என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » slug 121307
நீங்கள் தேடியது "slug 121307"
மலையாள உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலை வைத்து, நடிகர் பிரித்விராஜ் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். #Mohanlal #Prithviraj
இயக்குநர் கே.வி.ஆனந்துடன் நடிகர் சூர்யா மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைத்து ‘காப்பான்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். ஆர்யா, மோகன்லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.
பிரதமரைப் பாதுகாக்கும் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். நியூயார்க், பிரேசில், டெல்லி, சண்டிகர், ஐதராபாத் எனப் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடித்துள்ள லூசிபர் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கி உள்ளார். மொழி, ராவணா உள்பட பல படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். இந்த படத்தில் மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201903141931395333_1_mohanlal-1._L_styvpf.jpg)
அரசியல் திரில்லர் கதைக்களம் கொண்ட இந்தப் படம் வர்த்தக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 28-ந்தேதியன்று வெளியாக உள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் நடிகர் பிரித்விராஜ் வீட்டில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பெரிய பாத்திரத்தின் மூலம் அவரது தாயார் மீட்கப்பட்டுள்ளார். #KeralaFloods #KeralaRain #Prithviraj
கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. மாநிலமே வெள்ளத்தால் சூழ்ந்து இதுவரை 97-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
தமிழில் மொழி, காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரித்விராஜ் வீடு கொச்சியில் உள்ளது. கொச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் நீர் புகுந்து உள்ளது. பிரித்விராஜின் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.
அவர் வீடு வெள்ளத்தில் மிதக்கும் புகைப்படங்கள் வெளியானது. பிரித்விராஜின் தாயாரும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை 4 பேர் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். அவரை பெரிய பாத்திரத்தில் அமர வைத்து வீட்டில் இருந்து வெளியே தூக்கி வந்துள்ளனர். அந்த படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201808171024399188_1_Kerala-Rain-Prithviraj-Amma1._L_styvpf.jpg)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மலையாளம், தமிழ் திரையுலக நடிகர்கள் நிவாரண உதவி அளித்துள்ளனர். கேரள மக்களுக்கு உதவி செய்யுமாறு மலையாள நடிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அவசர உதவி எண்களையும் வெளியிட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு டீ, பிஸ்கட், ரொட்டி, போர்வை, நாப்கின், குழந்தைகள் அணியும் உடை இருந்தால் அளிக்குமாறு நடிகர் துல்கர் சல்மான் முகநூலில் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #Prithviraj
தனுஷ் ஜோடியாக மரியான படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருந்த பார்வதி, பின்னர் உதட்டு முத்தக்காட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார். #Parvathy #MyStory
பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி. இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
மலையாளத்தில் ‘என்னு நின்டே மொய்தீன்’ பட வெற்றிக்கு பிறகு பார்வதி - பிரித்விராஜ் ஜோடி ‘மை ஸ்டோரி’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
ரோஷிணி தினகர் இயக்கியிருக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் `மிஸி மிஸி' என தொடங்கும் பாடல் காட்சியில், பார்வதியும், பிருத்விராஜூம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார்கள்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807021450072469_1_Parvati-Prithviraj2._L_styvpf.jpg)
தமிழில் ‘மரியான்’ படத்திற்குப் பிறகு, உதட்டு முத்தத்திற்கு எதிராக கருத்துக்களைக் கூறிவந்த பார்வதி, மீண்டும் முத்தக்காட்சியில் நடித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். #Parvathy #MyStory #PrithviRaj
மிஸி மிஸி பாடலை பார்க்க:
×
X