search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பியாஜியோ"

    பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா 150 சிசி மோட்டார்சைக்கிள்களை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்ட நிலையில், இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    இத்தாலியை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான பியாஜியோ இந்திய சந்தையில் 150சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த 18 மாதங்களுக்குள் பியாஜியோ அப்ரிலியா 150சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

    இந்திய சந்தைக்கென பிரத்யேக 150சிசி ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பியாஜியோ நிறுவன நிர்வாக இயக்குனர் டெய்கோ கிராஃபி தெரிவித்தார். இந்த அப்ரிலியா ஸ்கூட்டர் 150சிசி - 200சிசியில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 150சிசி மோட்டார்சைக்கிள் பற்றியும் அவர் தகவல் வழங்கி இருக்கிறார்.

    "அப்ரிலியா போன்ற பிராண்டு இருக்கும் போது மோட்டார்சைக்கிள் சந்தையில் விளையாடாமல் இருக்க முடியாது. இதன் மூலம் எங்களது மோட்டார்சைக்கிள் பிரிவில் புதிய வாகனங்களை சேர்க்க முடியும். இதனால் அப்ரிலியாவில் முதலீடு செய்வது அவசியமாகும்" என அவர் தெரிவித்தார்.



    2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் பியாஜியோ அப்ரிலியா ஆர்.எஸ். 150 மற்றும் அப்ரிலியா டியோனோ 150 போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது. இவை சந்தையில் நிலவும் போட்டியை புரிந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக டெய்கோ கிராஃபி தெரிவித்தார்.

    அப்ரிலியா ஆர்.எஸ். 150 மற்றும் அப்ரிலியா டியோனோ 150 மாடல்கள் அலுமினியம் பெரிமீட்டர் ஃபிரேமில் உருவாக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 150சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, 4-வால்வ், ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 18 பி.ஹெச்.பி. பவர் @10,000 ஆர்.பி.எம். மற்றும் 14 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
    சி.பி.எஸ். வசதி கொண்ட வெஸ்பா ZX125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Vespa



    பிரீமியம் ஸ்கூட்டர்களில் பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா ஸ்கூட்டர்கள் முதலிடத்தில் இருக்கின்றன. இந்நிறுவனத் தயாரிப்புகள் மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் விலை அதிகமாகத்தான் இருக்கும். ஆனாலும் இதன் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் இதை விரும்பி வாங்குவோர் அதிகம்.

    அழகிய தோற்றம், குறைவான எடை, மிகச் சிறந்த செயல்திறன் ஆகியன இதை பலரும் விரும்பக் காரணமாக உள்ளது. இப்போது இந்நிறுவனம் தனது LX125 மாடல் ஸ்கூட்டர்களை சி.பி.எஸ். (கோம்பி பிரேக்கிங் சிஸ்டம்) வசதி கொண்டவையாக அறிமுகம் செய்துள்ளது. இதனால் இந்த மாடலுக்கு ZX125 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் வெஸ்பா ZX125 விலை ரூ.78,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத் தயாரிப்புகளில் இது விலை குறைந்த மாடலாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் VXL125 மாடலில் சி.பி.எஸ். வசதி கொண்டதன் விலை ரூ.92,372 ஆக உள்ளது. இதைவிட சி.பி.எஸ். ZX. மாடல் விலை ரூ.95,668 ஆகும். பிரீமியம் மாடலான SXL.150 ஏ.பி.எஸ். மாடல் விலை ரூ.1.07 லட்சமாகும்.



    ZX மாடலில் இரண்டு சக்கரங்களுக்கும் டிரம் பிரேக் வசதி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. முன்பகுதியில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும், பின்புறம் மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.
    இந்த ஸ்கூட்டரில் 125 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 வால்வுகளைக் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜின் ஆகும். 

    இந்த என்ஜின் 96 பி.ஹெச்.பி. திறனை 7,250 ஆர்.பி.எம். வேகத்திலும், 9.9 என்.எம். டார்க் @6,250 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பிரிவில் (125 சி.சி.) சுசுகி அக்சஸ் 125 (ரூ.61,858), சுசுகி பர்க்மன் ஸ்டிரீட் (ரூ.70,878), ஹோண்டா கிரேசியா (ரூ.66,231), டி.வி.எஸ். என்டார்க் 125 (ரூ.65,010) ஆகியவற்றுக்குப் போட்டியாக அமைகிறது.
    ×