என் மலர்
நீங்கள் தேடியது "Skoda"
- ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய ஸ்கோடா எலெக்ட்ரிக் கார் 295 ஹெச்பி திறன் வெளிப்படுத்துகிறது.
ஸ்கோடா நிறுவனம் தொடர்ச்சியாக தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலாக ஸ்கோடா என்யாக் RS iV இணைந்துள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட என்யாக் கூப் மாடல் RS iV வடிவில் கிடைக்கிறது.
புதிய என்யாக் மாடல் 295 ஹெச்பி பவர், 460 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 2-மோட்டார் டிரைவ் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர் வரை செல்லும் என WLTP சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடல் குறைந்தபட்சம் 500 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடா என்யாக் RS iV மாடலில் 82 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் டிராக்ஷன் மோட் கொண்டு எளிதில் வழுக்கும் சாலைகளிலும் பயணிக்க முடியும். RS மாடல் என்பதால் இந்த காரில் RS சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 21 இன்ச் அலாய் வீல் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஆட்-ஆன் பாகங்கள் ஹை-கிளாஸ் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ரேடியேட்டர் கிரில், விண்டோ ஃபிரேம், மிரர் கேப்கள், ரியர் டிப்யுசர், ஸ்கோடா லோகோ உள்ளிட்டவை அடங்கும்.
இத்துடன் க்ரிஸ்டல் ஃபேஸ்- ரேடியேட்டர் கிரில் பகுதியில் 131 எல்இடி பேக்லிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஃபுல் மேட்ரிக்ஸ் ஹெட்லைட்கள், எல்இடி ரியர் லைட்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. RS மாடல் என்பதால் நான்-மெட்டாலிக் பெயிண்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
- ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
- இந்த ஆண்டு ஸ்லேவியா மாடல் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்லேவியா மாடலின் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இம்முறை ஸ்கோடா ஸ்லேவியா விலை ரூ. 40 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் ஸ்கோடா ஸ்லேவியா மாடல் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. புதிய விலை உயர்வு ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
அதன்படி ஸ்கோடா ஸ்லேவியா ஆம்பிஷன் 1.0 AT மாடல் விலை ரூ. 40 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்லேவியா ஸ்டைல் 1.0 MT விலை ரூ. 31 ஆயிரமும், ஆக்டிவ் 1.0 MT மற்றும் ஆம்பிஷன் 1.0 MT வேரியண்ட்களின் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா ஸ்லேவியா ஸ்டைல் 1.0 MT (சன்ரூப் இல்லா) மாடல் மற்றும் ஸ்டைல் 1.5 MT விலை ரூ. 21 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் மாடலான 1.5 DSG விலை ரூ. 1000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைல் 1.0 AT மாடலின் விலை ரூ. 11 ஆயிரம் உயரந்துள்ளது.
- ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா கார் புது வடிவில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இதில் உள்ள 1.4 லிட்டர் TSI என்ஜின் மற்றும் இ-மோட்டார் 245 பிஎஸ் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்கோடா நிருவனத்தின் ஆக்டேவியா RS மாடல் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதிக சக்திவாய்ந்த RS மாடல் முற்றுலும் புது தோற்றத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்பை போன்றே இந்த கார் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த காரின் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.
முன்னதாக ஆக்டேவியா RS சீரிஸ் பெட்ரோல் என்ஜினுடன் மட்டும் கிடைத்தது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக ஆக்டேவியா RS மாடல் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த காரிலும் 1.4 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை இணைந்து 245 பிஎஸ் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

புதிய ஆக்டேவியா பெட்ரோல் ஹைப்ரிட் கார் வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இந்த காரில் 13 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பிக்கப் பெருமளவு சரிவடைந்துள்ளது.
ஸ்கோடா ஆக்டேவியா RS245 மாடல் தற்போதைய மாடலை விட அதிக விலை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய ஆக்டேவியா மாடலின் விலை ரூ. 36 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- ஸ்கோடா நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க வினியோகம் செய்த கார்களின் எண்ணிக்கையை வெளியிட்டு உள்ளது.
- ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல் பற்றிய தகவலும் இதில் வெளியாகி இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுக்க சுமார் 7 லட்சத்து 31 ஆயிரத்து 300-க்கும் அதிக வாகனங்களை வினியோகம் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. இது 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது 16.7 சதவீதம் குறைவு ஆகும். 2021 ஆண்டில் மட்டும் ஸ்கோடா நிறுவனம் 8 லட்சத்து 78 ஆயிரத்து 200 யூனிட்களை வினியோகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி மற்றும் வினியோக பிரிவில் ஏற்பட்ட சிக்கல்களே வினியோகம் குறைந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. செமிகண்டக்டர் சிப் குறைபாடு, உக்ரைன் போர் விவகாரம், வினியோக சிக்கல்கள் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்கும் நிலையற்ற சூழல் போன்ற காலக்கட்டத்திலும் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் 127.7 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் 51 ஆயிரத்து 900 யூனிட்களை வினியோகம் செய்து இருந்தது. 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் 22 ஆயிரத்து 800 யூனிட்களை மட்டுமே வினியோகம் செய்து இருந்தது. சர்வதேச சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடலாக ஸ்கோடா ஆக்டேவியா உள்ளது.
உலகம் முழுக்க 1 லட்சத்து 41 ஆயிரம் ஆக்டேவியா யூனிட்களை ஸ்கோடா கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்தோடா கமிக் மற்றும் கோடியக் மாடல்கள் அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன. சர்வதேச சந்தையில் ஆதிகத்தை அதிகப்படுத்தும் முயற்சியாக ஸ்கோடா நிறுவனம் விரைவில் வியட்நாம் சந்தையில் களமிறங்க இருக்கிறது.
- ஸ்கோடா நிறுவனத்தின் இரு கார்களில் சக்திவாய்ந்த எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- சக்திவாய்ந்த எஞ்சினுடன் இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்களின் 1.5 லிட்டர் TSI எஞ்சின் கொண்ட ஆம்பிஷன் வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் என்றும் ஸ்லேவியா ஆம்பிஷன் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இந்த எஞ்சின் முன்னதாக குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்களின் டாப் எண்ட் ஸ்டைல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இதே எஞ்சின் தற்போது மிட் வேரியண்ட்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது சக்திவாய்ந்த எஞ்சினை எதிர்பார்க்கும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.

புதிய வேரியண்டில் உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 150 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது 1.0 லிட்டர் எஞ்சினை விட 34 ஹெச்பி மற்றும் 72 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் சிலிண்டர் டிஆக்டிவேஷன் வசதி வழங்கப்படுகிறது. இது எரிபொருளை மிச்சப்படுத்த இரண்டு சிலிண்டர்களை முழுமையாக ஆஃப் செய்துவிடும். குஷக் ஆம்பிஷன் 1.5 லிட்டர் MT மாடலின் விலை அதன் 1.0 லிட்டர் வேரியண்டை விட ரூ. 1.8 லட்சம் அதிகம் ஆகும்.
விலை விவரங்கள்:
ஸ்கோடா குஷக் MT 1.5 TSI ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம்
ஸ்கோடா குஷக் AT 1.5 TSI ரூ. 16 லட்சத்து 79 ஆயிரம்
ஸ்கோடா குஷக் MT 1.5 TSI ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம்
ஸ்கோடா குஷக் AT 1.5 TSI ரூ. 16 லட்சத்து 24 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஸ்கோடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன திட்டம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது.
- முற்றிலும் புதிய தலைமுறை கோடியக் மாடல் டீசரை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
ஆட்டோமொபைல் பிரிவில் எலெக்ட்ரிக் வாகன துறையில் முழுமையாக களமிறங்குவது வாகன உற்பத்தியாளர்களுக்கு சற்றே சவாலான காரியம் ஆகும். இதன் காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் படிப்படியாக களமிறங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த இலக்கை அடையும் நோக்கில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் எதிர்கால திட்டம் தீட்டி ஒவ்வொரு கால இடைவெளிக்கு ஏற்ப எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்கின்றன.
