரைப்படம் மொத்தம் 7 பில்ம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளது.

    சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர்- சித்தார்த் , சிறந்த நடிகை- நிமிஷா சஜயன், சிறந்த குணச்சித்திர நடிகை - அஞ்சலி நாயர், சிறந்த பின்னணி பாடகி - கார்த்திகா வைத்தியநாதன் , சிறந்த இசை - திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாரயணன், சிறந்த இயக்குனர் - எஸ்.யூ அருண் குமார்

    இதனால் படக்குழுழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். பிலிம் ஃபேர் விருதுடன் சித்தார்த் இருக்கும் அவரது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் படக்குழுவினருக்கு பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.
    • தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த்.

    இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு சித்தா திரைப்படம் வெளியானது. நடிகர் சித்தார்த் இந்த படத்தில் புதிய பரிமாணத்தில் நடித்திருந்த நிலையில் இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

    அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் கடந்த ஜூலை 12-ம் தேதி வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சித்தார்த். அதேசமயம் மிஸ் யூ என்ற திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சித்தார்த், எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

    சித்தார்த்தின் 40 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து சரத்குமார் , தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படத்தை தயாரித்துள்ளது.
    • இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.

    கடந்த ஆண்டு மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது மாவீரன் திரைப்படம். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து மாபெரும் வெற்றியடைந்தது.

    இதனைத் தொடர்ந்து சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படமான சித்தார்த் 40 திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.

    இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் சரத் குமார், தேவையாணி, மீதா ரகுநாத், சைத்ரா அசார் போன்ற பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

    தேவையாணி மற்றும் சரத்குமார் 1990- களில் பல வெற்றிபடங்களான சூர்ய வம்சம், த்ன்காசி பட்டணம் மற்றும் பாட்டாளி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் தற்கு அடுத்து இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது 'இந்தியன்'
    • இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகரான விவேக் மற்றும் மனோபாலா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று முதல் நீட்கப்பட்ட வெர்ஷன் அனைத்து திரையரங்களில் திரையிடப்பட்டுள்ளது. முன்னதாக 3 மணி நேரம் இருந்த நீளம் இப்பொழுது குறைக்கப்பட்டு படத்தின் அளவு 2 மணி நேரம் 40 நிமிடங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.

    தேவையற்ற சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தநிலையில், படத்தில் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்க படக்குழு இந்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் 2 படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இன்று ப்ரோமோஷன் பணிக்காக ஐதராபாத் சென்றனர் படக்குழுவினர்.

    கடந்த 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். அதைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து சங்கர், கமல் கூட்டணியில் தற்போது இந்தியன் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு பல சிக்கல்களை தாண்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி இந்தியன் 2 படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக உலகமுழுவது நடைப்பெற்று வருகிறது. இன்று ப்ரோமோஷன் பணிக்காக ஐதராபாத் சென்றனர் படக்குழுவினர்.

    சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த படக்குழு அதில் சங்கர் படத்தை பற்றிய சுவாரசிய தகவலை கூறினார். " படத்துல ஒரு ரோப் சீன் இருக்கு அவர் நாளு நாள் அந்த ரோப் ல தொங்கிக்ட்டே நடிச்சாரு, அதுலயும் ப்ராஸ்த்டிக் மேக்அப் போட்டுகிட்டு, பஞ்சாபி மொழி பேசனும், கேமராக்கு லிப் சிங்க் கொடுக்கனும், இதயும் எந்த வித சலிப்பு இல்லாம் அநடிச்சாரு, 70 வயசு ஆனாலும் கதாப்பாத்திரத்திற்கு அவரு போடுற முய்ற்ச்சி என்ன பிரமிக்க வைக்கிறது, இவ்ளோ ஆரவம் காம்மிக்கிற ஒரு நடிகர் இருகும் போது நம்ம என்ன நெனச்சாலும் அத ஸ்கிரீன்ல கொண்டு வர முடியும் " என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் 2 படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

    கடந்த 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். அதைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து சங்கர், கமல் கூட்டணியில் தற்போது இந்தியன் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு பல சிக்கல்களை தாண்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி இந்தியன் 2 படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். உலகம் முழுவது ப்ரோமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றனர். லண்டனில் படம் விளம்பரம் செய்ய்ப்பட்டது, துபாய் நகரத்தில் பாம் ஐலேண்டில் இந்தியன் 2 போஸ்டருடன் ஸ்கை டைவிங் செய்யப்பட்டது. நேற்று செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்து பேசினர்.

    அதில் கமல்ஹாசன் , " வழக்கமாக சென்சார் போர்டு உறுப்பினர்கள் சுலபமாக எந்த ஒரு படத்தையும் பாராட்ட மாட்டார்கள். ஆனால் இந்தியன் 2 படத்தை பார்த்த பின் பாராட்டினார்கள்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து உங்களுக்கு இந்தியன் 2 பிடிக்கவில்லை என்ற கருத்து பரவி வருகிறது என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளிக்கும் வகையில் " இந்தியன் 2 படம் எல்லாம் முடிந்து படப்பிடிப்புக்கு தயாரா ஆயிடுச்சு, அதனால எனக்கு இப்போ அடுத்து வர போற இந்தியன் 3 மேல இருக்கு, சாப்பிடும் போது சாம்பார் நல்லா இருந்துச்சு, ரசம் நல்லா இருந்துச்சு அதனால இப்போ பாயாசம் நல்லா இருக்குமேன்னு நான் பேசிட்டு இருக்கேன்" என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×