என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagangai"

    • காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    காரைக்குடி

    மத்திய அரசை கண்டித்து காரைக்குடி வ.உ.சி. சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் மாங்குடி

    எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.

    இதில் நிர்வாகிகள் பங்கேற்று கோஷம் எழுப்பினர். நகர தலைவர் பாண்டி, கவுன்சிலர் ரத்தினம், வட்டார தலைவர்கள் செல்வம், கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், கண்டனூர் நகர தலைவர் குமார், வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஜெயப்பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரவீன், சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜான்பால், நிர்வாகிகள் நெல்லியான், அப்பாவு, பழ காந்தி, மணச்சை பழனியப்பன், கருப்பையா, தட்சிணாமூர்த்தி, புதுவயல் முகமது மீரா, அருணா, பாலா, மாஸ்மணி, மகளிரணி சூர்யா, நாச்சம்மை, வசந்தாதர்மராஜ், மாரியாயி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    இதேபோன்று தேவகோட்டை ஸ்டேட் வங்கி முன்பு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்ட துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, நகர தலைவர் இரவுசேரி சஞ்சய், இலக்கிய அணி சாமிநாதன், வடக்கு வட்டார காங்கிரஸ் இளங்குடி முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத்தில் நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கேஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (27-ந்தேதி) மாலை 4 மணிக்கு காரைக்குடியில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத் தில் நடக்கிறது.

    மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாரா ளுமன்ற தேர்தலுக்கான சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள். வி.பி.ராஜன் (திருப்பத்தூர்), ந.செந்தில் (காரைக்குடி), மருத்துவர் யாழினி (சிவ கங்கை). எஸ்.தினேஷ் (மானாமதுரை) ஆகியோர் கலந்து கொண்டு பாராளு மன்ற தேர்தல் பணிகள் செய்வது குறித்து ஆலோ சனை வழங்குகின்றனர்.

    மேலும் கூட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடத்துவது குறித்தும், சென்னையில் நடைபெற்ற தி.மு.க. செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    எனவே கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது.
    • கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெளியாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கருஞ்சி வலையபட்டி கிராமத்தில் கரந்தமலை கருப்பர், வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கிடா வெட்டு திருவிழா திருவிழா நடந்தது. முன்னதாக 2-ந் ேததி மது எடுப்பு விழா நடந்தது.

    தொடர்ந்து மறுநாள் அருகருகே அமைந்துள்ள கருப்பருக்கும், வீரமாகாளிக்கும் பூ அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து வாளுக்கு வேலி வகையறா சார்பில் நேர்த்திக்கடனாக 9 கிடாய்கள் வெட்டப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கறி விருந்து உபச்சார விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்றனர்.

    இப்பகுதியில் பிறந்து திருமணம் முடித்துச் சென்ற பெண்கள் இங்கு வந்து சேவல், கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முடிவில் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை வாளுக்கு வேலி வகையறா பங்காளிகள், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

    • எலக்ட்ரீசியன் மாயமானார்.
    • இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே சின்னபெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன், எலக்ட்ரீ சியன். வேலைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் அருண் பாண்டியனின் தந்தை அழகர் கொடுத்த புகாரி ன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.

    • புதிய நகர்மன்ற நல வாழ்வு மையத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை உழவர் சந்தை பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகர் மன்ற நல வாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நல வாழ்வு மையத்தில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், எம்.எல்.ஏ. செந்தில்நாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி மையத்தினை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் வட்ட சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், டாக்டர்கள் கலாதேவி, அபிராமி, கிருஷ்ணவேணி, வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, மற்றும் கவுன்சிலர்கள் ராஜா, அயூப்கான், துபாய்காந்தி, ஜெயகாந்தன், ராமதாஸ், ராபர்ட், விஜயகுமார், வீனஸ்ராமநாதன் மற்றும் சுகாராத ஆய்வாளர்கள். அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பலர் கலந்து கொண்டனர். 