அந்த வரிசையில் ஸ்கோடா நிறுவனம் தனது எதிர்கால எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது. 2026 ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் பல்வேறு பாடி ஸ்டைல்களில், வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற உள்ளன.

முற்றிலும் புதிய காம்பேக்ட் எஸ்யுவி துவங்கி சிறிய எலெக்ட்ரிக் வாகனம் என பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்ய ஸ்கோடா முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் தனது எதிர்கால ஐசி என்ஜின் மாடல்கள் பற்றியும் தகவல் தெரிவித்து இருக்கிறது.
என்யாக் குடும்ப மாடல் வரிசையில், அனைத்து எலெக்ட்ரிக் மாடல்களும் 4.1 மீட்டர் நீளமும், சிறிய மாடல்கள், 4.5 மீட்டர் நீளம் கொண்ட காம்பேக்ட் மாடல், 4.7 மீட்டரில் காம்பி எஸ்டேட் அல்லது 7 சீட்டர் ஸ்பேஸ் எலெக்ட்ரிக் மாடல் உருவாக்கப்பட இருக்கிறது. காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எல்ராக் என்று அழைக்கப்பட உள்ளது.

எல்ராக் மாடல் கரோக் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆகும். இந்த மாடல் 2024 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. என்யாக் சீரிசில் என்யாக் ஐவி கூப் மாடல் 2025 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்டேட் மாடல் மற்றும் 7 சீட்டர் ஸ்பேஸ் எலெக்ட்ரிக் மாடல் விஷன் 7எஸ் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்படுகிறது. இந்த மாடல் 2026 ஆண்டு அறிமுகமாகிறது.
இந்த மாடல்கள் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் முற்றிலும் புதிய சூப்பர்ப் மற்றும் கோடியக் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கோடியக் மாடலின் டீசரையும் ஸ்கோடா வெளியிட்டுள்ளது. இந்த மாடல்கள் 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இத்துடன் மேம்பட்ட ஆக்டேவியா மாடலும் இணைய இருக்கிறது. இதற்கு முன்பாக ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா RS மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- ஸ்கோடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் விரைவில் களமிறங்க இருக்கிறது.
- இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.9 நொடிகளில் எட்டிவிடும்.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனமாக என்யாக் iV காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்த நிதியாண்டிலேயே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சந்தையில் எதுபோன்ற வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் என்யாக் iV மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து எதிர்கால எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய திட்டமிடலில் ஸ்கோடா இறங்க இருக்கிறது.
ஹூண்டாய், கியா, டாடா மற்றும் மஹிந்திரா போன்ற பிராண்டுகள் இந்திய சந்தையில் குறைந்த பட்சம் ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனை செய்து வருகின்றன. அந்த வரிசையில், ஸ்கோடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் விரைவில் களமிறங்க இருக்கிறது.

"நாங்கள் என்யாக் மாடலில் இருந்து துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். இந்த நிதியாண்டில் என்யாக் மாடலை அறிமுகம் செய்து சந்தையை ஆய்வு செய்ய விரும்புகிறோம். சந்தையில் சாதகமான வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், அதிக எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்வது பற்றி முடிவு எடுப்போம்," என்று ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டு இயக்குனர் பீட்டர் சால்க் தெரிவித்துள்ளார்.
ஸ்கோடா என்யாக் iV மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஃபோக்ஸ்வேகன் ID 4 மற்றும் ஆடி Q4 இ டிரான் போன்ற கிராஸ்ஓவர் மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய என்யாக் iV மாடல் கோடியக் காரை விட சற்றே சிறிய கார் ஆகும். ஆனாலும் இது இரண்டடுக்கு இருக்கைகள் கொண்ட ஐந்து பேர் பயணிக்கக்கூடிய கார் ஆகும்.
