என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமந்தா"

    • தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் ரம்யா.
    • இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான ரம்யா சுப்ரமணியன் தன் பேச்சு திறமையால் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

    ரம்யா எழுதிய புத்தகம்

    இந்நிலையில், இவர் தற்போது உடல் பருமன் குறைப்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை சமந்தா இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து ரம்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • சமந்தா, மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நடித்துள்ள யசோதா படத்துக்கு சமீபத்தில் டப்பிங் பேசிய போதும் குளுக்கோஸ் ஏற்றிய புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சமந்தா

    சமந்தா

    தற்போது சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டிலேயே இந்த சிகிச்சையை பெற்று வருகிறார். ஆனாலும் உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சமந்தா

    சமந்தா

    ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுடன் குஷி உள்பட சில படங்களில் நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிகிச்சை முடிந்த பின் இந்த படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘யசோதா’.
    • இப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

    இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    யசோதா

    திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    யசோதா போஸ்டர்

    மேலும், 'யசோதா' திரைப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'யசோதா' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
    • இந்த நோயின் சிகிச்சைக்காக சமந்தா தென் கொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நடித்துள்ள யசோதா படத்துக்கு சமீபத்தில் டப்பிங் பேசிய போதும் குளுக்கோஸ் ஏற்றிய புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சமந்தா

    இதைத்தொடர்ந்து சமந்தாவை உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

    சமந்தா

    இந்நிலையில், சமந்தாவின் உடல்நலம் முழுமையாக குணமடையும் வரை படப்பிடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்க சமந்தா முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடிக்கும் குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    சமந்தா விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

    • தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.
    • சமீபத்தில் சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அவரது திரைப்படங்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. கடைசியாக சமந்தாவின் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

    சமந்தா 

    சமந்தா 

    சமீபத்தில் சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் சமந்தாவுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தன்பேரில், சமந்தா தென்கொரியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக குணமடையும் வரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க நடிகை சமந்தா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சமந்தா 

    சமந்தா 

    இந்தியில் பேமலி மேன் 2 ஹிட்டுக்குப் பிறகு சமந்தாவுக்கு நிறைய வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது ஆனால் உடல்நலனில் அக்கறை காட்ட நீண்டநாள் ஓய்வு தேவைப்படுவதால் படக்குழுவினரை காத்திருக்கும்படி சமந்தா கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவுப்பு ஏதும் வெளியாகவில்லை.

    • சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

    சாகுந்தலம்

    சாகுந்தலம்

    இப்படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் படத்தை 3-டியில் மாற்ற உள்ளதாகவும், இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    சாகுந்தலம்

    சாகுந்தலம்

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது
    • இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

    சாகுந்தலம்

    சாகுந்தலம்

    இப்படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் படத்தை 3-டியில் மாற்ற உள்ளதாகவும், இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    சாகுந்தலம்

    சாகுந்தலம்

    இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 11 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 17ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    • தமிழில் கடந்த மாதம் கனெக்ட், ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை கோஸ்ட் ஆகிய படங்கள் வெளியாகின.
    • இதுகுறித்து சமந்தா சமூக வலைத்தளத்தில் ரசிகரின் பதிவிக்கு பதிலளித்துள்ளார்.

    தமிழில் கடந்த மாதம் கனெக்ட், ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை கோஸ்ட் ஆகிய பெண்களை முதன்மைபடுத்தும் கதாபாத்திரங்களை கொண்ட படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து வரவேற்பை பெற்றன. தியேட்டர்களில் வைக்கப்பட்டு உள்ள இந்த படங்களின் பேனர்களை ஒருவர் புகைப்படும் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து, ''தமிழ் சினிமா முன்னேற்ற பாதையில் செல்கிறது. 10 வருடங்களுக்கு முன்னால் இதுபோன்று நினைத்து பார்க்க முடியாது'' என்ற பதிவையும் பகிர்ந்து இருந்தார்.

    இந்த போஸ்டர்களை பார்த்த சமந்தா பெண்கள் எழுச்சி பெறுகிறார்கள் என்ற பதிவை பகிர்ந்து இருந்தார். அதற்கு ஒருவர், ''ஆமாம் பெண்கள் எழுவது விழுவதற்காகத்தான்'' என்று எதிர்மறையாக பதில் சொல்லி இருந்தார். அந்த ரசிகருக்கு சமந்தா பதிலடி கொடுக்கும் வகையில், ''விழுந்து மீண்டும் எழுவது மேலும் வலிமையாக்கும் நண்பரே'' என்று கூறியுள்ளார். இன்னொரு ரசிகர் பதிவுக்கு பதில் அளித்த சமந்தா, ''அனைவரின் பிரார்த்தனை எனக்கு மேலும் வலிமை தருகிறது'' என்றும் கூறியுள்ளார்.

    • நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’.
    • இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

    சாகுந்தலம் போஸ்டர்

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சாகுந்தலம் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகிற ஜனவரி 9-ஆம் தேதி நண்பகல் 12.06 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    சாகுந்தலம் பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’.
    • இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

    சாகுந்தலம்

    சாகுந்தலம்

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் படத்தின் டிரைலர் வருகிற ஜனவரி 9-ஆம் தேதி நண்பகல் 12.06 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சாகுந்தலம் பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள திரைப்படம் சாகுந்தலம்.
    • இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

    சாகுந்தலம்

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகை சமந்தா பேசியதாவது, "இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது.

    சாகுந்தலம் டிரைலர் வெளியீட்டு விழா

    வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் ஒன்று மாறாது. நான் சினிமாவை நேசிக்கிறேன், சினிமா என்னை மீண்டும் நேசிக்கிறது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை. இந்திய இலக்கிய வரலாற்றில், சகுந்தலாவின் கதை மறக்க முடியாத ஒன்றாகும். குணசேகர் சார் என்னை இந்தக் கேரக்டருக்குத் தேர்ந்தெடுத்தது என் அதிர்ஷ்டம். இது உண்மையிலேயே எனது பாக்கியம்" என கூறினார்.

    • தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் ரம்யா.
    • இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான ரம்யா சுப்ரமணியன் தன் பேச்சு திறமையால் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

    ரம்யா எழுதிய புத்தகம்

    இவர் தற்போது உடல் பருமன் குறைப்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சமீபத்தில் இதனை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரம்யாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரம்யா நடிகர் விஜய்யை சந்தித்து தான் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ×