என் மலர்
நீங்கள் தேடியது "Sivankutty"
- PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரளா கையெழுத்திடவில்லை.
- கேரளாவுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும்
கேரளாவின் பொதுக் கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று கேரளா கல்வி அமைச்சர் சிவன்குட்டி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய பங்கின் நிலுவைத் தொகை முறையே ரூ.280.58 கோடி மற்றும் ரூ.513.54 கோடி என்றும், 2025-26 ஆம் ஆண்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட தொகை ரூ.654.54 கோடி என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், கேரளாவின் கல்வி நிதிக்கான பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை வழங்குவதற்கும் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும் கேரளாவைப் பாராட்டும் மத்திய அரசு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
- மாணவியின் இ-மெயிலை தொடர்ந்து அமைச்சர் சிவன்குட்டி மாணவி அவந்திகாவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
- அமைச்சர் எனது புகாருக்கு பதில் அளிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பாலரிவட்டம் பகுதியை சேர்ந்த அவந்திகா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது சைக்கிள் கடந்த மாதம் 21-ந்தேதி அன்று திருட்டு போனது. திருடன் சைக்கிளை திருடியதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த அவந்திகா, கல்வி அமைச்சர் சிவன்குட்டிக்கும் தனது சைக்கிள் திருட்டுபோன தகவலை இ-மெயில் செய்துள்ளார்.
மாணவியின் இ-மெயிலை தொடர்ந்து கல்வி அமைச்சர் சிவன்குட்டி மாணவி அவந்திகாவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இதுதொடர்பாக மாணவி அவந்திகா கூறுகையில்,
கல்வி அமைச்சர் சிவன்குட்டி எனது புகாருக்கு பதில் அளிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் இரண்டு நாட்களுக்கு பின்னர் என்னை தொடர்புகொண்டு திருட்டு போன சைக்கிள் குறித்து விசாரித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் எனக்கு புதிய சைக்கிள் ஒன்றை பரிசளித்தார். அமைச்சரிடம் இருந்து புதிய சைக்கிள் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரித்தார்.