என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அருண்ஜெட்லி"
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா நிறுத்தப்படுவார் என்று கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டார். இதனால் பிரியங்கா போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வாரணாசியில் பிரியங்கா போட்டியிடவில்லை என்ற காங்கிரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது.
பிரியங்காவின் பழங்கதைகள் அழிக்கப்பட்டது. வெற்றிகரமான ஒரு அரசியல் தலைவருக்கு எதிராக புதிதாக அரசியலுக்கு வந்துள்ள வாரிசின் தலை எழுத்தை வாரணாசி எழுதி புதிய இந்தியா உருவாக வாய்ப்பு ஏற்படும் என நம்பினேன். அவர்கள் நாளுக்கு 5 முறை சொல்லிக்கொள்ளும் புதிய இந்தியாவை அவர்களின் படைகள் ஈர்க்க தவறிவிட்டது. அதனால் புதிய இந்தியா அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அனுபவமில்லாத வாரிசுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #ArunJaitley
இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பீர், தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையையும் வென்று கொடுத்தார்.
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாகவும், பாஜகவில் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் பெருமைப்படுவதாகவும் காம்பீர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் காம்பீர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் அடுத்த வேட்பாளர் பட்டியலில் காம்பீர் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #GautamGambhir #GambhirJoinsBJP #GambhirInBJP
நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா கட்சி தலைமை முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலுக்கும் இன்னும் 100 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது கட்சியினருக்கு கவலையை அளித்து உள்ளது.
கோவா முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா மூத்த தலைவருமான மனோகர் பாரிக்கர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் கோவாவில் நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதாக புகார் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே சிறுநீரக நோயால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்று உள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று இருப்பது ஆட்சியினருக்கும் கட்சியினருக்கும் இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்பது தெரியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நுரையீரல் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நேற்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில்‘ தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழு மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர்(அமைப்பு) ராம்லால் காய்ச்சல் காரணமாக நொய்டாவில் உள்ள கைலாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தகவல் தொடர்பு உறுப்பினர் கெச்சாண்டு சர்மா வழக்கமான உடல் பரிசோதனைக்காக கைலாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில்‘ வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்து உள்ளேன். யாரும் கவலைப்படதேவையில்லை. விரைவில் நான் வீடு திரும்புவேன்‘ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று(வெள்ளிக்கிழமை) பார்வையிடுவார் என தெரிகிறது. #BJP
மத்திய அரசுக்கும், நாட்டின் முதன்மை வங்கியான ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு காணப்படுகிறது. சில திட்டங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கவேண்டும் என்றும், தன்னிடம் இருக்கும் நிதியை சற்று குறைத்துக் கொள்ளவேண்டும் எனவும் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வற்புறுத்தி வருகிறது.
இதைத்தொடர்ந்து அண்மையில் மும்பையில் நடந்த ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் மத்திய அரசின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க நிபுணர் குழுவை நியமிக்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்குவதை எளிமையாக்கிடவும் ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு உதவி செய்யும் விதமாக அமைந்திடவேண்டும். மத்திய அரசுடன் மோதல் போக்கை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது. ஏனெனில் சில துறைகளுக்கு நிதி அதிகமாக தேவைப்படுகிறது. எனவேதான் அனைத்து வித ஆலோசனைகளின் வாயிலாகவும் இதை உறுதி செய்து ரிசர்வ் வங்கியின் கவர்னரை செயலாற்றுவதற்கு தூண்டிவிட்டு வருகிறோம்.
ரிசர்வ் வங்கி தன்னிடம் வைத்துள்ள நிதியின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு ஒதுக்கி நாட்டின் வறுமையை ஒழிப்பதற்கு உதவிடவேண்டும். எனவே தன்னிடம் எவ்வளவு நிதி இருப்பை கைவசம் வைத்துக் கொள்ளலாம் என்பதை ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கவேண்டிய தருணம் இதுவாகும்.
தன்னிடம் எப்போதுமே கையில் அதிக நிதி இருக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி கருதுவது தவறானது. மக்கள் கஷ்டப்படும் இக்கட்டான நேரங்களில் நீங்கள் (ரிசர்வ் வங்கி) கையில் அதிகமாக பணம் வைத்திருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்.
ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு ஒரு போதும் அதன் விதிகளை மீறியதில்லை. வரம்பை தாண்டிச் செல்வதும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். #RBI #ArunJaitley
ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் பற்றிய குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.
