என் மலர்
நீங்கள் தேடியது "singamuthu"
- வடிவேலு மற்றும் சிங்க முத்து இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரசிக்கப்பட்டு வருகிறது.
- இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு படங்களில் இணைந்து நடிப்பதை குறைத்துக் கொண்டனர்.
தமிழ் திரையுலகில் நடிகர் வடிவேலு, சிங்க முத்து இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப்பெற்று ரசிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் காம்பினேஷன் காட்சிகள் என்றால் படம் விற்பனை செய்வதற்கும் உதவியாக இருந்தது. இந்த நிலையில் தான் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டனர். 10 வருடங்கள் ஆன பிறகும் இவர்கள் இருவரும் இணைந்த நகைச்சுவைக் காட்சிகள்தான் தொலைக்காட்சிகளில் அதிகம் காட்டப்பட்டு வருகிறது.

வடிவேலு - சிங்க முத்து
இது குறித்து சிங்க முத்துவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, "நாங்கள் இரண்டு பேரும் நேரில் உட்கார்ந்து பேசினால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்து விடும். யாரோ சொன்னதைக் கேட்டுக்கொண்டு என் மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை சுமத்தினார். இதையெல்லாம் நிரூபிக்க முடிந்ததா? இல்லையே. எல்லாமே பொய். இப்போதும் நான் அவரோடு உட்கார்ந்து பேசத் தயாராக இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அரையும் குறையுமாக இருக்கின்றது.
- எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சம் என்பார்கள், 2 லட்சம் என்பார்கள். பிறகு நிதி இல்லை என்பார்கள். இது காங்கிரஸ், தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது.
சென்னை:
அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் சிங்கமுத்து பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு இடையே சிங்கமுத்துவிடம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் குறித்து கேட்ட போது அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் விடியல் ஆட்சி கொடுப்போம் என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்து?
பதில்:-அவர் ஆசை அப்படி இருக்கிறது. தமிழ்நாட்டை முதலில் சீர் திருத்தட்டும். தமிழக மக்கள் கண்ணீரும், கவலையுமாக இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அரையும் குறையுமாக இருக்கின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழ் மக்கள் வாடி வதங்கி இருக்கிறார்கள். முதலில் தமிழகத்தை சரி பண்ணட்டும். பிறகு எங்கு வேண்டுமானாலும் போகட்டும்.
கேள்வி:-தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க. வுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் செய்வது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறதே?
பதில்:- கமல்ஹாசன் மக்களின் மனங்களை அறியாதவர். மக்களோடு மக்களாக இருக்காதவர். திடீரென ஒரு கட்சி தொடங்கி புரட்சி தலைவர் போலவும், புரட்சி தலைவி போலவும் நாட்டை பிடித்து விடலாம் என்று அவர் கற்பனையில் இருக்கிறார். அது நடக்காது. கமல்ஹாசன் எப்போதும் ஒரு ஓட்டுக் குதிரையில் பயணம் செய்வார் அவ்வளவுதான்.
கேள்வி:- காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் பெண்களுக்கு வழங்கப் படும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதே?
பதில்:- எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சம் என்பார்கள், 2 லட்சம் என்பார்கள். பிறகு நிதி இல்லை என்பார்கள். இது காங்கிரஸ், தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது. இது எதையுமே அவர்களால் செய்ய முடியாது.
கேள்வி:- இந்த தேர்தலில் நடிகர் வடிவேலு மவுனம் காத்து வருகிறாரே?
பதில்:-வடிவேலு மவுனம் காத்து வருவதை என்னை விட பொருத்தமாக யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் நாங்கள் இருவரும் ஒரே திரைத்துறையில் பயணம் செய்தவர்கள். அரசியல் எனக்கு ராசியில்லை என்று அவரே சொல்லிவிட்டாரே? பிறகு ஏன் அவரை அழைக்கிறார்கள்?
கேள்வி:-பிரதமர் மோடி தான் என்னை ராமநாதபுரத்தில் போட்டியிட சொன்னார் என ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்து வருகிறாரே?
பதில்:-அவர் சொல்வது அவருக்கு மட்டும் தானே தெரியும். நாம் எல்லாம் கேட்டோமா? பொய் கூட சொல்லலாம் அல்லவா?
கேள்வி:-பிரசார களத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?
