search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLIPPERY TREE"

    • ஆலங்குடி அருகே உள்ள திருக்கட்டளை கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
    • 30 அடி உயரம் கொண்ட யூக்கலிப்டஸ் தைல மரத்தில் 10 கிலோ கிரீஸ், ஐந்து கிலோ விளக்கெண்ணை, 5 கிலோ கத்தாழை ஜெல் உள்ளிட்டவைகளை ஒன்றாக சேர்த்து தேய்த்து கடந்த ஒரு வார காலமாக ஊற வைத்து வழுக்கு மரமாக உருவாக்கப்பட்டது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருக்கட்டளை கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.

    இதில் 30 அடி உயரம் கொண்ட யூக்கலிப்டஸ் தைல மரத்தில் 10 கிலோ கிரீஸ், ஐந்து கிலோ விளக்கெண்ணை, 5 கிலோ கத்தாழை ஜெல் உள்ளிட்டவைகளை ஒன்றாக சேர்த்து தேய்த்து கடந்த ஒரு வார காலமாக ஊற வைத்து வழுக்கு மரமாக உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த மரத்தை அப்பகுதியில் ஊன்றி வைக்கப்பட்டு போட்டி தொடங்கியது.

    இதல் வீரர்கள் வழுக்கி விழுந்தால் காயமடையாமல் இருக்க வழுக்கு மரத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு மீண்டும் நடத்தப்பட்டதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இந்த வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 9 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த 6 அணிகள் பதிவு செய்து பங்கேற்றனர். ஒவ்வொரு அணிக்கும் வழுக்கு மரத்தின் எல்லையை தொட 10 நிமிட நேரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. முதல் அணியாக மேலக்கொள்ளை சுந்தர காளியம்மன் குழுவைச் சேர்ந்த அணியின ர் வழுக்கு மரம் ஏறினர். ஆனால் அவர்கள் பலமுறை முயற்சித்தும் நிர்ணயிக்கப்பட்ட 10 நிமிடத்திற்குள் எல்லையை தொட முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    பின்னர் இரண்டாவதாக எரிச்சி ராமு பாய்ஸ் அணியினர் ஒன்பது பேர் பங்கேற்க விழா கமிட்டி அறிவித்திருந்த நிலையில் எட்டு பேர் மட்டுமே பங்கேற்று பின்னர் அதிலும் ஏழு பேர் மட்டுமே முதல் முயற்சியிலேயே வழுக்கு மரத்தில் ஏறி 56 நொடிக்குள் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடினர்.

    இதையடுத்து அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வழுக்கு மரத்தில் ஏறி எல்லையை தொட்ட இளைஞர்களை கைகளை தட்டி ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற எரிச்சி ராமு பாய்ஸ் அணியினருக்கு 10 ஆயிரத்து ஒரு ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற எரிச்சி ராமு பாய்ஸ் அணியினர் நூற்றுக்கணக்கான வழுக்கு மரம் ஏறும் போட்டியில் கலந்து கொண்டு பல போட்டியில் வெற்றி வாகை சூடியது குறிப்பி டத்தக்கது.

    ×