என் மலர்
நீங்கள் தேடியது "Siddhivinayak"
- டகோடா ஜான்சன், பிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே என்ற படத்தில் நடித்ததன் மூலம் உலக புகழ்பெற்றார்.
- டகோடா ஜான்சன் பாடகர் கிறிஸ் மார்ட்டின் உடன் டேட்டிங் செய்து வருகிறார்.
ஹாலிவுட் நடிகை டகோடா ஜான்சன் இந்திய நடிகைகள் சோனாலி பிந்த்ரே மற்றும் காயத்ரி ஜோஷியுடன் இணைந்து மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
பிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தின் மூலம் புகப்பெற்ற நடிகை டகோடா ஜான்சன் கோவிலுக்கு செல்லும்போது நீல நிற பாரம்பரிய சல்வார் உடையை அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு முன்னதாக, டகோட்டா ஜான்சன் தனது காதலரும் கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் தலைவரான கிறிஸ் மார்ட்டின் உடன் இணைந்து மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பாபுல்நாத் கோவிலுக்கும் சென்று வழிபட்டார். அப்போது இருவரும் பாரம்பரிய இந்திய உடை அணிந்திருந்தனர்.
கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் தற்போது நவி மும்பையில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
- மதுரை சோழவந்தானில் சித்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- 4 கால யாக பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடாகி கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கணபதி பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின.
சிவகங்கை மகாபிரபு சிவாச்சாரியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் கந்தசாமி பிள்ளை குடும்பத்தினர் முன்னிலையில் யாக பூஜைகள் நடந்தன. தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
4 கால யாக பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடாகி கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மன்னாடிமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜன், திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.