search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103382"

    • பனையேறிகள் மீது மதுவிலக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும்.
    • தமிழகத்திலும் கள் உணவு பொருள் என்பதை கோடிட்டு பனைமர கள்ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பனைமர கள் இறக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு கள் மற்றும் பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், பதநீர் இறக்க உரிமை பெறும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.

    பனையேறிகள் மீது மதுவிலக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும். கேரள மாநில அரசு போல் தமிழகத்திலும்கள் உணவு பொருள் என்பதை கோடிட்டு பனைமரக் கள்ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    சென்னை:

    17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

    இதுதவிர ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் காலியாக இருந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய 8040 வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.



    இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகர போலீசார் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், காகிதம் ஆகியவற்றை மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
    வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். #SriLankaAttacks #ChennaiRailway #DGPSylendraBabu
    சென்னை:

    இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே ரெயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று சென்னையில் ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் ரெயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து தமிழக ரெயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய ரெயில் நிலையங்களில் டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன், சென்னை ரெயில்வே எஸ்.பி. ரோகித்நாதன், திருச்சி ரெயில்வே எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலையம், எழும்பூர், மதுரை, நெல்லை, கோவை ரெயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சந்தேகப்படும்படியான பொருட்கள் கிடந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SriLankaAttacks #ChennaiRailway #DGPSylendraBabu
    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #TNElections2019
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த எந்திரங்களை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களும், பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்களும் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்படும்.

    மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    இந்த 3 இடங்களிலும் ஓட்டு எண்ணும் நாள் வரை 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். முதல் அடுக்கு பாதுகாப்பில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் இருப்பார்கள். 2-வது அடுக்கு பாதுகாப்பில் ஆயுதப்படை போலீசார் பணியில் இருப்பார்கள். 3-வது அடுக்கு பாதுகாப்பில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    3 ஓட்டு எண்ணும் மையங்களிலும் ஓட்டு எண்ணப்படும் நாள் வரை தினமும் 1,000 போலீசார் சுழற்சி முறையில் காவல் பணி செய்வார்கள். ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு உதவி கமிஷனர் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் தேவநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். #LokSabhaElections2019 #TNElections2019
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியினர் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. #WorldCup2019
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ‘இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர், போட்டி அதிகாரிகள் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு உயரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு ஐ.சி.சி.யின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் பதில் அளிக்கையில், ‘இந்திய அணியினர் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.
    இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக இன்று வந்த தொலைபேசி மிரட்டலின் எதிரொலியாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #hijackcall #AirIndiahijacka #BCAS
    மும்பை:

    மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிலைய (இயக்கங்கள்) கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபரிடம் இருந்து இன்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக வந்த மிரட்டலையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை அவசரகால சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

    விமான நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் விமானச்சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, அனைத்து விமான நிலையங்களின் உள்பகுதி, விமான நிலையங்களை சுற்றியுள்ள இதர வளாகப்பகுதி, விமானங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து உரிய பரிசோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்க வேண்டும்.

    விமான நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு வரும் வாகனங்களை (கார்குண்டு தாக்குதல்களை தடுக்கும் வகையில்) தீவிரமான சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்க வேண்டும்.



    விமான நிலையத்தின் வெளி நுழைவு வாயில் தொடங்கி அத்தனை பகுதிகளிலும் அதிகப்படுத்தப்பட்ட சோதனைக்கு பின்னரே பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் சரக்குகளை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
     
    விமான நிலையங்களில் உள்ள சரக்கு முனையம், உணவு விடுதிகள், அங்காடிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வுடன் கூடிய பரிசோதனை மற்றும் பாதுகாப்பு செய்யப்பட வேண்டும்.

    கண்காணிப்பு கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அனைத்து பகுதிகளிலும் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

    மேலும். சூழ்நிலைக்கேற்ப அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுதாரிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றரிக்கை மூலம் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விமான கடத்தல் (தடுப்பு) சட்டத்தின்படி விமான கடத்தல்காரர்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும், உயிருடன் பிடிபடும் குற்றவாளிகளுக்கு விசாரணைக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #hijackcall #AirIndiahijacka #BCAS #CISFtightensecurity 
    பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதை புதுவை அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் இன்று நடந்தது.

    துறை இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    பெண் குழந்தைகள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்வதை பார்க்கிறோம். சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு வாய்ப்பளித்தால் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

    புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ஆயிரம் ஆண் வாக்காளர்களுக்கு ஆயிரத்து 50 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஆண்களை விட 20 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதன்மூலமே புதுவையில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.



    பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதை புதுவை அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

    வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் பார்க்க முடியாது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சிசுக்கொலை நடக்கிறது. குழந்தை திருமணம் நடைமுறையில் உள்ளது.

    கணவரை இழந்தால் உடன்கட்டை ஏறுவதும் தொடர்கிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லாத நிலையும், கற்பழிக்கப்படும் நிலையும் உள்ளது. இவற்றை ஒழித்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைக்கும்.

