என் மலர்
நீங்கள் தேடியது "signatures"
சேலம்-சென்னை பசுமை வழி சாலைக்கு எதிராக அனுமதியை மீறி கையெழுத்து இயக்கம் நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். #salemchennai8wayroad
சேலம்:
சேலம்-சென்னைக்கு மத்திய அரசு சார்பில் ரு.10 ஆயிரம் கோடியில் பசுமை வழி சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் எதிர்ப்பை மீறி அரசு சார்பில் நில அளவீடு பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிப்பு தெரிவித்தவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது அளவீடு முழுமையாக முடிவடைந்தது. இந்த 8 வழி சாலை திட்டத்தால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கபட்டுள்ளது என விவசாய சங்கத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து 8 வழி சாலை 6 வழி சாலையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் சில இடங்களில் மண் பரிசோதனை நடைபெறுவதால் பசுமை வழி சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் இன்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். அனுமதி இல்லாமல் கையெழுத்து இயக்கம் நடத்தியதால் 10 பேரை போலீசார் கைது செய்தனர். #salemchennai8wayroad