அப்போது நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த பூமி ஆகும். ஈரோட்டுக்கு வந்த போது பெரியாரின் சாதனைகளும் அவரின் அருமை பெருமைகள் என் கண் முன்னே நிற்கிறது. தற்போது பெரியாரை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் 95 வயதிலும் அவர் செய்த சாதனைகள் அதிகம்.
தமிழர்கள் பல துறைகளில் இந்தியா முழுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பிறந்த காரணத்தினால்தான் அவர் அர்ப்பணிப்புகளை தவறாக சொல்லி வருகின்றனர்.
பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்தப் பாதையிலிருந்து விலகியதால் தான் தற்போது தவறுகளும் ஏற்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் மக்களை வழிநடத்தக்கூடிய திறன் உள்ளது.
இந்த மண்ணில் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இனியும் இதை வளரவிடக்கூடாது. திருமுருகன் காந்தி போன்றவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆட்சியாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர். இதனை ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குகின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கை கூலிகளாக உள்ளனர். இது வெட்கக்கேடான விஷயம்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இனம் கண்டு தக்க பாடம் வருங்காலத்தில் புகட்ட வேண்டும்.
இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். #MansoorAliKhan #ArunJaitley
நாடு முழுவதும் 25 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர். தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பணியாற்றி வரும் இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்மையில் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பள உயர்வை நிதிமந்திரி அருண்ஜெட்லி நேற்று அறிவித்தார். அதன்படி அங்கன்வாடி பணியாளர்களின் மாதச் சம்பளம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. சிறிய அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.2,250-ல் இருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கப்பட்டது. அங்கன்வாடிகளில் உதவியாளர்களாக வேலை பார்ப்போருக்கு மாதச் சம்பளம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,250 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த இருவித அங்கன்வாடிகளிலும் சிறப்பாக பணியாற்றுவோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.500 மற்றும் ரூ.250 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதுபற்றி அருண்ஜெட்லி கூறும்போது, “நாடு முழுவதும் அங்கன்வாடிகளில் பணியாற்றும் 25 லட்சம்பேர் பயன்அடைவார்கள். அவர்களுடைய குறைகள் களையப் படும் விதமாக இந்த சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் நெருக்கடி உள்ளபோதிலும் அதை கருத்தில் கொள்ளாமல் இந்த 50 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது” என்றார். #AnganwatiWorkers #ArunJaitley
புதுடெல்லி:
இந்தியாவில் இதற்கு முன்பு உற்பத்தி பொருள் மற்றும் விற்பனை செய்யும் பொருட்களுக்கு மத்திய- மாநில அரசுகள் தனித்தனியாக வரி விகிதங்களை வைத்திருந்தன.
அதை நாடு முழுவதும் ஒரே வரியாக்கி சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரி முறை கொண்டு வரப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இன்றுடன் இந்த வரி முறை அமலுக்கு வந்து ஒரு ஆண்டு ஆகிறது.
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட போது, 4 விகிதங்களில் வரி முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி 28 சதவீதம், 18 சதவீதம், 12 சதவீதம், 5 சதவீதம் என 4 அளவீடுகளில் வரி விதிக்கப்பட்டது.
இவற்றில் சில பொருட்களுக்கு வரிகளை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதால் சுமார் 320 பொருட்களுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன.
ஜி.எஸ்.டி. மூலம் ஒரு ஆண்டில் ரூ.12 லட்சம் கோடி வருமானம் வரும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தனர். ஆனால், அதை விட அதிகமாகவே வருவாய் வந்துள்ளது. அதாவது ஒரு ஆண்டு முடிவில் ரூ.13 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது.
எதிர்பார்த்ததை விட ரூ.1 லட்சம் கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ரூ.94 ஆயிரத்து 63 கோடியும், ஆகஸ்டு மாதம் ரூ.93 ஆயிரத்து 590 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.93 ஆயிரத்து 29 கோடியும், அக்டோபர் மாதம் ரூ.95 ஆயிரத்து 132 கோடியும், நவம்பர் மாதம் ரூ.85 ஆயிரத்து 931 கோடியும், டிசம்பர் மாதம் ரூ.83 ஆயிரத்து 716 கோடியும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.88 ஆயிரத்து 929 கோடியும், பிப்ரவரி மாதம் ரூ.88 ஆயிரத்து 47 கோடியும், மார்ச் மாதம் ரூ.89 ஆயிரத்து 264 கோடியும், ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடியும், மே மாதம் ரூ.94 ஆயிரத்து 16 கோடியும், வசூல் ஆகி உள்ளன.
அதாவது ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்ததை விட அதிக வரி வசூல் கிடைத்துள்ளது.
