என் மலர்
நீங்கள் தேடியது "Simran"
- சிம்ரன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘THE LAST ONE' என பெயரிடப்பட்டுள்ளது.
- லோகேஷ் குமார் இதற்கு முன் மை சன் இஸ் கே மற்றும் N4 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
நடிகர் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் அண்மையில் அந்தகன் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் திரைப்படம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'THE LAST ONE' என பெயரிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
லோகேஷ் குமார் இதற்கு முன் மை சன் இஸ் கே மற்றும் N4 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய மை சன் இஸ் கே இதுவரை 4 விருதுகள் பெற்றுள்ளது. இந்திய உலக திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீப்க் பக்கா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். படத்தின் பிற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது.
- அறிமுக இயக்குநர் அபிஷான் இப்படத்தை இயக்கவுள்ளார்
நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 5' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
சசிகுமார் கருடன் திரைப்படத்தில் இருந்து வித்தியாசமான கதைக்களத்துடன் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இப்படமும் அந்த இடத்தை பெறும் என நம்பப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
+2
- இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
- படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் தற்பொழுது அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்தின் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இந்த டைட்டில் டீசர் வீடியோ மிகவும் காமெடியாக அமைந்துள்ளது. சிம்ரன் மற்றும் சசிகுமாரின் குடும்பம் ஒரு இலங்கை சார்ந்த குடும்பமாக இருக்கிறது. திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு புதுவித கதைக்களத்துடன் காமெடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
- இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.
'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்ரன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குட் பேட் அக்லி திரைப்படத்தில் சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் வருவார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக நடிகர் அஜித் குமார் மற்றும் சிம்ரன் இணைந்து வாலி திரைப்படத்தில் நடித்து இருந்தனர். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் நடித்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
We are happy and proud to announce our next venture #Productionno4 featuring @trishtrashers and @SimranbaggaOffc - An Action Adventure directed by @MemyselfSRK ... Further updates to follow soon!#SimTrishsNxT. pic.twitter.com/Ju9EAdHkBB
— All In Pictures (@All_In_Pictures) February 13, 2019








