என் மலர்
நீங்கள் தேடியது "Sirdi Saibaba Temple"
- சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார்.
- ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், முத்தியாலம் பாடு மாவட்டம், விஜயவாடாவை சேர்ந்தவர் யாதி ரெட்டி.
இவர் விஜயவாடாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார். பிச்சை எடுத்த ரூ.1 லட்சத்தை சாய்பாபா கோவில் வளர்ச்சிக்கு நிதியாக கோவில் கவுரவ தலைவர் கவுதம் ரெட்டியிடம் வழங்கினார்.
இது குறித்து கவுதம் ரெட்டி கூறுகையில், யாதி ரெட்டி கோவிலுக்கு நன்கொடை வழங்குவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே பல தவணைகளில் ரூ.8.54 நன்கொடையாக வழங்கி உள்ளார் தற்போது வழங்கியுள்ள ரூ.1 லட்சத்துடன் ரூ.9.54 லட்சம் வழங்கி உள்ளார் என்றார்.
யாதி ரெட்டி கூறுகையில் கோவில் முன்பாக பிச்சை எடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.