search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skyscraper"

    • இன்ஸ்டாகிரம் சமூக வலைதளத்தில் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.
    • உதவிக்கு அந்த உச்சி மாடியில் உள்ள சிறிய அறையின் ஜன்னல் கண்ணாடியை பலமுறை தட்டினார்

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி (30). இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு உடையவர்.

    வானளாவிய உயர கட்டிடங்களின் உச்சிக்கு ஏறி, அதில் அபாயகரமான இடங்களில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது இவரது வாடிக்கை.

    இவருடைய இன்ஸ்டாகிரம் சமூக வலைதளத்தில் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். ரெமி பலமுறை ஹாங்காங் நாட்டிற்கு சென்று அங்குள்ள உயரமான கட்டிடங்களிலிருந்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். சென்ற வாரம், ஹாங்காங் மத்திய பகுதியில் உள்ள ட்ரெகன்டர் சாலைக்கு ரெமி சென்றார்.

    அங்குள்ள ட்ரெகன்டர் டவர் எனும் ஒரு மிக உயரமான கட்டிடத்தில் இருந்து படம் பிடிக்கும் நோக்கில், காவலாளியிடம் ஒரு நண்பனை பார்க்க உள்ளே செல்வதாக பொய் சொல்லி உள்ளே சென்றார்.

    லிஃப்டில் ஏறி 49-வது மாடியை அடைந்து அங்கிருந்து வெளியே இறங்கி மாடிக்கு சென்றார். மொட்டை மாடிக்கான கதவின் பூட்டை அவர் உடைத்து கொண்டு மேல் மாடி வரை சென்றார். இவர் அங்கிருந்து பல ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுக்க முயற்சித்தார்.

    அப்போது திடீரென நிலை தடுமாறினார். இதனால் உதவிக்கு அந்த உச்சி மாடியில் உள்ள சிறிய அறையின் ஜன்னல் கண்ணாடியை பலமுறை தட்டினார். இதை கண்ட உள்ளேயிருந்த பணிப்பெண் திடுக்கிட்டு காவல்துறையை அழைத்தார். ஆனால் உதவி கிடைக்கும் முன் 68-வது மாடியிலிருந்து ரெமி தவறி விழுந்தார்.

    மருத்துவ உதவி குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்தபோது ரெமி உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டது.

    அவர் அருகே அவர் எடுத்த பல புகைப்படங்களை கொண்ட அவரது கேமிரா அருகே கிடந்தது. பிரான்ஸ் நாட்டு அடையாள அட்டை ஒன்று அருகே இருந்ததை கொண்டு அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.

    மரணத்திற்கான காரணத்தை ஹாங்காங் காவல்துறையினர் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

    ஜூலை 24-ம் தேதி ரெமியின் கடைசி பதிவில் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியின் வான்வழி காட்சியை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 73வது தளத்தை அடைந்தபோது அவரை கட்டிடத்திற்குள் வரச் செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயர் ஜார்ஜ் கிங் தாம்சன் என தகவல் வெளியாகி உள்ளது.

    தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ளது லோட்டே வேர்ல்ட் டவர். 123 தளங்கள் கொண்ட இந்த வானுயர கட்டிடம் உலகின் 5வது மிக உயரமான கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் வழியாக இன்று திடீரென ஒரு வாலிபர் விறுவிறுவென ஏறத் தொடங்கினார். கயிறு உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அவர் ஏறியதைப் பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பகுதியில் கூட்டம் கூட ஆரம்பித்தது. போலீசாரும் தீயணைப்பு படையினரும் வந்து சேர்ந்தனர். அவரை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். 

    அந்த வாலிபர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடத்தின் மீது ஏறிய நிலையில், 73வது தளத்தை அடைந்தபோது, அவரை கட்டிடத்திற்குள் வரச் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் அந்த நபர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விரிவான தகவல் எதுவும் காவல்துறை தரப்பில் வெளியிடப்படவில்லை.

    கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயர் ஜார்ஜ் கிங் தாம்சன் என ஒரு நாளிதழில் தகவல் வெளியாகி உள்ளது. 2019-இல் லண்டனில் உள்ள ஷார்ட் என்ற கட்டிடத்தில் ஏறியதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் 2018 ஆம் ஆண்டில், லோட்டே வேர்ல்ட் டவரில் ஏறிய பிரான்ஸ் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் அலைன் ராபர்ட், பாதி தூரம் ஏறிய நிலையில், போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவில் உள்ள 25 மாடி கட்டிடத்தின் மீது ரக்கூன் ஒன்று ஏறிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Raccoon
    நியூயார்க்:

    அமெரிக்காவின் மினெஸ்சோட்டா மாகணத்தில் உள்ள யுபிஎஸ் பிளாசா பில்டிங்கில் நேற்று ரக்கூன் ஒன்று மேலே ஏற முயன்றது. 25 மாடி கட்டிடத்தில் ஏறிய ரக்கூனை அனைவரும் கண்டு ரசித்தனர்.

    அது மாடியில் ஏறும் போது பல இடங்களில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் தொடர்ந்து ஏறியது. இரவில் அனைவரும் தூங்கிய பின் ரக்கூன் மொட்டை மாடியை வந்தடைந்தது. ரக்கூன் ஏற தொடங்கியது முதல் மக்கள் அதனை கண்காணிக்க தொடங்கினர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.



    அவர்கள் மாடியில் இருந்த ரக்கூனை பத்திரமாக மீட்டனர். ரக்கூன் ஏறிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ஒரே இரவில் அந்த ரக்கூன் சமூக ஊடகங்களில் பிரபலமானது. #Raccoon
    ×