    • சிவகங்கை மாவட்டத்திற்கு சட்ட பேரவை உறுதிமொழிக்குழு நாளை வருகை தருகிறது.
    • அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறும்.

    சிவகங்கை

    தமிழ்நாடு சட்ட பேரவையின் 2023-24-ம் ஆண்டிற்கான அரசு உறுதிமொழி குழுத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி , பழனியாண்டி , மணி , மனோகரன், மோகன் , ராமலிங்கம், வில்வநாதன், ஜெயக்குமார் ஆகியோருடன் வருகிற நாளை (22-ந்தேதி) சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டமும் நடைபெறும். இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    மானாமதுரை நகராட்சி வளமீட்பு பூங்காவில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உத்தரவின்பேரில் ஆணையாளர் கண்ணன் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மக்கும் குப்பைகள் உரமாக்குவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சுரைக்காய், பூசணிக்காய், பலாப்பழம் ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் பூங்காவில் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், மேற்பார்வையாளர் கார்த்திக், ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • புதிய ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

    சிவகங்கை

    தென்னக ரெயில்ேவ கமிட்டி கூட்டத்தில், மதுரை மண்டல ரெயில்வே கமிட்டி உறுப்பினர் சையது இப்ராகிம் பேசியதாவது:-

    பல்லவன் விரைவு ரெயிலை மானாமதுரை வரை நீட்டிப்பு செய்ய கடந்த 3 வருடங்களாக கோரிக்கை வைத்தோம். ஆனால் ரெயில்வே நிர்வாகம் அதனை ஏற்கவில்லை. மானாமதுரையில் அதற்கு தேவையான புதிய ஏற்பாடுகளை செய்து கொடுத்து பல்லவன் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாரம் ஒருமுறை இயங்கும் ராமேசுவரம் - கோவை ரெயிலை ராமேசுவரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமையும், கோவையில் இருந்து வெள்ளிக்கிழமையும் இரவு நேர சேவையாக வழங்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், நாட்டரசன் கோட்டை ரெயில் நிலையத்திற்கு நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு ஆகும் மதிப்பீட்டை இதுவரை வழங்கவில்லை. உடனே அதனை வழங்க வேண்டும்.

    செட்டிநாடு ரெயில் நிலையத்தில் மீண்டும் ரெயில்கள் நிற்பதற்கு பலமுறை கோரிக்கை வைத்தோம். எப்பொழுது ரயில் அங்கு நிற்கும் ?. 2019-ம் ஆண்டில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கோரிக்கையின் அடிப் டையில் செங்கோட்டை எழும்பூர் ரெயில் சேவை தொடங்கியது. பின்னர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு அந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மானாமதுரை மற்றும் சிவகங்கை ரெயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து பெங்களூருவுக்கு சிவகங்கை, காரைக்குடி வழியாக புதிய ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

    சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பாம்பன் ரெயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைக்க வலியுறுத்தி உள்ளோம்.

    எங்களை போன்ற உறுப்பினர்கள் அவசரகால பயண இட ஒதுக்கீடு பெற வாட்ஸ் அப் அல்லது இ-மெயில் முகவரியை வழங்கிட வேண்டும். மேலும் 2019-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே கோட்டயம், செங்கோட்டை, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, நாகப்பட்டினம் வழியாக விரைவு தொடர்வண்டி சேவையை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • 5-வது அமைப்பு தேர்தல் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் ம.தி.மு.க.உட்கட்சி தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட செயலாளராக காரைக்குடியை சேர்ந்த பசும்பொன் மனோகரன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வைகோவின் மகன் துரை வைகோ ம.தி.மு.க.வின் செயலாளராக பதவியேற்க அக்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கட்சியை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ம.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலான 5-வது அமைப்பு தேர்தல் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ம.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சிவகங்கையில் உள்ள தனியார் மகாலில் துணை பொது செயலாளரான ராஜேந்திரன் தேர்தல் ஆணையாளராகவும், பொன்முடி, செல்வராஜ் துணை ஆணையாளராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்று மாவட்ட செயலாளராக காரைக்குடியை சேர்ந்த பசும்பொன் மனோகரனும், அவைத்தலைவராக திருப்பத்தூர் கருப்பூரை சேர்ந்த சந்திரன், பொருளாளராக காளையார்கோவிலை சேர்ந்த சார்லஸ் மற்றும் துணை செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 17 பேர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர்.

    • ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கை அணி வெற்றி பெற்றது.
    • மாணவர்களும் பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.

    காரைக்குடி

    மாநில அளவிலான 11-வது ஜூனியர் ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது.இதில் சிவகங்கை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்ட அணி கள் பங்கேற்று விளையாடி யது.

    சிவகங்கை மாவட்ட அணி லீக் சுற்றுகளில் திண் டுக்கல், திருச்சி அணிகளை வீழ்த்தி காலிறுதி போட்டி யில் மதுரையை வென்றது.பின்பு நடைபெற்ற அரை இறுதி போட்டியில் செங்கல் பட்டு அணியை வென்று இறுதி போட்டிக்கு முன் னேறியது. இறுதி போட்டி யில் கோயமுத்தூர் அணியி டம் தோல்வி அடைந்து 2-ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றது.

    சிவகங்கை மாவட்ட அணியில் விளையாடிய தருண், தீபேஷ், வெற்றிவேல், ஸ்ரீராம், கிஷோர், விஷ்வா, இளமாறன், பிரனேஷ், ஜஸ்வந்த் பெருமாள், ஆதித்யா, காஞ்சி ரித்தீஷ், அபிஷேக் ஆகிய மாணவர் களை ஆசிரியர்கள் பெற் றோர்கள் பாராட்டினர்.சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் தபேந்தி ரன், பாலா, வைத்தீஸ்வரன், தயாளன் ஆகியோர்களுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.

    • சதுரங்க போட்டி நடந்தது.
    • மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

     சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்தின் சாணக்யா அகாடமி ஒருங்கிணைப்பில் சதுரங்க போட்டி மான்போர்ட் பள்ளியில்நடந்தது. 7 வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 15 வயது என 5 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளில் இருந்து மொத்தம் 235 மாணவர்கள் கலந்து கொண்டனர். மான்போர்ட் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் இக்னேஷியஸ் தாஸ் தலைமை வகித்தார்.

    சதுரங்க போட்டிகளுக்கு சிவகங்கை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ரமேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாலையில் நடைபெற்ற போட்டிகளுக்கு சிவகங்கை மருத்துவக்கல்லூரி தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை பிரிவின் துறை தலைவர் டாக்டர் ஜிம் திவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். போட்டி முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை சாணக்கியா அகாடமி ஒருங்கிணைத்து நடத்தியது.

    • கல்லூரி கருத்தரங்கு நடந்தது.
    • பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரியில் வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை சார்பில் "டிஜிட்டல் உலகில் தொழில்முனைவோர்களுக்கான புதுமை திட்டங்கள்" என்னும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். முதல் அமர்வில் நைஜீரியா, ஆப்பிரிக்கா பல்கலைக்கழகம், மேலாண்மை அறிவியல் துறை, இணைப்பேராசிரியர் ராஜன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பேராசிரியர் வெங்கடேசன் பங்கேற்றார். பேராசிரியர் அருள் சேவியர் விக்டர் நன்றி கூறினார்.

    2-வது அமர்வில் பேராசிரியர் அரபாத் அலி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உஸ்பெகிஸ்தான், தொழில் நுட்பத்துறை இணைப்பேராசிரியர் சுபைர் அலி கலந்துகொண்டார். முடிவில் பேராசிரியர் அரபாத் ஹசன் நன்றி கூறினார். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன மேலாண்மை துறை, மூத்த பேராசிரியர், வேதிராஜன் கலந்துகொண்டு பேசினார். பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். 

    ×