என் மலர்
நீங்கள் தேடியது "Sivalingam"
- மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நச்னா என்ற இடத்தில் அமைந்துள்ளது, சவுமுக்நாத் மந்திர்.
- சிவலிங்கத்தின் நான்கு பக்கத்திலும் பக்கத்திற்கு ஒன்றாக சிவபெருமானின் முகமும் வடிக்கப்பட்டிருக்கிறது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நச்னா என்ற இடத்தில் அமைந்துள்ளது, சவுமுக்நாத் மந்திர். இந்த ஆலயம் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கின்றனர், வரலாற்று ஆய்வார்கள்.
இந்த ஆலயத்திற்குள் சிவலிங்கத்தின் நான்கு பக்கத்திலும் பக்கத்திற்கு ஒன்றாக சிவபெருமானின் முகமும் வடிக்கப்பட்டிருக்கிறது. விஷ்கிரகஹன் ரூப், பரினய் ஷாந்த் ரூப், அர்த்தனரேஸ்வரர் ரூப், க்ரூம் ரூப் என்று இந்த நான்கு முகங்களையும் வடமாநில பக்தர்கள் அழைக்கின்றனர்.
சிவனைப் பற்றி கூறும் புராணங்கள், அவருக்கு ஐந்து முகங்கள் உண்டு என்று சொல்கின்றன. கிழக்கு திசை நோக்கிய முகம் தத்புருஷம், மேற்கு திசை நோக்கிய முகம் சத்யோஜாதம், தெற்கு நோக்கிய முகம் அகோரம், வடக்கு திசை நோக்கிய முகம் வாமதேவம், மேல் நோக்கிய முகம் ஈசானம் என்று அழைக்கப்படுகிறது.
மேற்கண்ட சவுமுக்நாத் ஆலயத்திலும், இந்த முறைப்படியே சிவலிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவனின் முகங்கள் வடிக்கப்பட்டிருப்பதாகவும், மேல்நோக்கிய ஈசானிய முகத்திற்கு பதிலாக, பாணத்தின் மேற்பகுதியே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
- கிரிவலம் வரும் போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம்.
- அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம். இவை ஒவ்வொன்றும், எட்டுத் திசைகளின் காவல் தெய்வங்கள், வெவ்வேறு ராசியின் அதிபதிகள், அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.
* ரிஷபம், துலாம் - இந்திர லிங்கம்
* சிம்மம் - அக்னி லிங்கம்
* விருச்சிகம் - எம லிங்கம்
* மேஷம் - நிருதி லிங்கம்
* மகரம், கும்பம் - வருண லிங்கம்
* கடகம் - வாயு லிங்கம்
* தனுசு, மீனம் - குபேர லிங்கம்
* மிதுனம், கன்னி - ஈசான்ய லிங்கம்
- சிவலிங்க வீதி உலாவின் போது சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
- ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிபட ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.
காஞ்சீபுரம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் 8 அடி அகலம்,8 அடி உயரத்தில 5 முகங்கள் உடைய ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்களால் ஆன சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது.
இதனை பூ வியாபாரி கார்த்திகேயன் என்பவர் தலைமையில் ஏராளமான சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து ராஜவீதிகளில் வீதி உலாவாக எடுத்து வந்தனர்.
இந்த பிரம்மாண்ட ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் மலர்தூவி வரவேற்று பயபக்தியுடன் வழிபட்டனர். பூக்கடை சத்திரத்தில் தொடங்கிய சிவலிங்கம் உலா பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை அடிவாரம் அடைந்ததும் அங்குள்ள உள்ள நித்ய அன்னதான சத்திரத்தின் தலைவர் விஸ்வநாதனிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
சிவலிங்க வீதி உலாவின் போது சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன. ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிபட ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.
- சிவம் என்றால் மங்களம்.
- லிங்கம் என்றால் அடையாளம்.
சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது.
சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம்.
சிவ ஆகமப்படி 16 வகையான பொருள்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுதல் பெரும் சிறப்பென்று ரிஷிகள் கூறுகின்றனர்.
