என் மலர்
முகப்பு » கோட்டேகோடா
நீங்கள் தேடியது "கோட்டேகோடா"
ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜினாமாவையடுத்து ராணுவ முன்னாள் தளபதி கோட்டேகோடா அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். #SriLankablasts
கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர். உளவுத்துறை எச்சரிக்கைகளை அரசு சரியான முறையில் கையாளாததால் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய உயிரிழப்புகளுக்காக அந்நாட்டு மக்களிடம் அதிபர் மைத்ரிபாலா சிறிசேன பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
எச்சரிக்கை கிடைத்தும் உரிய முறையில் செயலாற்ற தவறிய பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) ஆகியோரை உடனடியாக பதவி விலகுமாறு அதிபர் வலியுறுத்தினார். இதைதொடர்ந்து அவர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அதைதொடர்ந்து, ராணுவ முன்னாள் தளபதி எஸ்.ஹெச்.எஸ். கோட்டேகோடா-வை பாதுகாப்புத்துறை செயலாளராக நியமனம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேன உத்தரவிட்டுள்ளார். #SriLankanpresident #SriLankablasts #SriLankadefensesecretary #Sirisenaappointed #SHSKottegoda

இந்நிலையில், காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சி.டி. விக்கிரமத்தினே-வை தற்காலிக இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இன்று காலை அதிபர் சிறிசேன அறிவித்தார்.

×
X