என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103855"

    மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியானார்கள்.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் ஒரே நேரத்தில் 4 பெண்களும், 2 ஆண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாலையோரத்தில் அவர்களது உடல்கள் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்த நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இதேபோன்று டாமாவ்லிபாஸ் நகரில் 2 குழுக்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் உள்ளூர் தாதா கும்பலை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
    ஆப்பிரிக்க நாட்டில் தேவாலயத்துக்குள் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
    டாப்லோ:

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்திருக்கும் சான்மட்டேங்கா மாகாணத்தின் டாப்லோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று முன்தினம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். அப்போது சுமார் 30 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் நுழைந்தது.

    அந்த கும்பல், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது.

    மக்கள் அனைவரும் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதன் பின்னரும் அந்த மர்ம கும்பல் தனது வெறியாட்டத்தை தொடர்ந்தது. தேவாலயத்துக்கும், அதனை சுற்றி உள்ள கட்டிடங்களுக்கும் தீ வைத்துவிட்டு, அந்த கும்பல் தப்பி சென்றது.

    இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. கடந்த 5 வாரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட 3-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தானின் கவாதர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    இஸ்லாபாமாத்:

    பாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை 4.50 மணியளவில் சில பயங்கரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    அவர்கள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதுதொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், ஐந்து நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    குவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை சீனா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

    நட்சத்திர ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தம் கேட்டதாகவும், ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளதாக டான் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
    அமெரிக்காவில் தேவாலயம் அருகே மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். #Baltimore #GunFire
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தேவாலயத்துக்கு அருகே திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், கலந்துகொண்ட மக்கள் பலர் உணவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

    இதனால் பீதியடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து போலீசார், படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #Baltimore #GunFire 
    தேர்தலில் வாக்களிக்க பொதுமக்கள் திரண்டு வந்ததால், அவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaEelctions2019 #Arcot
    அரக்கோணம்:

    பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

    இந்நிலையில், அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அருகே வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் பொதுமக்கள் திரண்டு வந்ததால், அவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அருகே ராசாத்திபுரம் கீழ்விஷாரத்தில் என்ற பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    திடீரென வாக்குச்சாவடி பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது #LokSabhaEelctions2019 #Arcot 
    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். #NaxalAttack #BJP #BHimaMandavi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். எம் எல் ஏவுடன் சென்ற பாதுகாப்பு படையினர் நக்சலைட்கலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.



    இந்த தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
    #NaxalAttack #BJP #BHimaMandavi
    எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். #ArmyJawanKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக இன்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியது.  சுந்தெர்பானி செக்டாரில் நடத்தப்பட்ட அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

    பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் ராணுவ வீரர் கரம்ஜித் சிங் வீர மரணம் அடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.  #ArmyJawanKilled
    மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #MexicoCity
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் குவிண்டானா ரூ மாகாணத்தில் கரீபியன் கடலையொட்டி உள்ள கான்கன் நகர் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் திடீரென அங்கிருந்த அனைவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த கோர சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
    அமெரிக்காவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் 2 பேரை சக போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள பீகன் பர்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 5 போலீசாரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

    இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து உடன் இருந்த சக போலீசார் தாக்குதல் நடத்திய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த போலீசார் 5 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தில் நடந்த திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு பெண்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. #CelebratoryFiring
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நேற்று திருமண விழா நடைபெற்றது. அப்போது, மணமகன் வீட்டார் உற்சாக மிகுதியில் தங்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில், ராஷ்மி மற்றும் குசும் என்ற 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ராஜ்ராணி, ராஜ்குமாரி, ஷிவ்ராணி மற்றும் சோனம் ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண விழாவில் துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CelebratoryFiring
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawaninjured
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஜம்மு பகுதிக்குட்பட்ட ரஜோரி மாவட்டம்,  சுந்தர்பானி செக்டர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று காலை சுமார் பத்து மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் பதிலடி தந்தனர்.

    இதேபோல், கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச ஹிராநகர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார். 

    இப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Pakistanviolates #ceasefire #jawaninjured
    பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் நக்சலைட்டுகள் நான்கு பேருந்துகளை எரித்ததுடன், ஒருவரை சுட்டுக்கொன்று வெறியாட்டம் நடத்தினர் #BiharNaxals
    பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தேவ் என்ற இடத்தில் நேற்றிரவு நக்சலைட்டுகள் வெறியாட்டம் நடத்தினர். நான்கு பேருந்துகளை எரித்ததோடு, ஒருவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு காட்டுக்கள் தப்பி ஓடிவிட்டனர்.



    இதுகுறித்து தகவல் அறிந்த சிஆர்பிஎஃப் மற்றும் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
    ×