அதிக வரி கிடைத்திருப்பதால் அது மக்களுக்கு பயனடையும் வகையில் வரியை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது சம்பந்தமாக மத்திய நிதித்துறை பொறுப்பு மந்திரியாக இருக்கும் பியூஸ் கோயல் கூறும் போது, வரி வருவாய் அதிகரிக்கும் போது, அந்த வருவாய் நுகர்வோருக்கு சென்றடையும் வகையில் வழி ஏற்படுத்தப்படும்.
அதிக வருவாய் கிடைக்கும் போது மத்திய பட்ஜெட்டில் பற்றாக்குறை குறையும். எனவே, அவை அடிப்படை கட்டுமானங்களுக்கு செலவிடப்படும். மேலும் வரி வருவாய் விகிதங்களை குறைப்பதற்கும் அது வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.
இப்போது வரி வருவாய் எதிர்பார்த்ததை விட ரூ.1 லட்சம் கோடி அதிகமாக வந்திருப்பதால் வரியை குறைக்க உள்ளனர்.
குறிப்பாக 28 சதவீதம் வரை வரி உள்ள பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமான பொருட்களான சிமெண்டு, பெயிண்டு உள்ளிட்டவைகளுக்கு வரி குறைப்பு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இன்னும் 11 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, மக்களை கவரும் வகையில் இந்த வரி குறைப்பு இருக்கும்.
விரைவில் நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடை பெறும். அதில் எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு செய்வது என முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி சில பொருட்களுக்கு வரி குறைப்பு செய்வது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி இருந்தார். இப்போது வரி வருவாய் அதிகமாக இருப்பதால் அதற்கான சாத்தியம் உருவாகி உள்ளது.
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியமும் ஜி.எஸ்.டி. வரிகளை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
குறிப்பாக கார், புகையிலை பொருள், குளிர்பானங்கள் உள்ளிட்ட லக்சரி பொருட்களுக்கு 28 சதவீதம் வரி இருப்பதை சற்று குறைக்க வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.
சீரான வரி விகிதம் இவற்றில் இருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை சொல்லி இருக்கிறார். எனவே, அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ள பல பொருட்களின் வரி குறைய வாய்ப்பு உள்ளது.
மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறும்போது, மக்கள் எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்கு ரசீது கேட்டு வாங்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் ஏமாற்ற முடியாது. அதே நேரத்தில் வருவாய் அதிகரித்து அதன் மூலம் மக்களுக்கு வரி குறைப்பு செய்ய முடியும் என்று கூறினார்.
ஜி.எஸ்.டி. வரி வருவாய் அதிகரித்து இருப்பது குறித்து ஜி.எஸ்.டி. சேர்மன் அஜய்பூஷன் பாண்டே கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரி திட்டம் செயல்பாடுகள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்து உள்ளது. அதன் நடைமுறைகள் சிறப்பாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் அதிகரித்து வருகிறது.
மாதத்துக்கு சராசரியாக ரூ.90 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் 1 கோடி கணக்கு தாக்கல்கள் நடைபெறுகின்றன. இதுவரை 12 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 380 கோடி கணக்கு வழக்குகள் அதில் இடம்பெற்றுள்ளன.
ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கலில் இருந்த பிழைகள் இப்போது குறைந்து வருகிறது.
இதுவரை 1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 693 பேர் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் பட்டியலில் சேர்ந்து பதிவு செய்துள்ளனர். இது, ஏற்கனவே வரி செலுத்துவோர் எண்ணிக்கையை விட 48 லட்சத்து 38 ஆயிரத்து 726 அதிகமாகும்.
இதற்கு முன்பு 35 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒவ்வொரு முறையான வரி விகிதங்கள் இருந்தன. மாநிலத்துக்கு மாநிலம் மதிப்பு கூட்டு வரி மாறுபட்டு இருந்தது.
இப்போது ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே விகித வரி முறை வந்துள்ளது. மேலும் இதற்கு முன்பு 37 வகையான கணக்கு வழக்கு பாரங்களை தாக்கல் செய்ய வேண்டி இருந்தது. ஜி.எஸ்.டி. மூலம் அவற்றையும் எளிமையாக்கி ஒரே பாரத்தை தாக்கல் செய்யும் விகிதத்தில் கொண்டு வந்துள்ளோம்.
இதில், இன்னும் எளிமையை கொண்டு வரப்போகிறோம். வருமான வரி தாக்கலுக்கு எவ்வாறு ஒரே பாரத்தில் எல்லா தகவல்களும் இருக்கின்றனவோ அதேபோல் ஜி.எஸ்.டி.யிலும் ஒரே பாரத்தை தாக்கல் செய்யும் வகையில் எளிமைப்படுத்த உள்ளோம்.