1. புற்றுமண் லிங்கம்: முத்தி
2. ஆற்று மணல் லிங்கம்: பூமிலாபம்
3. பச்சரிசி லிங்கம்: பொருள் பெருக்கம்
4. சந்தன லிங்கம்: எல்லா இன்பங்கள்
5. மலர்மாலை லிங்கம்: நீண்ட வாழ்நாள்
6. அரிசி மாவு லிங்கம்: உடல் வலிமை
7. பழம் லிங்கம்: நல்லின்ப வாழ்வு
8. தயிர் லிங்கம்: நல்லகுணம்
9. தண்ணீர் லிங்கம்: எல்லா மேன்மை
10. சோறு (அன்னம்) லிங்கம்: உணவுப்பெருக்கம்
11. முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) லிங்கம்: முக்தி
12. சர்க்கரை, வெல்லம் லிங்கம்: விரும்பிய இன்பம்
13. பசுவினசாணம் லிங்கம்: நோயற்ற வாழ்வு
14. பசுவெண்ணெய் லிங்கம்: மனமகிழ்ச்சி
15. உருத்திராட்ச லிங்கம்: நல்ல அறிவு
16. திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லா வகை செல்வம்.
- மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- இந்த சிவலிங்கத்திற்கு, 28 வருடத்திற்கு ஒருமுறை பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நார்த்தாமலை. இங்குள்ள அறிவர் கோவிலின் மலை உச்சியில் இருக்கிறது, நவால் என்ற பெயருடைய சுனை. சுமார் 10 அடி ஆழம் கொண்ட இந்த சுனையின் அடியில், ஒரு பக்கத்தில் குடைவரை சிவலிங்கம் உள்ளது. சுனையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால், இந்த சிவலிங்கம் தண்ணீரில் மூழ்கிய நிலையிலேயேதான் தென்படும். மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சுனையின் உள்ளே தண்ணீருக்குள் ஒரு மண்டபத்தில் காட்சியளிக்கும் இந்த சிவலிங்கத்திற்கு, 28 வருடத்திற்கு ஒருமுறை பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
2018-ம் ஆண்டு இந்த சுனையில் இருந்த நீர் முழுவதையும் மின் மோட்டார் மூலம் அகற்றிவிட்டு, பின்பு வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது பாதாளத்தில் இருக்கும் இந்த சிவலிங்கம் மீது சூரிய ஒளிபட்டது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக தண்ணீருக்குள்ளேயே இருந்தும், இந்த சிவலிங்கத்தின் மீது பாசி எதுவும் படியவில்லை என்பதும் அனைவருக்கும் வியப்பை அளித்திருக்கிறது. சுனையை சுற்றிலும் இருக்கும் பாறை, மலைகளில் எல்லாம் பாசி படர்ந்திருக்கும் நிலையில், சிவலிங்கத்தின் மீது பட்டும் பாசியே இல்லாமல் இருந்தது, இறையருள் தான் என்று பலரும் அதிசயித்தனர்.
இந்த குடைவரை சிவலிங்கத்தை, 1876-ம் ஆண்டு, புதுக்கோட்டை மன்னனின் மனைவி, நீர் முழுவதையும் வெளியேற்றிய பிறகு வழிபட்டதாக கல்வெட்டு குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. அதன் பிறகு யாரும் நார்த்தாமலை குடைவரை சிவலிங்கத்தை பார்த்து வழிட்டதாக கல்வெட்டுகள் இல்லை. இதன் ஒரு பக்கத்தில் குடைவரை சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. இந்த குடைவரை பல்லவர்கள் அல்லது முத்தரையர் மன்னர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- கோடை காலத்தில் சிவலிங்கம் வெளியே தெரியும்.
- குளிர்காலங்களில் சிவலிங்கம் நீருக்குள் மூழ்கியிருப்பதைக் காண முடியும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கர் கோட்டையில் இருக்கிறது, 'கவ்முக் குந்த் (கோமுகம்) நீர்த்தேக்கம்'. 'கவ்முக்' என்பது 'பசுவின் வாய்' என்று பொருள்படும். பசுவின் வாய் வடிவப் புள்ளியில் இருந்து பள்ளமாக அமைந்த பகுதிக்கு நீர் பாய்ந்து, அதனை நீர்த்தேக்கமாக மாற்றுகிறது. இதனை 'கோமுகம்' என்று அழைக்கிறார்கள்.
புனித தலங்களுக்கு யாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் பலரும், தங்களின் யாத்திரையின் நிறைவாக, இந்த நீர்த்தேக்கத்திற்கு வந்து அங்குள்ள சிவலிங்கத்தை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த இடம், சித்தோர்கரின் 'தீர்த் ராஜ்' என்று புகழப்படுகிறது.
இந்த நீர்த்தேக்கத்தில் விழும் நீரானது, வருடம் முழுவதும் பாய்கிறது. கோடை காலத்தில் நீரின் வேகம் குறைவாக இருக்கும். இதனால் சிவலிங்கம் வெளியே தெரியும். ஆனால் மழை மற்றும் குளிர்காலங்களில் அதிகமாக நீர்வரத்து இருப்பதால், சிவலிங்கம் நீருக்குள் மூழ்கியிருப்பதைக் காண முடியும். இந்த நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறார்கள்.