புதிய ஸ்கோடா என்யாக் iV மாடலில் 77 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 125 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் வசதி மற்றும் 265 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.9 நொடிகளில் எட்டிவிடும். WLTP சான்றின் படி, முழு சார்ஜ் செய்தால் என்யாக் iV மாடல் 513 கிலோமீட்டர்கள் வரையிலான செயல்திறன் கொண்டிருக்கிறது.
- ஸ்கோடா கோடியக் 1st Gen மாடல் 2016 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
- ஸ்கோடா நிறுவனம் 2024 கோடியக் மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை கோடியக் எஸ்யுவி மாடலுக்கான டீசர்களை வெளியிட்டு உள்ளது. புதிய எஸ்யுவி முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் புகைப்படங்களை ஸ்கோடா வெளியிட்டு இருக்கிறது.
புதிய ஸ்கோடா 2nd Gen கோடியக் மாடல் சர்வதேச சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது 2024 மாடலாக விற்பனைக்கு வரும் என்றும் தெரிகிறது. ஸ்கோடா கோடியக் எஸ்யுவி மாடல் 2023 இறுதியில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.
கோடியக் மாடல் ஸ்கோடா கார்கள் பட்டியலில் புதிய மாடல்ஆகும். ஸ்கோடா கோடியக் 1st Gen மாடல் 2016 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு 2021 ஆண்டு ஸ்கோடா கோடியக் மிட் பேஸ்லிப்ட் வெர்ஷன் புதிய பவர்டிரெயின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த வரிசையில் ஸ்கோடா நிறுவனம் 2024 கோடியக் மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்கோடா கோடியக் மாடல் பெட்ரோல், டீசல் மற்றும் மைல்டு ஹைப்ரிட் என்ஜின் வடிவில் கிடைக்கும் என்றும் பிளக்-இன் ஹைப்பிட் ஆப்ஷன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கோடா கோடியக் மாடலில் இந்த வசதி வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
1.5 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட் தவிர்த்து, மற்ற மாடல்களில் 7 ஸ்பீடு, டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் வெர்ஷனில் 2.0 TSI யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் AWD மற்றும் DSG வசதிகள் உள்ளன. டீசல் வேரியன்ட்களில் AWD மற்றும் FWD ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
மைல்டு ஹைப்ரிட் 1.5 TSI யூனிட் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் நிலையில், பிளக்-இன் ஹைப்ரிட் மாடலில் 204 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய கோடியக் மாடல் எலெக்ட்ரிக் மோடில் 100 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இந்த மாடலில் 27.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.
- குஷக் மேட் எடிஷன் மாடல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- ஸ்பெஷல் எடிஷன் என்பதால் இந்த மாடல் 500 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாடலின் மேட் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்கோடா குஷக் மாடல் விலை ரூ. 16 லட்சத்து 19 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் டாப் எண்ட் ஸ்டைல் மற்றும் மான்ட் கர்லோ வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஸ்பெஷல் எடிஷன் என்பதால் இந்த மாடல் 500 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மேட் எடிஷன் மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கார்பன் ஸ்டீல் ஃபினிஷ் மற்றும் கிளாசி பிளாக், க்ரோம் எலிமென்ட்கள் உள்ளன.
