search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணமங்கலம்"

    கண்ணமங்கலம் அருகே நிலத்தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    ஆரணி அடுத்த தச்சூரை சேர்ந்தவர் சந்திரபாலன் (வயது 50). இவரது தம்பி தனபாலன் இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சந்திரபாலன் கடந்த 2016-ம் ஆண்டு தனபாலனை தம்பி என்றும் பார்க்காமல் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    ஆரணி போலீசார் சந்திரபாலனை கைது செய்தனர். இதன் வழக்கு விசாரணை ஆரணி கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரபாலன் ஜாமீனில் வெளிவந்தார்.

    இந்நிலையில் சந்திரபாலன் அம்மாபாளையம் அருகே உள்ள கல்லேரி என்ற இடத்தில் வி‌ஷம்குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் வந்து பரிசோதனை செய்த போது சந்திரபாலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம் அருகே பூட்டிய வீட்டில் 20 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கேட் ரேணுகாம்பாள் நகரை சேர்ந்தவர் அமிர்தம்மாள் (வயது 70). நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு, ஊட்டியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார்.

    இன்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். வீட்டின் பின்பக்க கிரில் கேட் உடைந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அமிர்தம்மாள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 சவரன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    கண்ணமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ஆரணி டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    யாருமில்லாத வீடுகளை நோட்டமிட்டு திருடும் மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கண்ணமங்கலம் அருகே லாரி மோதி தனியார் பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள நஞ்சுகொண்டாபுரம் நாகநதி கொல்லமேட்டில் வசிக்கும் தனியார் பஸ் கண்டக்டர் தமிழரசன் (35). இவரது மனைவி தமிழரசி (27) இவர்களுக்கு ரீதீஷ் என்ற மூன்றரை வயது மகன், யுகேஷ் என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளது. இதில் ரீத்தீஷ் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறான்.

    நேற்று மாலை தமிழரசன், தனது மகன் ரீதீஷை பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வழியில் கல்பட்டு காளியம்மன் கோயில் சாலையில் பார்வைக் குறைவான வளைவில் சென்றபோது, எதிரே கல்பட்டு மலையடிவாரத்தில் இருந்து சூளைமண் எடுத்துச் சென்ற டிப்பர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தமிழரசன் உயிரிழந்தார்.

    மகன் ரீத்தீஷ் லேசான காயங்களுடன் உயிர்தப்பினான் இந்த விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் சாலை மிகவும் குறுகலாக உள்ள இடத்தில் வேகமாக லாரி வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என மறியல் செய்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தபின்னர், பிணத்தை பிரேதப் பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலத்தில் பள்ளிக்கு செல்லவதாக கூறிவிட்டு சென்ற மாணவன் சென்னையில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    கண்ணமங்கலம்:

    சென்னை அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவன், அய்யப்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரது தந்தை கண்ணமங்கலம் துரிஞ்சிக்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைக்க அங்கு அழைத்து வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த ஜூன் மாதம் அவனை சேர்த்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சந்தவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் மாணவனை தேடி வந்தனர். அப்போது சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் மாணவன் தங்கியிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், அங்கு சென்று மாணவனை மீட்டு வந்தனர். போலீஸ் விசாரணையில், சென்னையில் வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க சென்றபோது கதவு பூட்டி இருந்ததால் நண்பர் வீட்டில் தங்கி இருந்ததாக மாணவன் கூறினான். பின்னர் மாணவனை, அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். #tamilnews
    ×