    எங்கள் அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் பெண் குழந்தை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவையில் பெண்கள் 85 சதவீதம் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். புதுவையில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர். நகர பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக இந்த பயிற்சி முகாமில் விவாதித்து புதிய கருத்துக்களை, திட்டங்களை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சமூக நலத்துறை செயலர் ஆலிஸ்வாஸ் சிறப்புரையாற்றினார். பாலின சமத்துவம், பாகுபாடு குறித்து அதேகொம் நெட்வொர்க் லலிதாம்பாள், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் வரலட்சுமி, பெண்கள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து அன்னமேரி, தயாவதி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். மகளிர் நல பிரிவு துணை இயக்குனர் வரலட்சுமி நன்றி கூறினார். #Narayanasamy

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடிகளை பெற்றோருடன் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 19). எம்.வி.எம். கல்லூரியில் பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வேடசந்தூர் அடைக்கனூரைச் சேர்ந்தவர் கோபிசரவணன் (21). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    பஸ்சில் செல்லும்போது இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே நேற்று பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    குஜிலியம்பாறை அருகே உள்ள கூம்பூரைச் சேர்ந்தவர் பெருமாள் (23). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் கூம்பூரைச் சேர்ந்த தேன்மொழி (19) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    பெற்றோருக்கு பயந்து நேற்று திருச்சியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் தனத்தனியாக வரவழைத்து சமரசம்பேசி அவர்களை சேர்ந்து வாழ அனுமதிக்கும்படி அனுப்பி வைத்தனர்.

    சபரிமலைக்கு சென்றதால் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி உள்ள இரண்டு பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்படி கேரள காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Sabarimala #SabarimalaWomen #SupremeCourt
    புதுடெல்லி:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.



    பக்தர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா ( 44), பிந்து (42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட்டனர். பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், சபரிமலை கோவில் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அவர்கள் இருவருக்கும் 24 மணி நேரமும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள காவல்துறைக்கு உத்தரவிட்டனர். #Sabarimala #SabarimalaWomen #SupremeCourt
    சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. #Sabarimala #SabarimalaVerdict
    புதுடெல்லி:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.  இதற்கு எதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.



    இதற்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா ( 44), பிந்து (42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட்டனர். பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், சபரிமலை கோவில் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு கருதி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர்.

    அந்த மனுவில், “அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், வாரத்தில் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். எங்களுக்கு எதிராக தவறான சொற்களைப் பயன்படுத்துபவர்கள், சமூக வலைதளங்களில் எங்களை விமர்சிப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில்  இன்று விசாரணைக்கு வரவுள்ளது. #Sabarimala #SabarimalaVerdict
    சிறு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் ஜி.எஸ்.டி. விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார். #TaxExemption #SmallBusiness #ArunJaitley #GST
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை செயல்படுத்தும் வகையில் பல்வேறு மறைமுக வரிகளுக்கு பதிலாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி அமலாக்கம் குறித்த ஆலோசனை மற்றும் முடிவுகள் எடுப்பதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கவுன்சிலின் 32-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், சிறு வணிகத்தை பாதுகாப்பதற்காக அவற்றின் ஜி.எஸ்.டி.க்கான விலக்கு வரம்பை இரு மடங்காக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. இது வருகிற நிதியாண்டு (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் அமலுக்கு வருகிறது.



    தற்போது ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை விற்று முதல் கொண்ட சிறு வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் இந்த வரம்பை ரூ.40 லட்சமாக அதிகரிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    வடகிழக்கு மாநிலங்களில் ரூ.10 லட்சமாக இருந்த இந்த விலக்கு வரம்பு, இனிமேல் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5,200 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    இதைப்போல ஜி.எஸ்.டி. கூட்டு திட்டத்துக்கான ஆண்டு விற்று முதல் வரம்பும் ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சிறு வணிகர்கள் தங்கள் விற்றுமுதலுக்கு ஏற்ப 1 சதவீத வரி செலுத்தினால் போதுமானது என அருண் ஜெட்லி கூறினார்.

    இதைப்போல ரூ.50 லட்சம் வரை விற்று முதல் கொண்டிருக்கும் சேவை வழங்குவோர் மற்றும் வினியோகஸ்தர்கள் (சரக்கு மற்றும் சேவை) 6 சதவீத வரியுடன் ஜி.எஸ்.டி. கூட்டு திட்டத்தை தேர்வு செய்ய முடியும் என்று கூறிய அருண் ஜெட்லி, இந்த 2 திட்டங்கள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளம் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

    இதைத்தவிர ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரி துறைகளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மந்திரிகள் கொண்ட 2 குழுக்கள் இந்த கவுன்சில் கூட்டத்தில் அமைக்கப்பட்டது. மேலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு 2 ஆண்டுகள் வரை 1 சதவீத பேரிடர் வரி வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.  #TaxExemption #SmallBusiness #ArunJaitley #GST 
    சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் வடசென்னை பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பிரச்சனை வராத அளவுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். #PongalGift
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் கடந்த 7-ந்தேதி முதல் 1000 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

    இதில் நேற்று மதியம் வரை எந்த பிரச்சனையும் இன்றி வினியோகம் நடந்தது.

    வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க சென்னை ஐகோர்ட்டு நேற்று தடை விதித்தை தொடர்ந்து ரே‌சன் கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்து விட்டது.

    பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தில் நேற்று மாலையில் ஏராளமான பேர் ரேசன் கடைக்கு சென்றனர். இன்றும் காலையிலேயே கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது.

    சென்னையில் 1278 ரே‌சன் கடைகளிலும் அதிக அளவு கூட்டம் திரண்டதால் ஒவ்வொரு ரே‌சன் கடைக்கும் 4 போலீசார் வீதம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    போலீஸ் கண்காணிப்பில் தற்போது தகுதி உள்ள நபர்களுக்கு மட்டும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் வடசென்னை பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பிரச்சனை வராத அளவுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். #PongalGift
    ×