என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமந்தம்"

    காட்பாடியில் கர்பிணிகளுக்கு நடத்துவது போன்று பசு மாட்டிற்கு 51 வகையான சீர் வரிசைகளுடன் சீமந்தம் நடந்தது.

    காட்பாடி:

    கர்ப்பிணி பெண்களுக்கு 7 அல்லது 9 மாதத்தில் சீர் வரிசசைகளுடன் சீமந்தம் நடப்பது வழக்கம். ஆனால் காட்பாடியில் கர்பிணிகளுக்கு நடத்துவது போன்று பசு மாட்டிற்கு 51 வகையான சீர் வரிசைகளுடன் சீமந்தம் நடந்தது.

    காட்பாடி வண்டறந் தாங்கல் காலணியில் வசிப்பவர் மைக்கேல் (56). விவசாயி. இவருடைய மனைவி பெயர் சாந்தா. இவர்களுக்கு குமார் உள்பட 3 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகன்கள் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குமார் மட்டும் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.

    ‘‘ஒன் மேன் ஆர்மி’’ என்ற பெயரில் குமார் பசு ஒன்றை வளர்த்து வருகிறார். பசுவை காளை போன்று வளர்த்து பல்வேறு காளை விடும் நிகழ்ச்சியில் பங்கேற்க செய்து 50-க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற செய்துள்ளார்.

     


    குமார் குடும்பத்தில் பெண் வாரிசு இல்லாததால் பசுவையே தனது மகளாக கருதி வளர்த்து வந்தார். இதனால் சீமந்தம் நடத்தும் ஆசையில் சினையான பசுவுக்கு சீமந்த நிகழ்ச்சி நடத்த குமார் ஏற்பாடு செய்தார்.

    இதையடுத்து நிகழ்ச்சிக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். சீமந்த நிகழ்ச்சி வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. மேள தாளத்துடன் பெண்கள் 51- வகையான சீர் வரிசையுடன் ஊர்வலமாக நிகழ்ச்சிக்கு வந்தனர்.

    சீர்வரிசை பொருட்களை வைத்து கர்பிணிகளுக்கு சந்தனம் பூசுவது போன்று பசுவுக்கு சந்தனம் பூசி ஆரத்தி எடுத்து சீமந்தம் நடத்தினர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. இந்த வினோதமான நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

    எங்கள் குடும்பத்தில் பெண் வாரிசு இல்லாததால் பசுவை பெண் வாரிசாக நினைத்து சீமந்த நிகழ்ச்சி நடத்தினோம் என்றார்.

    ×