- புனித தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.
- ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார்.
புனித தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.
பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.
கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது.
அவ்வாறு கிரிவலத்தின் மேன்மையை உணர வேண்டுமானால் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.
அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு.
ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார்.
அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது.
ஒரு காட்டுப் பூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார்.
பூனையும் தன்னைக் காத்துக் கொள்ள ஓடத்துவங்கியது.
துரத்திய ராஜாவும், துரத்தப்பட்ட பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர்.
ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார்.
காரணம் மலையை சுற்றி வந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டுபூனையும் மோட்சம் அடைந்து மேலோகம் சென்றதாம்.
ஆனால் ராஜா செல்லவில்லை. காரணம், ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம்.,
பூனை தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியும், குதிரை பூனையை வேட்டையாட மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் மோட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.
- தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.
- நீரை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.
தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.
கிரிவலம் வரும் பொழுது மிகவும் மெதுவாக நடக்க வேண்டும்.
இறை சிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது.
கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள்.
எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும்.
நீரை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.
மலையை ஒட்டி ஒரு காட்டு வழிச்சாலை இன்றும் உண்டு.
தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் அந்த பாதை எது என புலப்படும் இது உள்வழிப்பாதை.
இது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு.
ஒரு சிவலிங்கத்தை கவனித்தீர்கள் என்றால் மேல் பகுதியிலிருந்து கீழ்பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும்.
லிங்கப்பாதை என்ற இந்த தன்மையைத்தான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள்.
பவுர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும்.
முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை.
அதனால் காட்டுப்பாதையாக இருந்தால் பவுளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள்.
தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம்.
- அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை.
- இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை விசேஷ வழிபாடு நடக்கும்.
மலைவலம் வர சிறந்த நாள் பவுர்ணமி, சிவராத்திரி கிரிவலம் மிகச்சிறப்பு என்று முன்பே பார்த்தோம்.
இதைவிட அதி சூட்சுமமான "வியா தீபாத யோக நாள்" அன்று மலை வலம் வந்தால் நினைத்த காரியம் சித்தி அடையும் என்று கூறுகின்றனர்.
இந்த நாளை பாம்பு பஞ்சாங்கம் மற்றும் அர்ச்சகர் பஞ்சாங்கங்களில் மட்டுமே மதிப்பிடுவதாகவும் கூறுகின்றனர்.
அருணாசலேஸ்வரருக்கு சிறந்த நாள்
சிவன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கட்கிழமையாக இருக்கும்.
ஆனால் திருவண்ணாமலை அக்னி மலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு.
அருணம் என்றால் சிவப்பு என்று பொருள். இந்த கோவில் அக்னி கோவில்.
அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை. அக்னிக்குரிய காரகன் அங்காரகன்.
ஆகவே இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும்.
அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.
- அருணாசலத்தில் மலையே லிங்கமாக உள்ளது.
- அருணாசலத்தின் கீழ்ப்புறம் ஒரு மலையில் இந்திரன் இருந்து இறைவனைத் துதிக்கிறான்.
திருவண்ணாமலையை முக்தி நகரம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் போற்றுகிறார்கள்.
அது விஷ்ணுவும், பிரம்மனும் பூஜித்த தலமாகும்.
அருணாசலம், இன்று, நேற்று தோன்றியதல்ல.
ஏழுலகமும், ஆகாயமும் என்று உண்டாயினவோ அன்றே உண்டானது.
அசுர லிங்கம், தைவ லிங்கம், மானிட லிங்கம், சுயம்பு லிங்கம் என்று தலங்கள் தோறும் எத்தனையோ லிங்கங்கள் இருக்கும்.
ஆனால், அருணாசலத்தில் மலையே லிங்கமாக உள்ளது.
முன்னொரு காலத்தில் சிவனே கிரியானான்.
அருணாசலத்தின் கீழ்ப்புறம் ஒரு மலையில் தேவர் கோனாகிய இந்திரன் இருந்து இறைவனைத் துதிக்கிறான்.
தென்புறக் குன்றில் இமயன் இருந்து வணங்குவான்.
மேற்புறத்தில் வருணன் கைகூப்பிப் பணிகிறான்.
வடதிசைக் குன்றில் குபேரன் இருந்து தோத்திரம் செய்கிறான்.
மற்ற நான்கு திக்குகளில் இருக்கின்ற மலைகளில் தங்கி வாயு, அக்கினி, ஈசான்ய, நிருதிகள் வணங்குவர்.
இவற்றைச் சுற்றி உள்ள மற்ற மலைகளில் தேவர்களும், சித்தர்களும், அஷ்ட வசுக்களும் இருந்து இறைவனைப் போற்றுகின்றனர்.
