என் மலர்
நீங்கள் தேடியது "singer Bhavadharani"
- யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
- பவதாரணிக்கு அஞ்சலி செலுத்துவதாக கோட் படக்குழு தெரிவித்துள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்துள்ளனர். இதனால் பாடல்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே ரிலீஸான விசில் போடு பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த பாடல்களை எப்படியும் ஹிட்டாக்கி விடவேண்டுமென யுவன் கடுமையாக உழைத்து வருகிறாராம்.
இந்நிலையில் இந்த படத்தில் மறைந்த பாடகியும் தன்னுடைய சகோதரியுமான பவதாரணி குரலில் ஒரு பாடலை ஏ ஐ தொழில்நுட்பத்தில் கொடுக்கவுள்ளாராம். பவதாரணிக்கு அஞ்சலி செலுத்துவதாக கோட் படக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏ ஐ தொழில்நுட்பத்தில் நடித்துள்ள நிலையில் இப்போது பவதாரணி குரல் இந்த தொழில்நுட்பத்தில் ஒளிப்பதை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.