என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 102622"
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். (வயது 88). தொழிலாளி.
இன்று காலை அவர் அதே பகுதியில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கோயம்பேட்டில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென்ற முருகேசன் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்த போது டிரைவர் திடீர் பிரோக் போட்டதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து மாணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மற்றும் ஊத்துகோட்டையில் உள்ள 69 தனியார் பள்ளிகளில், வேன், பஸ் என மொத்தம் 259 வாகனங்கள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார்பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடை பெற்று வருகிறது.
அதன்படி திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் இன்று ஆய்வு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன்.
திருவள்ளூர் வட்டாட்சியர் ஸ்ரீனிவாசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களின் முதலுதவிப் பெட்டி, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல், அவசரகாலக் கதவு, ஜன்னல்கள், தீயணைப்புக் கருவிகள், புத்தகப்பை வைக்கும் அடுக்கு உள்பட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
வாகனங்களுக்கு உரிமம் உள்ளதா, ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா? மற்றும் வாகனங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். இப்பணி வரும் 31-ந் தேதி வரை நடைபெறும். பள்ளி துவங்கியதும் அனுமதியின்றி இயங்கும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கே.ஜி.பி. நகரில் வசிப்பவர் வர்மா. ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை பொறியாளர். இவர் கடந்த 28-ந் தேதி உடல் நிலை சரியில்லாத மனைவியை சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க சென்று இருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த வைரக்கற்கள் பதிக்கபப்ட்ட 60 பவுன் நகை மற்றும் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ரூ. 3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். துணை போலீஸ் சூப்பிரண்டு கங்கா தரன் தலைமையில் தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
பழைய குற்றவாளிகள் குறித்த விவரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
இதில் கொள்ளையில் ஈடுபட்டது பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிந்தது.
அவர்கள் 2 பேரையும் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி வேல் ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரையும் போலீசார் திருவள்ளூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது நண்பர் சதீஷ் , இரண்டு பேரும் தனியார் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இருவரும் பெரியகுப்பம் கற்குழாய் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் அவர்களை கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றனர். பணத்தைத் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மாரிமுத்து, சதீசை கத்தியால் வெட்டி 2 சவரன் நகை, ரூபாய் 13,000, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
காயம்அடைந்த இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கேஜிபி நகரை சேர்ந்தவர் வர்மா (65). ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை என்ஜினீயர். இவரது மனைவி சவுதா. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று மனைவியை பார்க்க வர்மா வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி பீரோவில் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூ.3 லட்சம் பணம், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கம்மல், வளையல் உள்ளிட்ட 60 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அறிவிப்பில்லாத மின்தடை மற்றும் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமலும், முதியவர்கள், குழந்தைகள் புழுக்கத்தாலும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து இன்று அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர்மணவாள நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டோர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
மேலும் உடனடியாக அப்பகுதிக்கு புதிய மின் மாற்றியை அமைப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தில் அமுதா (வயது 48) என்பவர் கிளினிக் திறந்து கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்ப்பதாக கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கிளினிக்குக்கு சென்று அமுதாவிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
ரொக்கமாக பணம் கொண்டு செல்வதற்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்- பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த காவல்சேரி அருகே அரக்கோணம் தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான பறக்கும் படையிளர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 70 இருந்தது. காரில் இருந்த செங்கல்பட்டை அடுத்த கொம்மனாஞ்சேரியை சேர்ந்த கண்ணனிடம் விசாரித்தபோது பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 70-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணம் சமர்ப்பித்து பணத்தைப்பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டத்தில் உள்ள கடற்கரை, தாம்பரம், திருவள்ளூர் ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ‘எஸ்கலேட்டர்’ என்ற நகரும் படிக்கட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று ரெயில் நிலையங்களில் ரூ.11 கோடி செலவில் 11 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
கடற்கரை ரெயில் நிலையத்தில் 5 நகரும் படிக்கட்டுகளும், தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 படிக்கட்டுகளும், திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 2 படிக்கட்டுகளும் அமைக்கப்படுகின்றன. எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
இதற்காக அடிக்கல் நாட்டுவிழா மூன்று ரெயில் நிலையங்களிலும் நடந்தது.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் எம்.பி.க்கள் டி.கே.ரங்கராஜன், நவநீதகிருஷ்ணன், சென்னை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் சுனில் சார்டே கலந்து கொண்டனர்.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் கே.என்.ராமச்சந்திரன் எம்.பி.யும், திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் வேணு கோபால் எம்.பி.யும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இப்பணிகள் 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்ற 3 பெண்களிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் லட்சுமி, வனிதா, கன்னியம்மாள் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்