வேள்வி, தியானம், யோகம் என்று எத்தனை புரிந்தாலும் அண்ணாமலையானை எண்ணாவிடில் முக்தி என்பது சாத்தியம் இல்லை.
இத்தகைய பெரும் சிறப்புகளை கொண்ட இதனை, "எத்தலத்துக்கும் மூலம் அருணாசலம்" என்று உரைத்தார் நந்தி தேவர்.
- மலை சுற்றும் பாதையில் இரண்டாகத் தெரியும். அது அர்த்த நாரீஸ்வர தத்துவம்.
- மலையின் மேற்றிசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். அது திரிமூர்த்தி தத்துவம்.
திருவண்ணாமலை தலத்தில் எட்டு திசையில் இருந்து பார்க்கும் போதும் மலை எட்டுவித அமைப்பாய் தெரியும்.
மற்ற இடங்களில் மலை மேல் கடவுள். இங்கு மலையே கடவுள்.
இங்கு மலை வடிவில் சுயம்பு என்பதால், தீபத் திருநாளன்றி வேறெந்த நாளிலும் மக்கள் மலை ஏறுகிறதில்லை.
இத்தனை பெரிய சுவாமிக்கு எப்படி அபிஷேக ஆராதனை நடத்துவது?
சாமான்ய உள்ளங்களில் மருட்சி ஏற்படும். எனவே தான் ஈசன் மலை அடிவாரத்தில் ஒரு சிறிய சுயம்பு லிங்கமாய் அமர்ந்து கொண்டார்.
இதுதான் இன்றைய அண்ணாமலையார் கோவில்.
கீழ்த்திசையில் இருந்து நாம் மலையைப் பார்க்கின்ற போது ஒற்றையாய் தெரியும். அது ஏகலிங்க தத்துவம்.
மலை சுற்றும் பாதையில் இரண்டாகத் தெரியும். அது அர்த்த நாரீஸ்வர தத்துவம்.
மலையின் மேற்றிசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். அது திரிமூர்த்தி தத்துவம்.
மலையை சுற்றி முடிக்கின்ற கட்டத்தில் ஐந்து முகங்களாகக் காணப்படும். இது ஈஸ்வரனின் பஞ்சமுக தத்துவம்.
இப்படி அநேக தத்துவங்களை தன்னுள் அடக்கி அமைதியாய் கொலுவீற்றிருக்கிறது அண்ணாமலை.
- இறைவன்,தேவியை ஆட்கொண்டு தம் இடப்பாகத்தை தேவிக்கு அருளியதாக புராணம் கூறுகிறது.
- மலைச்சரிவின் ஒரு விளிம்பில், ரிஷப வாகனத்தின் தலைப்பகுதி மட்டும் தெரியும்.
இறைவனின் இடப்பாகத்தைப் பெற பார்வதிதேவி திருவண்ணாமலை கோவிலில் தவம் இயற்றி அப்பேற்றைப் பெற்றார்.
தேவியின் தவ வலிமை கண்டு இரங்கிய இறைவன் "மலை சுற்றும் வழியில் ரிஷப வாகனத்தில் வந்து ஆட்கொள்வேன்" என்றார்.
அதன்படி தேவி மலைவலம் வரும்போது நிருதி திசையின் திருப்பத்தில், ரிஷப வாகனத்தில் வந்த இறைவன்,
தேவியை ஆட்கொண்டு தம் இடப்பாகத்தை தேவிக்கு அருளியதாக புராணம் கூறுகிறது.
நிருதி லிங்கத்தை அடையும் இடத்திலிருந்து தெற்கிலிருந்து மேற்கு முகமாகத் திரும்பும் வளைவில்,
மலை வலம் வருவோர் நின்று மலையைப் பார்த்தால் மலைச்சரிவின் ஒரு விளிம்பில்,
ரிஷப வாகனத்தின் தலைப்பகுதி மட்டும் தெரியும்.
செங்கம் செல்லும் பாதையில் இருந்து பார்த்தாலும் இவ்வரிய காட்சியைக் காணலாம்.
பதிகங்கள் பிறந்த தலம்
திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய சமயப் பெரியார்கள் அண்ணாமலையானைப் பற்றி பாடி, பதிகங்களையும் இயற்றியுள்ளனர்.
முக்கியமாய் மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இத்தலத்தில் சிறந்தது.
இதுவுமன்றி, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம் கந்தரனுபூதி, திருவகுப்பு முதலிய முருகப் பெருமான் திருவடிப்புகழ் நூல்கள் இங்கு தான் இயற்றப்பட்டன.