search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

    • வினுசக்கரவர்த்தி இயக்கிய 'வண்டிச்சக்கரம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா.
    • நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது.

    1980-ல் நடிகரும், இயக்குனருமான வினுசக்கரவர்த்தி இயக்கிய 'வண்டிச்சக்கரம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா. குறுகிய காலத்திலேயே உச்சத்தை தொட்ட சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டிற்காக ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் வரிசையில் நின்றனர்.

    சில்க் ஸ்மிதா கவர்ச்சி மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை', பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' போன்ற படங்களில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ஒரு கட்டத்தில் படங்களின் பாதி வசூலுக்கு காரணம் சில்க் ஸ்மிதா தான் என்கிற அளவிற்கு ஆளுமை செலுத்தினார். அன்று முதல் இன்று வரை சில்க் ஸ்மிதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்நிலையில், நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. இயக்குனர் ஜெயராம் இயக்கும் இந்த படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் இதற்கு முன் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    'சில்க் ஸ்மிதா -குவீன் ஆஃப் தி சவுத்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை எஸ்.பி. விஜய் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    தற்பொழுது படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அனைத்து செய்தி தாளிலும் சில்க் ஸ்மிதாவை பற்றி செய்தி இருப்பதை பார்த்து. யார் இந்த சில்க் சிமிதா என்ற கேள்வியுடன் வீடியோ தொடங்குகிறது.

    அதை தொடர்ந்து சில்க் ஸ்மிதாவாக சந்திரிகா தேவி கவர்ச்சி ஆடையில் நடந்து வந்து நாய்களுக்கு உணவளிக்கிறார். பொது மக்கள் அனைவரும் சில்க் ஸ்மிதாவை வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றனர். இக்கதை சில்கின் ஆரம்ப கால கதை முதல் இறுதிவரை பேசக்கூடிய திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில்க் ஸ்மிதா இதுவரை 500 படங்களில் 20 ஆண்டுகளுக்கு திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    Next Story
    ×