search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silk Smitha"

    • திரைத்துறையின் ஆளுமையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா.
    • சில்க் ஸ்மிதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    1980-ல் நடிகரும், இயக்குனருமான வினுசக்கரவர்த்தி இயக்கிய 'வண்டிச்சக்கரம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா. குறுகிய காலத்திலேயே உச்சத்தை தொட்ட சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டிற்காக ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் வரிசையில் நின்றனர்.


    சில்க் ஸ்மிதா கவர்ச்சி மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை', பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' போன்ற படங்களில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ஒரு கட்டத்தில் படங்களின் பாதி வசூலுக்கு காரணம் சில்க் ஸ்மிதா தான் என்கிற அளவிற்கு ஆளுமை செலுத்தினார். அன்று முதல் இன்று வரை சில்க் ஸ்மிதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்நிலையில், நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இயக்குனர் ஜெயராம் இயக்கும் இந்த படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி போஸ்டர்

    'சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை எஸ்.பி. விஜய் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 


    தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த சில்க் சுமிதா கடைசி நடித்து வெளிவராமல் இருந்த ‘ராக தாளங்கள்’ படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். #SilkSmitha #RaagaThaalangal
    சில்க்சுமிதா 1980-ல் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர். கடந்த 1996-ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். 

    அவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு, அவர் அறிமுகமான இயக்குனரின் கடைசி படமான ‘ராக தாளங்கள்’ படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. படத்தின் இயக்குனர் திருப்பதி ராஜன் இதுபற்றி கூறும்போது ‘1979-ம் ஆண்டு சில்க் சுமிதாவை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்து சுமிதா என்று பெயர் சூட்டினேன். எனது படமான வீணையும் நாதமும் படத்தில் சில்க்கு அறிமுகம் ஆனார். 



    அவர் நடித்த கடைசி படம் இதுதான். 1995-ல் இந்த படத்தில் சாதி பிரச்சினையை பற்றி பேசி இருந்ததால் சென்சாரில் பிரச்சினை ஆனது. எனவே ரிலீஸ் செய்ய முடியவில்லை. இப்போது ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளேன்’ என்றார். சில்க்கு சுமிதாவின் மரணம் பற்றி கேட்டபோது ‘அவரது குடும்ப வாழ்க்கை நிம்மதியாக அமையவில்லை. அதுபற்றி விசாரித்தால் மழுப்பி விடுவார். 

    தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு என்னை பார்க்க வர சொன்னார். ஆனால் சிலர் என்னை விடவில்லை’ என்று கூறினார். #SilkSmitha #RaagaThaalangal

    அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித், அடுத்ததாக தன்னுடைய தயாரிப்பு மூலம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க இருக்கிறார். #PaRanjith
    அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். அடுத்து இந்தியில் படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் இணைய தொடர்களில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அந்த வரிசையில் ரஞ்சித்தும் ஒரு இணைய தொடர் தயாரிக்க இருக்கிறார். இது மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாக இருக்கிறது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை பல மர்மங்களை உள்ளடக்கியது.

    அவரது வாழ்க்கையில் இருந்து மரணம் வரை பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பாக இது உருவாக இருக்கிறது. சில்க்கின் வாழ்க்கை ஏற்கனவே ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் படமானது. பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை இணைய தொடராக வருகிறது. அதை போல சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறும் உருவாக உள்ளது.
    ×