பவர்டிரெயினை பொருத்தவரை குஷக் மேட் எடிஷன் மாடல் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இவற்றில் 1.0 லிட்டர் யூனிட் 113 ஹெச்பி பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் யூனிட் 148 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
ஸ்கோடா குஷக் மேட் எடிஷன் 1.0 லிட்டர் மேனுவல் ரூ. 16 லட்சத்து 19 ஆயிரம்
ஸ்கோடா குஷக் மேட் எடிஷன் 1.0 லிட்டர் ஆட்டோமேடிக் ரூ. 17 லட்சத்து 79 ஆயிரம்
ஸ்கோடா குஷக் மேட் எடிஷன் 1.5 லிட்டர் மேனுவல் ரூ. 18 லட்சத்து 19 ஆயிரம்
ஸ்கோடா குஷக் மேட் எடிஷன் 1.5 லிட்டர் ஆட்டோமேடிக் ரூ. 19 லட்சத்து 39 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஸ்கோடா ஸ்கேலா மாடலில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் TSI மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
- ஸ்கோடா ஸ்கேலா மாடலில் புதிய கிரில், ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்கேலா மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அசத்தலான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஸ்கோடா ஸ்கேலா மாடல் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய மாடல் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியான காரின் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய ஸ்கோடா ஸ்கேலா மாடலில் புதிய கிரில், ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது. இத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப் கிரில் வரை நீளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பம்ப்பர் டிசைன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா ஸ்கேலா மாடலில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் TSI மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின், 1.5 லிட்டர் TSI நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 1 அறிமுகத்தை தொடர்ந்து மேம்பட்ட ஸ்கோடா ஸ்கேலா மற்றும் கமிக் மாடல்கள் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்கேலா மாடலின் இந்திய வெளியீடு சந்தேகத்திற்குரிய விஷயம் தான்.
- இரு கார்களின் டாப் எண்ட் மாடல்களின் அம்சங்கள் உள்ளன.
- காண்டிராஸ்ட் நிற க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது குஷக் எஸ்.யு.வி. மற்றும் ஸ்லேவியா செடான் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 18 லட்சத்து 31 ஆயிரம், ரூ. 17 லட்சத்து 52 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
எலிகன்ஸ் எடிஷன் என்று அழைக்கப்படும் புதிய மாடல்களில் டீப் பிளாக் நிற வெளிப்புற பெயிண்ட், இரு கார்களின் டாப் எண்ட் மாடல்களின் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பிளாக் ஃபினிஷ் தவிர கிரில், டெயில்கேட் மற்றும் டோர் மோல்டிங்களில் காண்டிராஸ்ட் நிற க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இரு மாடல்களின் கதவருகே படில் லேம்ப்கள் எனும் விசேஷ மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

குஷக் எலிகன்ஸ் எடிஷன் மாடலில் 17 இன்ச் வீகா அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் இரு கார்களின் ஸ்டீரிங் வீல் மற்றும் குஷன்களில் எலிகன்ஸ் எடிஷன் பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் கிளஸ்டர், 6 ஸ்பீக்கர், சப்-ஊஃபர் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய எலிகன்ஸ் எடிஷன் மாடல்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
- காம்பேக்ட் எஸ்.யு.வி., எலெக்ட்ரிக் மாடல்களின் இந்திய வெளியீடு உறுதியானது.
- ஸ்கோடா நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஸ்கோடா இந்தியா நிறுவனம் உள்நாட்டில் தனது எதிர்கால திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதனப்டி ஸ்கோடாவின் முற்றிலும் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களின் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.
முன்னதாக இந்தியா 2.0 எனும் திட்டத்தின் கீழ் ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் இரண்டு புதிய வாகனங்களை அறிமுகம் செய்தன. இவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வகையில் தற்போது எதிர்கால திட்டத்தின் கீழ் ஸ்கோடா நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்- க்விக், கிமக், கிளக், கரிக் அல்லது கிரோக் பெயர்களில் ஒன்றுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய ஸ்கோடா எஸ்.யு.வி. மாடலில் 1.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
எஸ்.யு.வி. எப்படி காட்சியளிக்கும் என்பது தொடர்பாக ஸ்கோடா வெளியிட்ட டீசர்களில், புதிய காரின் முன்புறம் ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், உயரமான பொனெட் மற்றும் ரிட்ஜ்கள், ரூஃப் ரெயில்கள், சற்றே தடிமனான வீல் ஆர்ச்கள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
புதிய ஸ்கோடா எஸ்.யு.வி. மாடல் அந்நிறுவனத்தின் குஷக் மாடலின் கீழ் நிலை நிறுத்தப்படும். புதிய எஸ்.யு.வி. டாடா நெக்சான், ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மஹிந்திரா XUV300 மற்றும் இதர சப்-4 மீட்டர் எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியாக அமையும்.