search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசி"

    ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணு, காசியில் பிந்து மாதவராக வீற்றிருந்து அருள்புரிகிறார்.
    ‘மாதவா’ என்பது மகாவிஷ்ணுவை குறிப்பதாகும். ‘மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் குறிக்கும். ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணு, காசியில் பிந்து மாதவராக வீற்றிருந்து அருள்புரிகிறார்.

    இவரது ஆலயம் பஞ்ச கங்கா காட்டில் அமைந்திருக்கிறது. பிரம்மா வழிபட்ட சிறப்புக்குரியவர், இந்த பிந்து மாதவர். சங்கு, சக்கரத்துடன் கதாயுதம் ஏந்தி காட்சி தருகிறார். ஆலயத்திற்கு வெளியே விஷ்ணு பாதம் இருக்கிறது.

    அதற்கு கங்கை நீரை அபிஷேகம் செய்து, மலர்களைத் தூவி மக்கள் வழிபடுகின்றனர்.
    முக்தியை வழங்கும் தலங்களில் சிறப்பு மிக்கதாகவும், புண்ணியம் மிகுந்த ஆலயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது, காசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில்.
    முக்தியை வழங்கும் தலங்களில் சிறப்பு மிக்கதாகவும், புண்ணியம் மிகுந்த ஆலயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது, காசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில். காசி யாத்திரை என்பது இன்றளவும் ஆன்மிக பயணமாக மட்டுமின்றி, புனிதம் மிகுந்த பயணமாகவும் இருக்கிறது.

    இங்குள்ள ஈசனின் அருளால் தான், சனீஸ்வர பகவான், நவக்கிரகங்களில் ஒருவராக ஆனதுடன், ஈஸ்வர பட்டத்தை யும் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. காசியில் உயிர் நீத்தவர்களின், காதில் இத்தல சிவபெருமானே பிரணவ மந்திரமான ‘ஓம்’ என்ற மந்திரத்தை ஓதி முக்தியடையச் செய்வதாக சொல்லப்படுகிறது.

    காசியில் கங்கை நதிக்கரையில் 64 படித்துறைகள் இருக்கின்றன. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்புறம் ஆதி விஸ்வநாதர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிறிய கருவறைக்குள் உள்ள இறைவனுக்கு பக்தர்கள், தாங்களே கங்கை நீரை எடுத்து அபிஷேகம் செய்து வழிபடலாம்.
    இறைவன் ஒருவனே கதி என மனதில் தியானித்து இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான், பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்றார்கள்.
    காசி, ராமேஸ்வரம் என்றதுமே, அது வயதானப் பின் செல்ல வேண்டிய இடம் என்பது பொதுவாக பெரும்பாலான மக்களின் எண்ணம். வாழ்க்கையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றியவர்கள், இதற்கு மேல் தங்களுக்கு வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று காசி, ராமேஸ்வரப் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த கடமைகளை முடித்தவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற நியதி ஏதுமில்லை. காசியும், ராமேஸ்வரமும் ஆன்மிக அதிர்வலைகள் அதிகமுள்ள திருத்தலங்கள். இன்றைக்கும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனைத்து வயதினரையும் காசி, ராமேஸ்வர தளங்களில் பார்க்க முடியும்.

    காசி என்பது முக்தி தலமாக போற்றப்படுகிறது. பிறவா வரம் வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்லும் பக்தர்கள், புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டுதல் செய்வர். காசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும் என்பது நமது இந்து மத நம்பிக்கை.இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் ஓடும் கங்கையில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    கங்கையில் நீராடிவிட்டு பாபங்கள் நீங்கி புது மனிதனாக பிறப்பெடுக்கும் போது, மீண்டும் இவ்வுலக சுக போகங்களில் பற்று கொண்டு  விடக் கூடாது. மீண்டும் அழியும் பொருளின் மீதும் அதிகப் பற்றோ அல்லது விருப்பமோ வந்துவிடக் கூடாது. இனி இறைவன் ஒருவனை கதி என மனதில் தியானித்து இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான், பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்  என்றார்கள். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழப் பழகுபவனுக்கு, ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்து விடும்.

