search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivanmalai murugan temple"

    • விழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
    • திருகல்யாண நிகழ்வில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது என 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயம் சிவன்மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 14-ந் தேதி தொடங்கியது.விழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.கோவிலில் நேற்று முன்தினம் நடந்த சூரசம்ஹாரத்தில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார். நேற்று முருகனுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருகல்யாண வைபவம் நடந்தது.திருகல்யாண நிகழ்வில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது என 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மந்திரங்கள் ஓதப்பட்டு, ேஹாமம் வளர்க்கப்பட்டு, மாங்கல்ய வழிபாடு செய்யப்பட்டது. திருக்கல்யாண வைபவ முடிவில் முருகப் பெருமானுக்கு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடைசியாக பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்தனர்.திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் ஏற்பாடுகளை சிவன்மலை கந்த சஷ்டி விரத குழுவினர் செய்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் காங்கயம் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

    • கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா 18-ந்தேதி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.
    • 21-ந் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 14-ந்தேதி தொடங்கி, நவம்பர் 21-ந்தேதி வரை ஒரு வார காலம் நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி முதல் காலை மணி 10.30 மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருஉலா காட்சியும் நடைபெற உள்ளது.

    கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா 18-ந்தேதி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் காலையில் அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. 21-ந் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் அன்னக்கொடி (பொறுப்பு), கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • தமிழகத்தின் 8-ம் படைவீடு என்று முருக பக்தர்களால் வணங்கி வரும் இக்கோவில் கலை அம்சத்துடன் அமைந்துள்ளது
    • ஈரோட்டில் இருந்து கூடுதலாக செயல் அலுவலர் கவனித்து வருகிறார்.

    காங்கயம்:

    காங்கயம் சிவன்மலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான முருகர் - வள்ளி, தெய்வானை கோவில் உளளது.தமிழகத்தின் 8-ம் படைவீடு என்று முருக பக்தர்களால் வணங்கி வரும் இக்கோவில் கலை அம்சத்துடன் அமைந்துள்ளது.500 படிக்கட்டுகளில் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    தைப்பூசம்,வைகாசி விசாகம் ,கந்த

    சஷ்டி உள்பட முக்கிய விழா காலங்களில் பக்தர்கள் நேரில் வந்து தரிசனம் செய்கின்றனர். பல லட்சம் ரூபாய் வரை நன்கொடை , பொருள் உபயம் (தங்கம், வெள்ளி ) உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனர்.தங்க ரதம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.2 முறை மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் கடந்த 1 1/4 வருடமாக பல முறை கோரிக்கை விடுத்தும் சிவன்மலை கோவில் நிர்வாகத்திற்கு என ஒரு செயல் அதிகாரி நியமிக்கப்படவில்லை.

    ஈரோட்டில் இருந்து கூடுதலாக செயல் அலுவலர் கவனித்து வருகிறார் . அவரும் மாதம் 2முறை மட்டுமே சிவன்மலை கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். .இதனால் பக்தர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,சேவகர்கள் ,உபய தாரர்கள் மற்றும் கோவிலின் அலுவலர்கள் ,ஊழியர்கள் என பலதரப்பட்டோரும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் கோவிலின் செயல்பாடுகள் ,நடைமுறை தகவல்கள் ஆகியவற்றை அறிய முடியாத நிலையும் நிலவி வருகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செயல் அலுவலர் நியமிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது.
    • கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது.

    நிகழ்ச்சி அ.தி.மு.க. காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. காங்கயம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்சன், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் மணி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வெளி உணவுப் பொருள்களை விநியோகிக்க அனுமதிக்கக் கூடாது என பக்தா்கள், பொதுமக்கள் கோவில் நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.
    • திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற முருகன் மலைக் கோவில் உள்ளது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற முருகன் மலைக் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தா்கள், தாங்கள் வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வரும் உணவுப் பொருள்களை கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு விநியோகித்து வந்தனா்.