மேலும் இந்த வரிமுறைகள் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் அது, வியாபாரிகளுக்கு எளிமையாக அமைகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மேலும் இது சம்பந்தமாக விரிவாக ஆலோசனை நடத்தி இன்னும் எளிமைப்படுத்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்படும்.
ஜி.எஸ்.டி. வரி முறைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுவதால் இதில், வரி ஏய்ப்பு செய்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. எங்கேனும் தவறுகள் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, யாரும் ஏமாற்ற முடியாது.
சிறு வியாபாரிகளும் எளிமையாக கணக்கை தாக்கல் செய்யும் வகையில் எல்லா வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு விளக்கங்களும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் புதிய சாப்ட்வேர்களும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #GST #GSTDay
தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டின் குடிமக்கள் அனைவரும் நேர்மையாக தங்களது வரிகளை சரியாக செலுத்தினால் பெட்ரோலிய பொருட்களின் மீதான அதிக வரி விதிப்பை சார்ந்திருக்கவேண்டி இருக்காது.
சம்பளதாரர்கள் வரிகளை முறையாக செலுத்தி வரும் நிலையில் மற்றவர்களும் தங்களுடைய வரியை செலுத்துவதில் முன்னேற்றம் காணவேண்டும். எனவே அரசியல் தலைவர்கள், கருத்தாளர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் எண்ணெய் அல்லாத மற்ற வகையினங்களில் வரி ஏய்ப்பு முற்றிலுமாக நிறுத்தப்படவேண்டும்.
நேர்மையாக வரி செலுத்துவோரின் கவலை வரிகளில் தங்களுடைய பங்கை செலுத்துவதுடன், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் சேர்த்து இழப்பீடு தருவதுதான்.
எனவே, குடிமக்கள் அனைத்து வகையினங்களுக்கும் வரியை செலுத்தாத நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை. மாறாக இவற்றின் விலையை குறைத்தால் அது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கடந்த 4 ஆண்டுகளில் வரியில் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து 11.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இதில் பெட்ரோலிய பொருட்களின் வரி பங்களிப்பு மட்டும் 0.72 சதவீதம் ஆகும்.
எண்ணெய் அல்லாத வரிகள் மீதான உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 2017-18-ல் 9.8 சதவீதமாக இருந்தது. இது 2007-2008-ம் ஆண்டுக்கு இடையேயான கால கட்டத்தை ஒப்பிடும்போது அதிகம் ஆகும். மோடி அரசு நிதி விஷயத்தில் முன்ஜாக்கிரதை அல்லது விவேகத்தை வலுவாக வளர்த்து இருக்கிறது. நிதியளவில் ஒழுக்கம் இல்லாமல் போனால் கடன்பெறுவதுதான் அதிகரிக்கும். எனவே நிதியளவை புத்திசாலித்தமான, வலுவான கையாளும் மத்திய அரசால்தான் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க இயலும்.
அரசின் உத்தேசத்தின்படி பெட்ரோலிய பொருட்களின் மீது உற்பத்தி வரியில் குறைக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வருமானத்தை இழக்கச் செய்துவிடும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை மறைமுகமாக விமர்சித்த அருண்ஜெட்லி, “இது பொறியில் சிக்கவைக்கும் யோசனை. எனக்கு முன்னோடியே(ப.சிதம்பரம்) இதைச் செய்ய முன்வரவில்லை என்பதே இதில் கசப்பான உண்மை” என்றும் அவர் குறிப்பிட்டார். #ArunJaitley #PetrolDiesel #Tamilnews
புதுடெல்லி:
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்ட திடுக்கிடும் தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இத்தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய மந்திரி அருண்ஜெட்லி அரசியல் கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது வலை தள பக்கத்தில் கூறிதாவது:-
கடந்த சில நாட்களாக மாவோயிஸ்டு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதை உணர முடிகிறது. அந்த அமைப்பின் ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் பயங்கரவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது தேசத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான ஆயுதமாக மாவோயிஸ்டு பயங்கரவாதிகளை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சரியானதல்ல.
ஆட்கொல்லி புலியின் மீது சவாரி செய்வது ஆபத்தாகத்தான் முடியும் என்பதை அக்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை வேரறுப்பது குறித்து அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இது மிகத் தீவிரமான விஷயம்.
இவ்வாறு அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். #BJP #ArunJaitley
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்