    இதன் பொருட்டு தான் காசிக்குச் சென்றால், அழியும் பொருட்களின் மீது தங்களுடைய பிடிப்பை விட்டுவிட்டு வர வேண்டும் என்பார்கள். இதுவே நாளடைவில் காசிக்குச் சென்றால் எதையாவது விட்டு வர வேண்டும் என்று மாறியது. விட வேண்டியது பிடித்த உணவுகளையோ அல்லது காய் கனிகளையோ மட்டுமல்ல. காமக்குரோத மனமாச்சர்யங்களை அக அழுக்குகளை விட்டு வந்து மீண்டும் பிறவாத பெரும் வரம் பெறுவோம்.

    ஓம் நமச்சிவாய

    தென்னாடு உடைய சிவனேப் போற்றி!
    காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. காரணம் பின்வருமாறு:-

    ராமர், ராவண வதம் செய்தபின் சேதுவில் சிவ பூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி ஏவினார்.

    அனுமார் காசியை அடைந்து பார்த்தார். எங்கும் லிங்கங்கள்; எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமார் அந்தச் சிவலிங்கத்தைப் பேர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

    காசியின் காவலராகிய காலபைரவர் அதுகண்டு கோபித்தார். “என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்?” என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும், அனுமாருக்கும் கடும் போர் நடந்தது.

    அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி, “உலக நன்மைக்காக இந்தச் சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொடுத்தனுப்பினார்.

    தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமாருக்குத் துணை புரிந்த கருடன் காசிநகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார்.

    அந்தச் சாபத்தின்படி இன்றும் கருடன் பறப்பதில்லை. பல்லி ஒலிப்பதில்லை.

    வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள்.
    வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும்பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தாள்.

    திருமாலே ‘அட்சய’ என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது. பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் கரத்தில் அந்த கபாலம் ஒட்டிக்கொண்டது.

    எங்கெங்கோ சிவபெருமான் பிட்சாடனராக பிச்சை பெற்றபோதும் அந்த கபாலம் அவருடைய கையை விட்டு நீங்கவே இல்லை. இறுதியில் அன்னபூரணி தமது பாத்திரத்தில் இருந்து பிச்சை இட்டதும் அவரது கரத்தில் இருந்து கபாலம் நீங்கியது.

    அன்னபூரணியின் அட்சயப் பாத்திரம் அள்ள அள்ளக்குறையாத அருளை வழங்கக்கூடியது. அன்னபூரணியை வணங்கும் பக்தர்கள் இந்த அட்சயப் பாத்திரத்தையும் சேர்த்தே வணங்குகிறார்கள்.

    கேட்டதைக் கொடுக்க கூடிய கற்பக விருட்சம் போன்றது அன்னபூரணியின் கரத்தில் இருக்கும் அட்சய பாத்திரம். காசியில் வீற்றிருக்கும் அன்னை அட்சய பாத்திரம் தாங்கியிருக்கிறாள்.

    காசிக்குப் போகும் போது, அன்னபூரணியை வழிபடும் போது, மறக்காமல் அந்த அட்சய பாத்திரத்தையும் கண் குளிரப் பார்த்து வழிபடுங்கள். உங்கள் செல்வம் அட்சயமாக வளரும்.

    அன்னை விசாலாட்சியின் கோயில் காசி விசுவநாதர் கோயிலில் இருந்து சுமார் இரண்டு பர்லாங்குகள் தூரத்தில் அமைந்துள்ளது. தன்னை வணங்கி வழிபட வருவோரின் கஷ்டங்களை போக்கி, வேண்டுவனவற்றை அருளும் விசாலாட்சி, கருவறை நடுவில் திருவருள் சுரக்கும் திருநோக்குடன் திருக்காட்சி அருள்கின்றாள்.

    அனைத்து உயிர்களின் களைப்பையும் நீக்கி இறுதியில் உறுதுணையாக இருந்து, வினைப் பிணிகளாகிய முடிச்சுகளை அவிழ்த்து, நம் தீவினைகளைத் திருவருட் பார்வையால் போக்கி, என்றும் மீளாத இன்பத் திருவடியை அளிக்கின்றாள் அன்னபூரணி.

    ஞானம், வைராக்கியம் என்ற மோட்ச சாதனங்கள் இரண்டையும் நமக்குப்பிச்சையிடுகின்றாள் அன்னபூரணி. இந்த அன்னபூரணி, ஒரு திருக்கரத்தில் கரண்டியையும் ஒரு திருக்கரத்தில் அன்ன பாத்திரத்தையும் தாங்கியவளாகத் திகழ்கின்றாள்.

    ×