என் மலர்
சினிமா செய்திகள்
X
மும்பை சித்திவிநாயகர் கோவிலில் ஹாலிவுட் நடிகை டகோட்டா ஜான்சன் சாமி தரிசனம்
Byமாலை மலர்19 Jan 2025 4:10 PM IST
- டகோடா ஜான்சன், பிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே என்ற படத்தில் நடித்ததன் மூலம் உலக புகழ்பெற்றார்.
- டகோடா ஜான்சன் பாடகர் கிறிஸ் மார்ட்டின் உடன் டேட்டிங் செய்து வருகிறார்.
ஹாலிவுட் நடிகை டகோடா ஜான்சன் இந்திய நடிகைகள் சோனாலி பிந்த்ரே மற்றும் காயத்ரி ஜோஷியுடன் இணைந்து மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
பிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தின் மூலம் புகப்பெற்ற நடிகை டகோடா ஜான்சன் கோவிலுக்கு செல்லும்போது நீல நிற பாரம்பரிய சல்வார் உடையை அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு முன்னதாக, டகோட்டா ஜான்சன் தனது காதலரும் கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் தலைவரான கிறிஸ் மார்ட்டின் உடன் இணைந்து மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பாபுல்நாத் கோவிலுக்கும் சென்று வழிபட்டார். அப்போது இருவரும் பாரம்பரிய இந்திய உடை அணிந்திருந்தனர்.
கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் தற்போது நவி மும்பையில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X