    அவா்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்கள் எந்த அளவுக்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எதுவும் தெரியாததால், வெளி உணவுப் பொருள்களை விநியோகிக்க அனுமதிக்கக் கூடாது என பக்தா்கள், பொதுமக்கள் கோவில் நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.இதையடுத்து, வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை இக்கோவிலுக்கு வரும் பக்தா்களுக்கு வழங்கக் கூடாது என சிவன்மலை முருகன் கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிவன்மலை ஊராட்சித்தலைவர் கே.கே.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.
    • அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சிவன்மலை கோவில் ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சிவன்மலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், சிவன்மலை ஊராட்சித்தலைவர் கே.கே.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.

    இதில் சிவன்மலை ஊராட்சி துணைத்தலைவர் டி.சண்முகம், ஆதித்தமிழர் பேரவையின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சிவன்மலை கோவில் ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்படும்.
    • கோயில் வளாகத்தில் அறிவிப்புப் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

    காங்கேயம் :

    சந்திர கிரகணத்தையொ ட்டி, காங்கயம் சிவன்மலை முருகன் கோயிலில் செவ்வா ய்க்கிழமை (நவம்பா் 8) நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திர கிரகணம் இன்று நடைபெறுவதையொட்டி, திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வா ய்க்கிழமை மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்படும். இது குறித்து கோயில் வளாகத்தில் அறிவிப்புப் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமை காலை வழக்கம்போல கோயில் திறக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக்காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார்.
    • துப்பட்டா இல்லாத உடை மற்றும் லெக்கின்ஸ் உடையில் பெண்கள் கோவிலுக்குள் அனுமதியில்லை என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோவில்களில் முக்கியமான கோவிலாகும்.

    வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத சிறப்பு இந்த கோவிலுக்கு உள்ளது. அது இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக்காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார்.

    அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்த பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம்.

    இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும்.

    இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையானதாகவும் இருக்கலாம். எதிர்மறையானதாகவும் இருக்கலாம். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிவன்மலை சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

     இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு கோவிலின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் துப்பட்டா இல்லாத உடை மற்றும் லெக்கின்ஸ் உடையில் பெண்கள் கோவிலுக்குள் அனுமதியில்லை என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே ஆடை கட்டுப்பாடு பற்றி அறியாமல் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் கனவில் வந்து ஆண்டவன் உத்தரவிட்டதின் பேரில் சிவன்மலை முருகன் கோவிலில் உள்ள பேழையில் அம்பு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன் மலையில் சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்பம்சம் கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்று பக்தர்களின் கனவில் வரும் பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்வதாகும். அந்தப் பொருள் கோவில் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

    சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இந்த பொருளை வைத்துப் பூஜை செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.

    இப்படி, கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லை. வேறொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில் பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும்.

    இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை. இந்தப் பொருள் தேசிய அளவில் ஏற்றம் அல்லது இறக்கம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

    கடைசியாக கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அருகம்புல், கீழா நெல்லி வேர், மிளகு ஆகியவை பூஜை செய்யப்பட்டு வியாழக்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டி.கென்னடி என்ற பக்தரின் கனவில் சிவன்மலை முருகன் வந்து அம்பு வைத்து பூஜிக்குமாறு கூறியதால் கடந்த 6-ந்தேதி செம்பினால் செய்யப்பட்ட அம்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த அருகம்புல், கீழாநெல்லி வேர், மிளகு ஆகியவை நீக்கப்பட்டு, தற்போது அம்பு பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த முறை திருவண்ணாமலையை சேர்ந்த பெட்ரோல் பங்கு உரிமையாளர் கென்னடி என்பவர் கனவில் இந்த பொருள் வந்தது. கென்னடி என்பது கிறிஸ்வரா என்று கேட்டபோது அமெரிக்க தலைவர் ஜான் கென்னடியின் நினைவாக வைக்கப்பட்ட பெயர். மற்றபடி நான் தீவிர முருக பக்தர் என்றார்.

    பக்தர்கள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உள்ள அம்பை பார்வையிட்டு வணங்கினர். #Tamilnews
    ×