search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லடம்"

    பல்லடம் அருகே கார் மீது வேன் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன் பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நடராஜ். விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களது மகன் கவின் (11).இவர்கள் மாருதி காரில் பல்லடத்திற்கு மளிகை பொருட்கள் வாங்க வந்தனர். இவர்களுடன் நடராஜ் தம்பி மனைவி பூங்கொடி, மகன் கவுசிக் ஆகியோரும் வந்தனர்.

    பல்லடத்தில் மளிகை பொருட்கள் வாங்கி விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கிருஷ்ணாபுரம் பிரிவில் சென்று கொண்டு இருந்த போது பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி வந்த சரக்கு வேனும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலே சிறுவன் கவின் பரிதாபமாக இறந்தான். மற்ற 4 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்து குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மீது மோதிய சரக்கு வேன் ரோடு ஓரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. அதனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம் அருகே சமையல் செய்த மாணவி உடல் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் கரைப்புதூர் அவரப்பாளையத்தில் உள்ளது மீனாம்பிகை நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் விஜய். டெய்லர். இவரது மனைவி ஆனந்தி. இவர்களது மகள் சன்மதி (வயது 17). பிளஸ்-2 தேர்ச்சி பெற்று மேல்படிப்புக்கு செல்ல தயாராக இருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆனந்தி சமையல் செய்தார். திடீரென கியாஸ் தீர்ந்து விட்டது. இதனையடுத்து மண்எண்ணை அடுப்பை பற்ற வைக்குமாறு மகளிடம் ஆனந்தி கூறினார்.

    இதனையடுத்து சன்மதி மண்எண்ணை அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக சன்மதியின் ஆடை மீது தீ பற்றியது. தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த சன்மதி அலறிசத்தம்போட்டார். ஆனந்தி ஓடி வந்து தீயை அணைத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சன்மதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சன்மதி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #Loksabhaelections2019

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள 63 வேலாம்பாளையம் காளியம்மன் கோவில் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 1 லட்சத்து 95 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பணத்தை கொண்டு வந்தவர் உடுமலை அருகே உள்ள கொள்ளுபாளையத்தை சேர்ந்த முத்துசாமி (வயது 35) என்பதும், சொந்தமாக போர்வெல் லாரி வைத்து தொழில் செய்ததும் தெரிய வந்தது.

    அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் ஒப்படைத்தனர். அவர் பணத்தை கருவூலத்தில் சேர்த்தார். முத்துசாமியிடம் பணத்துக்கான உரிய ஆவணங்களை சமர்பித்து விட்டு பணத்தை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.  #Loksabhaelections2019

    பல்லடத்தில் கார் மோதி விவசாய கூலிதொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம் காலனியை சேர்ந்தவர் சின்னான் (வயது 70). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று வாவிபாளையத்துக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    பல்லடம்- உடுமலை சாலையில் நடந்து வந்தபோது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத கார் சின்னான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காமநாயக்கன் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்னானை மீட்டு பல்லடம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரையும், அதன் டிரைவரையும் தேடி வருகிறார்கள்.

    பல்லடத்தில் நடந்த வெவ்வேறு விபத்தில் என்ஜினீயர், பெண் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பல்லடம்:

    உடுமலை ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). என்ஜினீயர். இவரது மனைவி கலைச்செல்வி (60). இவர்கள் சம்பவத்தன்று உடுமலையில் இருந்து கோவைக்கு காரில் புறப்பட்டனர். கார் ஆராக்குளம் என்ற இடத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தம்பதி படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். கலைச்செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோன்று இடுவாய் அம்மன் நகரை சேர்ந்த குருசாமி மனைவி ராஜம்மாள் (56). இவரது தம்பி லிங்கசாமியும் மொபட்டில் பல்லடம்- உடுமலை ரோட்டில் சென்றனர். சித்தம்பலம் பிரிவு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் மொபட்டில் சென்ற 2 பேரும் காயம் அடைந்தனர். பல்லடம் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார். லிங்கசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடத்தில் மில் தொழிலாளி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் ஊஞ்சப் பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). மில் தொழிலாளி. நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மொபட்டில் புறப்பட்டார். பூமலூர் மெயின்ரோடு காளிவேலம்பட்டி பிரிவில் உள்ள 4 ரோடு சந்திப்பு வந்தபோது மொபட் நிலைதடுமாறி அங்குள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் சேகர் படுகாயம் அடைந்தார். பல்லடம் போலீசார் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோன்று இதே பகுதியை சேர்ந்தவர் அன்பரசு (35). ஆட்டோ டிரைவர். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். பல்லடம் கொசவம்பாளைம் பிரிவு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அன்பரசு மீது மோதியது.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வினோபா நகரை சேர்ந்தவர் பிரேம்ஜி(வயது 20). இவர் காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று எனக்கு கல்லூரிக்கு செல்ல பிடிக்கவில்லை என பெற்றோரிடம் கூறினார். அவரது பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த பிரேம்ஜி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    மதுரையில் இருந்து கோவைக்கு இன்று புறப்பட்டு அதிகாலை ஒரு அரசு பஸ் வந்தது. காலை 7.30 மணி அளவில் பல்லடம் அருகே வந்த போது சாலையை கடந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் மீது பஸ் மோதியது. இதில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவலறிந்து பல்லடம் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள குள்ளம் பாளையத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பழனிசாமி என்கிற ராமராஜ் (27). கூலி தொழிலாளி. இவரது உறவினர் கிருஷ்ண மூர்த்தி (24). இவர்கள் இருவரும் நேற்று இரவு வாவிபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    பல்லடம் - உடுமலை சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே கோவை காளப்பட்டியை சேர்ந்த அமல்தாஸ், அவரது மனைவி சுகுணா மற்றும் 2 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.திடீரென இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டது. இதில் ராமராஜ், அவரது உறவினர் கிருஷ்ண மூர்த்தி, அமல்தாஸ் ஆகியோர் காயம் அடைந்தனர்.பலத்த காயம் அடைந்த ராமராஜ் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை இறந்தார். கிருஷ்ண மூர்த்தி, அமல்தாஸ் ஆகியோர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடம் அருகே கிணற்றில் பெண், 2 குழந்தைகள் பிணமாக கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை அடுத்துள்ள ஆர்.எம். நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயி. இவரது தோட்டத்தில் கிணறு உள்ளது. நேற்று மாலை பொன்னுசாமி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்தார்.

    மோட்டாரை இயக்கி விட்டு கிணற்றில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என எட்டிப்பார்த்தார்.

    அப்போது கிணற்றில் ஒரு பெண், 2 குழந்தைகள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பல்லடம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி 3 பேரின் உடலை மீட்க முயன்றனர்.

    அதற்குள் இரவு நேரம் ஆகி விட்டதால் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. கிரேன் உதவியுடன் இரவு 11 மணிக்கு தான் 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடல்களும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பிணமாக கிடந்த பெண்ணுக்கு 45 வயதும், சிறுவனுக்கு 10 வயதும், சிறுமிக்கு 7 வயதும் இருக்கும். இவர்கள் கிணற்றில் விழுந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும். எனவே உடல் சற்று உப்பி போய் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்த போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே கிணற்றில் பிணமாக மிதந்த 3 பேரும் வெளியூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.

    2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு அப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது 3 பேரையும் யாராவது கிணற்றில் தள்ளி கொன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    பிணமாக கிடந்தவர்கள் குறித்து அடையாளம் தெரிந்தால் தான் இது பற்றிய முழு விவரம் தெரியவரும். எனவே அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த வாரம் பல்லடம் அருகே உள்ள பூமலூரில் 2 குழந்தைகளை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து தாய் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் நடைபெற்றது.

    இந்த சோகம் அடங்குவதற்குள் 2 குழந்தைகளுடன் பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் நடைபெற்றுள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    பல்லடம் அருகே கார் மோதி ஒடிசா தொழிலாளி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லிங்கராஜ் பிரதாப். இவரது மகன் பிரதாப் (22). இவர் கடந்த 2 வருடங்களாக பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் தங்கி அங்குள்ள தனியார் நூல் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை வேலை முடிந்து கடைக்கு செல்வதற்காக வந்தார். பல்லடம்- தாராபுரம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் பிரதாப் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வரும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.

    பல்லடம் அருகே விவசாயியை அடித்து கொன்ற மகன் போலீசில் சரண் அடைந்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மேற்கு ராசா கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம் (65). விவசாயி.இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இதில் காய்கறிகள், கீரைகள் பயிரிட்டு விற்பனை செய்து வந்தார்.இவரது மகன் முருகேசன்.

    விசைத்தறி கூடம் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விசைத்தறி ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார்.முருகேசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டின் அருகில் தனித்குடித்தனம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு விவசாயி அருணாசலம் தனது வீட்டின் முன் உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் விசைத்தறிக்கு பயன்படுத்தும் மரக் கட்டையால் தனது தந்தை அருணாசலம் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த அருணாசலம் மனைவி கணவரை வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

    சிறிது நேரத்தில் அருணாசலம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அருண £சலத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தந்தை இறந்த தகவல் கிடைத்ததும் முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். அவர் பல்லடம் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×