என் மலர்
நீங்கள் தேடியது "உஷா தாக்குர்"
- வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்றால் அது மனித குலத்துக்கு அவமானம்.
- அப்படி வாக்களிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் விலங்குகளாக பிறப்பார்கள் என்றார்.
இந்தூர்:
மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் உஷா தாகூர். முன்னாள் மந்திரியுமான இவர், தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசியதாவது:
பா.ஜ.க. அரசின் ஏராளமான திட்டங்களால் பயனாளிகளுக்கு ஆயிரக்கணக்கான பணம் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அப்படியிருந்தும் கூட தங்கள் வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்றால், அது மனித குலத்துக்கு அவமானம் ஆகும்.
அப்படி பணம், சேலை, மது போன்றவற்றை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒட்டகம், செம்மறி, வெள்ளாடு, நாய், பூனையாகத் தான் பிறப்பார்கள் என்பதை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஜனநாயகத்தை விற்பவர்கள் இப்படித்தான் பிறப்பார்கள். நீங்கள் வாக்களிப்பது ரகசியமானது என்றாலும், கடவுள் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள் என தெரிவித்தார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இது நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் மாவ் தொகுதி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ.வும், மாநில பா.ஜனதா துணைத்தலைவருமான உஷா தாக்குரிடம் ஒரு செய்தி சேனல் பேட்டி கண்டது. “கோட்சேவை தேசியவாதியாக கருதுகிறீர்களா?” என்று நிருபர் கேட்டதற்கு, “ஆமாம், அவர் தேசியவாதிதான். தனது வாழ்நாள் முழுவதும் அவர் நாட்டைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார். காந்தியை கொலை செய்ய எந்த சூழ்நிலையில் முடிவு எடுத்தார் என்பது அவருக்குத்தான் தெரியும்” என்று உஷா தாக்குர் பதில் அளித்தார்.
இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உஷாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ என்று பா.ஜனதா பதில் அளித்துள்ளது.