பதில்:-அமோகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டம். நான் மற்றும் திரைப்பட இயக்குநர் நாஞ்சில் அன்பழகன், அருள்மணி உள்ளிட்ட பலர் பல இடங்களுக்கு பிரசாரத்துக்காக சென்று இருக்கிறோம். முன்பு இருந்ததை விட இரட்டை இலைக்கு புது மவுசு வந்துள்ளது. காரணம் 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்ட அவஸ்தைகள் போதாதா? அ.தி.மு.க. ஆட்சி மலராதா? என்று மக்கள் ஏங்கி தவிப்பதை நாங்கள் காண்கிறோம்.
கேள்வி:-இந்தியா கூட்டணி பற்றி உங்கள் பார்வையில்?
பதில்:-இந்தியா கூட்டணி இல்லை அவர்கள் இந்திய கூட்டு களவாணிகள் என்று மக்கள் சொல்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய ஒரு நிலத்தை வேண்டுமென்றே சிங்கமுத்து எனக்கு வாங்கிக் கொடுத்தார்.
- சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
1991-ம் ஆண்டு முதல் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்தேன். என்னுடைய கடும் உழைப்பால் முன்னேறி, 300 படங்களுக்கு மேல் நடித்து, பிரபல நகைச்சுவை நடிகரானேன். இன்றளவும் என்னுடைய நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எதிர்மனுதாரர் நடிகர் சிங்கமுத்துவும், நானும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஒன்றாக பல படங்களில் நடித்தோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், புகழையும் தந்தது.
ஒரு காலக்கட்டத்தில், எனக்கு கிடைக்கும் வரவேற்பு சிங்கமுத்துவுக்கு கிடைக்காததால், அவருக்கு பொறாமை உண்டானது. அதனால், என் மீது பகை கொண்டார். 2015-ம் ஆண்டுக்கு பின்னர், என்னைப் பற்றி மோசமாக பேசத் தொடங்கினார். அதனால், அவர் இல்லாமல் நடிக்கத் தொடங்கினேன்.
இதற்கிடையில் தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய ஒரு நிலத்தை வேண்டுமென்றே சிங்கமுத்து எனக்கு வாங்கிக் கொடுத்தார். இதுகுறித்து சிங்கமுத்துவுக்கு எதிராக எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு சிங்கமுத்து அளித்த பேட்டியில், என்னை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். அதுமட்டுமல்ல ஒரு துளி உண்மைக்கூட இல்லாத பல பொய்களையும் கூறியுள்ளார். இது எனக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை சிங்கமுத்து ஏற்படுத்தியுள்ளார்.
அதனால், 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். என்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.ஜி.ரகுநாதன், என்.செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து, இந்த மனுவுக்கு சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
- நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன். என்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகர் வடிவேலு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக வடிவேலு சித்தரித்தார்.
நடிகர் வடிவேலு சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் அவர் எதிர்கொள்ளவில்லை என ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த வழக்கை தாக்கல் செய்த பின்னரும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
- சிங்கமுத்துவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களின் கருத்துக்களை மட்டுமே பேட்டியின் போது தெரிவித்து இருந்ததாக சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வடிவேலு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை தாக்கல் செய்த பின்னரும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
ஆனால் வழக்கு தாக்கல் செய்த பின் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்றும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசி வாய்ப்பாக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து, சிங்கமுத்துவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும் படி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும் பேட்டி, வீடியோக்களை நீக்கும் படி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்பும்படியும் சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு
- இந்த வழக்கு வரும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களின் கருத்துக்களை மட்டுமே பேட்டியின் போது தெரிவித்து இருந்ததாக சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வடிவேலு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை தாக்கல் செய்த பின்னரும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும் படி சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11 ஆம் தேதி ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் அளித்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தன்னை பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
- இந்த வழக்கு விசாரணைக்காக வடிவேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று சிங்கமுத்து தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், சாட்சி விசாரணைக்காக வழக்கு விசாரணைக்காக வடிவேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடந்து அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டு கொள்ளுமாறு இரு தரப்பினருக்கும் மாஸ்டர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்துவது தொடர்பாக உயர்நீதிமனறம் தான் முடிவெடுக்கும் என்று மாஸ்டர் நீதிமன்றம் தெரிவித்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்



