search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "skm"

    • 2020-2021-ல் டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் ஓராண்டிற்கு மேலாக போராட்டம் நடத்தினர்.
    • அதன்பின் டெல்லி மாநிலத்திற்கு டிராக்டர் பேரணி மேற்கொள்ள முடிவு செய்தனர்.

    சட்டப்பூர்வமான எம்எஸ்பி (legal guarantee to MSP), விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கமான சம்யுக்த் கிஷான் மோர்ச்சா (SKM) தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க நேரம் கேட்கப்படும். மற்றும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்கள் ஆகியோருக்கு விவசாயிகள் போராட்டம் குறித்த குறிப்பாணை வழங்கப்படும்.

    2020-2021-ல் டெல்லி பஞ்சாப்- டெல்லி- அரியானா மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. அதன்பின் டெல்லி நோக்கி டிராக்டர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த முறை மாநிலம் தழுவிய போராட்டம் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலங்களில் கவனம் செலுத்துவோம்.

    எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான போராட்ட முறையை பயன்படுத்தமாட்டோம். நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

    விவசாயிகள் போராட்டத்தால் மக்களவை தேர்தலில் ஆதிக்கமான 159 புறநகர் தொகுதிகளில் பாஜக தோல்வியை சந்திக்க நேரிட்டது என எஸ்கேஎம் தலைவர்கள் தெரிவித்தனர்.

    ஆகஸ்ட் 9-ந்தேதி வெள்ளையனே வெளியேறு என்பதை போன்று கார்பரேட்கள் வெளியேறு அனுசரிக்கப்படும்.

    உலக வர்த்தக அமைப்பில் (WTO) இருந்து இந்தியா வெளியேற வேண்டும், மேலும் பன்னாட்டு நிறுவனங்களை விவசாயத் துறையில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பது அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் அடங்கும்.

    • வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சிக்கிமில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 29 சீட்களில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனோடு ஆந்திரா, ஒரிசா, அருணாச்சல்ப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 2) தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வழக்கமாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு காலை 6 மணிக்கே தொடங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 மக்களவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலின்போது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அருணாச்சலில் உள்ள 60 இல் 50 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக 42 சீட்கள் முன்னிலையில் உள்ளது. மாநில கட்சிகளான ஜே.டி (யு) 7 இடங்களிலும், என்.என்.பி 5 இடங்களிலும், பி.பி.ஏ ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது உள்ளது. காங்கிரஸ் இதுவரை 5 இடங்களில் வென்றுள்ளது.

    சுயேச்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெரும் மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 29 சீட்களில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

    சிக்கிம் மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சி தலைவர்கள் இன்று கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாநில கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சி, ஆட்சியை பிடித்துள்ளது. 32 தொகுகிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா 17  தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பெரும்பான்மை பெற்றுள்ள சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பி.எஸ். கோலே தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற குழுவினர், இன்று கவர்னனனர் கங்கா பிரசாத்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். எனினும், முதலமைச்சர் யார்? என்பதை அக்கட்சி வெளியிடவில்லை. விரைவில் அறிவிக்க உள்ளதாக கோலே தெரிவித்தார்.



    முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம் கோலேவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், அவர் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர்.

    ஊழல் வழக்கில் கோலே சிறைத்தண்டனை பெற்றதாலும், 2017ல் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாலும் அவரை முதலமைச்சராக பதவியேற்க அழைக்கலாமா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய அரசு பதவியேற்பு விழா 28-ம் தேதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×