என் மலர்
நீங்கள் தேடியது "உல்லாசத்துக்கு அழைப்பு"
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரியில் பஸ் நிலையத்தையொட்டி பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இன்று பகல் 12 மணி அளவில் இந்த நிறுவனத்திற்கு வாலிபர் ஒருவர் சென்றார்.
அந்த வாலிபருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் அங்கு பணிபுரிந்த பெண் ஒருவரின் அருகில் சென்றார். அந்த ஊழியரிடம் சிறிது நேரம் பேச்சு கொடுத்தார்.
சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த பெண், வாலிபரை திட்டியபடி அவரை பிடிக்க நிறுவனத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார்.
இதை கண்டதும் அந்த வாலிபர், வடசேரி பஸ் நிலைய பகுதிக்குள் ஓடினார். அந்த பெண்ணும் விடாமல் துரத்தினார்.
ஒரு வாலிபரை பெண் ஒருவர் துரத்தி செல்வதை கண்டதும் பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த வாலிபரை திருடன் என நினைத்து மடக்கி பிடித்தனர்.
வாலிபர் பிடிபட்டதும், அந்த பெண்ணும் அங்கு வந்து விட்டார். அவர் அந்த வாலிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பயணிகளிடம் கூறினார். மேலும் அவர் பணம் தருவதாக கூறி தன்னை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் கூறி அழுதார்.
பெண் கூறியதை கேட்டதும் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். பிடிபட்ட வாலிபருக்கு அவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் இச்சம்பவம் பற்றி அவர்கள் வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்ததும், அவர்களிடம் வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக வடசேரி பஸ் நிலையத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.